![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/51/IBM_logo.svg/langta-640px-IBM_logo.svg.png&w=640&q=50)
ஐபிஎம்
From Wikipedia, the free encyclopedia
ஐபிஎம் (IBM) என்றழைக்கப்படும் "இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் கார்ப்பரேஷன்" (International Business Machines Corporation) அர்மாங்க் (நியூயார்க் மாநிலம், ஐக்கிய அமெரிக்க நாடுகள்) நகரை தலைமையிடமாகக்கொண்ட ஒரு பன்னாட்டு கணினியியல் நிறுவனம்.இந்த நிறுவனம்கணிப்பொறிக்கு தேவையான வன்பொருட்கள் மற்றும் மென்பொருட்கள் ஆகியவற்றை தயாரித்து விற்பனை செய்தல் மற்றும் மெயின் ஃபிரேம் கணிப்பொறிகள் முதல் நானோ தொழில்நுட்பம் வரையிலான பல்வேறு அறிவியல் துறைகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்,தொழில்நுட்ப ஆலோசனைகள்,ஆராய்ச்சி போன்ற துறைகளில் சேவையளித்து வருகின்றது.டிசம்பர் 2011 ஆம் வருட நிலவரப்படி ஐபிஎம் நிறுவனம் சந்தை முதலீட்டு மதிப்பில் மூன்றாவது பெரிய நிறுவனம் ஆகும்.
![]() | |
வகை | பொது |
---|---|
நிறுவுகை | என்டிகொட்ட், நியூ யார்க் ஜூன் 16, 1911 |
நிறுவனர்(கள்) | தாமஸ் ஜே. வாட்சன் |
தலைமையகம் | அர்மொன்க், நியூ யார்க், ஐக்கிய அமெரிக்கா |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
முதன்மை நபர்கள் | சாமுவெல் ஜ. பால்மிசானொ |
தொழில்துறை | கணினி தொழில்நுட்பம் |
வருமானம் | ![]() |
இயக்க வருமானம் | ![]() |
நிகர வருமானம் | ![]() |
மொத்தச் சொத்துகள் | ![]() |
மொத்த பங்குத்தொகை | ![]() |
பணியாளர் | 426,751 (2010)[1] |
இணையத்தளம் | IBM.com |
இந்நிறுவனம் 1911 ஆம் வருடம் கம்ப்யுடிங் டேபுலேட்டிங் ரெகார்டிங் கம்பெனி (CTR நிறுவனம்), என்ற பெயரில் நிறுவப்பட்டது.அப்போது இயங்கிவந்த டேபுலேட்டிங் ரெக்கார்டிங் கம்பெனி,இன்டர்நேஷனல் டைம் ரெக்கார்டிங் கம்பெனி, கம்ப்யூட்டிங் ஸ்கேல் கார்ப்பரேஷன் என்ற மூன்று நிறுவனங்களை ஒன்றிணைத்து இந்த நிறுவனம் பிறந்தது. 1924 ஆம் ஆண்டு தனது பெயரை இன்டர்நேஷனல் பிஸினஸ் மெஷின்ஸ் ஐபிஎம் கார்பொரேஷன் என்ற பெயரில் மாற்றியமைத்தது.இந்நிறுவனத்தின் தனிப்பட்ட கலாச்சாரமும் விற்பனை அடையாளமும் பிக் புளு (BIG BLUE) என்னும் புனைபெயரால் குறிப்பிடப்பட்டது. 2012 ஆம் ஆண்டில் பணியாளர்களின் எண்ணிக்கையில் அமெரிக்க ஐக்கிய நாடுகளின் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக பார்ச்சூன் இதழால் தரவரிசைப்படுத்தப்பட்டது. அதே இதழ் சந்தை முதலீட்டு மதிப்பில் நான்காவது மிகப்பெரிய நிறுவனமாகவும் அதிக லாபகரமான நிறுவனங்களில் ஒன்பதாவது மிகப்பெரிய நிறுவனமாகவும் வருமானத்தில் பத்தொன்பதாவது மிகப்பெரிய நிறுவமனாகவும் வகைப்படுத்தியது.2012 ஆம் ஆண்டில் போர்ப்ஸ் இதழ் உலக அளவில் 31 வது மிகப்பெரிய நிறுவனமாக மதிப்பளித்தது (அதிக வருவாய் உள்ள நிறுவனங்களின் பட்டியல்). இதே காலகட்டத்தில் (2011/2012)பின் வரும் மதிப்பீடுகளை இந்நிறுவனம் பெற்றது.அடைப்புக்குறிக்குள் மதிப்படுகளை வெளியிட்ட நிறுவனத்தின் பெயர் உள்ளது.
- 1வது தலைவர்களுக்கான நிறுவனம் (பார்ச்சூன் இதழ்)
- 1வது உலக அளவில் பசுமை(சுற்றுசூழல் மாசுபாடுகளை குறைந்த அளவில் வெளியிடுதல்)நிறுவனம் (நியூஸ் வீக்)
- 2வது உலக அளவில் மிகப்பெரிய வர்த்தக நிறுவனம் (இன்டர்பிராண்ட்)
- 2வது மிகப்பெரிய மதிப்பு மிக்க நிறுவனம் (போரோன்)
- 5வது ரசிக்கப்பட்ட நிறுவனம்(பார்ச்சூன் இதழ்)
- 18வது புதுமையான நிறுவனம் (பாஸ்ட் கம்பெனி)
ஐபிஎம் நிறுவனம் உலக அளவில் 12 ஆராய்ச்சிக்கூடங்களைக் கொண்டுள்ளது.2013 ஆம் ஆண்டு நிலவரப்படி தொடர்ந்து 20 வருடங்களாக அதிக எண்ணிக்கையிலான காப்புரிமைகளைப் பதிவு செய்த நிறுவனமாக சாதனை படைத்துள்ளது. பல்வேறு காலகட்டங்களில் இதன் பணியாளர்கள் கீழ்க்கண்ட விருதுகளையும் பரிசுகளையும் வென்று இந்நிறுவனத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். ஐந்து நோபல் பரிசுகள் ஆறு டுரிங் விருதுகள் பத்து தேசிய தொழில்நுட்ப பதக்கம் ஐந்து தேசிய அறிவியல் பதக்கம் ஆகியவை.