ஐயப்பன்
கேரளாத்திலும் தமிழ்நாட்டிலும் பரவலாக வழிபடப்படும் ஒரு இந்து தெய்வம் / From Wikipedia, the free encyclopedia
ஐயப்பன் (Ayyappan) அல்லது சாஸ்தா அல்லது தர்மசாஸ்தா அல்லது மணிகண்டன் என்பவர் இந்து கடவுள்களில் ஒருவர். ஐயப்பன் வழிபாடு தென்னிந்தியாவில் முதன்மை பெறுகிறது. ஐயப்பனின் முக்கிய வழிபாட்டுத் தலமாக சபரிமலை விளங்குகிறது. ஐயப்பன் மோகினி (விஷ்ணு) மற்றும் சிவன் ஆகியோரின் மகனாகவும் அன்னை பார்வதியின் வளர்ப்பு மகனாகவும் கருதப்படுகிறார்.
விரைவான உண்மைகள் ஐயப்பன், அதிபதி ...
ஐயப்பன் | |
---|---|
ஐயப்பன் | |
அதிபதி | வளத்தின் கடவுள் |
எழுத்து முறை | அய்யப்பன் |
வகை | இந்து கடவுள் |
இடம் | சபரிமலை |
மந்திரம் | சுவாமியே சரணம் ஐயப்பா |
ஆயுதம் | வில்–அம்பு, வாள் |
பெற்றோர்கள் | சிவன், மோகினி (விஷ்ணுவின் அவதாரம்) |
வாகனம் | புலி, யானை, குதிரை |
விழாக்கள் | மண்டல பூசை, மகர விளக்கு |
மூடு
ஐயப்பன் வில் மற்றும் அம்புகளை ஏந்தியபடி, புலியின் அருகில் அல்லது சவாரி செய்யும் ஒரு இளைஞனாக சித்தரிக்கப்படுகிறார். ஐய்யப்பனின் பெரும்பாலான உருவப்படங்கள் அவரை யோகா பட்டாசனத்தில், அமர்ந்த நிலையில் சித்தரிக்கின்றன.