ஏரல் கடல் (Aral Sea) (கசாக் மொழி: Арал теңізі (ஆரல் டெங்கிசி Aral tengizi), உஸ்பெக் மொழி: Orol dengizi, ரஷ்ய மொழி: Ара́льское море) கசக்ஸ்தான் - உஸ்பெகிஸ்தான் இடையே அமைந்த நிலத்தால் சூழப்பட்ட ஒரு கடல். இதனைச் சென்றடையும் ஆறுகளான ஆமூ தாரியா மற்றும் சிர் தாரியா எனும் ஆறுகள் நீர்ப்பாசனத்திற்காக ரஷ்யாவினால் திசை திருப்பப்பட்டதிலிருந்து இக்கடலின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.இது ஏரல் கடல் என அழைக்கப்பட்டாலும் இது ஒர் ஏரியாகும். ஒரு காலத்தில் இது உலகின் மிகப்பெரிய நான்கு ஏரிகளில் ஒன்றாக இருந்தது. ஆயுதப் பரிசோதனை, தொழிற்சாலைக் கழிவுகள் என்பனவற்றால் மிகவும் மாசடைந்துள்ளது. 1960ம் ஆண்டில் இருந்த அளவின் காற்பங்கே இக்கடலில் மீந்துள்ளது. தொடர்ந்து வற்றிப் போவதால் இக்கடல் இரண்டாகப் பிரிந்துள்ளது.தற்போது இந்த ஏரியின் ஒரு சிறிய பகுதியே எஞ்சியுள்ளது.[1]

ஏரி வற்றுவதைக்காட்டும் செய்மதிப் படங்கள்

வட ஏரல் கடல் என அழைக்கப்படும் இந்தப்பகுதியின் பொதுவான ஆழம் 43 மீட்டர் ஆகும். ஒரு காலத்தில் இப்பகுதியைச் சூழ்ந்து முன்னேற்றமடைந்த மீன்பிடித் தொழில்துறை காணப்பட்டது. ஏரி வற்ற ஆரம்பித்தவுடன் மீன் வளங்களும் அருகி விட்டதால் அப்பகுதியில் மீன்பிடித்தொழில் முற்றாக கைவிடப்பட்டுள்ளது. காலப் போக்கில் ஏரல் கடலானது சுருங்கி வருவதை அறிய 1964, 1985, 2005 ஆகிய ஆண்டுகளில் செய்மதியில் (செயற்கைத் துணைக்கோளில்) இருந்து எடுத்த படங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.

காலப் போக்கில் ஏரல் கடல் சுருங்குவதைக் காட்டும் படங்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.