ஒராங்குட்டான்
From Wikipedia, the free encyclopedia
ஒராங்குட்டான் அல்லது ஓராங் ஊத்தான் (Orang Hutan) என்பது மனிதக் குரங்குகளில் உள்ள ஓர் ஆசிய இனம் ஆகும். இவற்றின் உடல் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும். மற்ற மனிதக் குரங்குகளுடன் ஒப்பிடுகையில் நீண்ட கைகளைக் கொண்டிருக்கும்.
ஓராங் ஊத்தான் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | Hominidae |
துணைக்குடும்பம்: | Ponginae Elliot, 1912 |
பேரினம்: | Pongo Lacépède, 1799 |
மாதிரி இனம் | |
Simia pygmaeus லின்னேயசு, 1760 | |
இனம் | |
Pongo pygmaeus | |
ஓராங் ஊத்தான் பரவல் |
இவை உயிரினங்களில் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் உள்ள ஓரினமாகும். இவை கிப்பன்களைப் போல நேராக நிமிர்ந்து நடப்பவை. இவற்றின் உடல்சார்ந்த தோற்றம், நடத்தை சார்ந்த செயற்பாடுகள், மற்றும் தொல்லுயிர் எச்ச ஆய்வுகள் மூலமாக, இவை மனிதருக்கு மிக நெருக்கமாக இருப்பதைக் காட்டுகின்றன.
இந்த இனம் தோன்றிய இடம் இந்தோனேசியா, மலேசியாவாக இருந்த போதிலும், இதன் தற்போதைய வாழிடம் சுமாத்திரா, போர்னியோப் பகுதிகளில் உள்ள மழைக்காடுகள் ஆகும். ஆனாலும், ஜாவா, தீபகற்ப மலேசியா, வியட்நாம், சீனா போன்ற நாடுகளில் இவற்றின் தொல்லுயிர் எச்சங்கள் கிடைக்கப்பட்டு உள்ளன.