ஐந்தாம் தலைமுறை மறைவான தாக்குதல் வானூர்திகளின் குடும்பம் From Wikipedia, the free encyclopedia
எப்-35 அல்லது லொக்கீட் மார்டீன் எப்-35 மின்னல் II (Lockheed Martin F-35 Lightning II) என்பது ஒரு தனி இருக்கை, தனிப் பொறி, எல்லா காலநிலையிலும் மறைவான, பல்வகைத் தாக்குதல் வானூர்தியாகும். இந்த ஐந்தாந்தலைமுறைத் தாரைப் போர் விமானம் தரைத்தாக்குதல் மற்றம் வான் போர் செயற்பாடுகளுக்காக வடிவமைக்கப்பட்டது. இது மூன்று வகைகளைக் கொண்டுள்ளது. எப்-35ஏ மரபுமுறை புறப்படுத்தல் மற்றும் தரையிறக்கத்திற்காகவும், எப்-35பி குறுகிய புறப்படுத்தல் மற்றும் செங்குத்து தரையிறக்கத்திற்காகவும், எப்-35சி விமானந்தாங்கியின் கவண் எறிமுறை புறப்படுத்தல் மற்றும் தடுப்புப் பிடிப்பு திரும்பப்பெறல் முறைக்காகவும் வடிவமைக்கப்பட்டன. 31 சூலை 2015 அன்று, ஐக்கிய அமெரிக்க ஈரூடகப் படைப்பிரிவு எப்-35பி சோதனையின் பின்னர் முதலாவது படைப்பிரிவு தயாராக உள்ளது என அறிவித்தது.[6][7] 2 ஆகத்து 2016 அன்று, ஐக்கிய அமெரிக்க வான்படை எப்-35ஏ விமாங்களைக் கொண்ட முதலாவது படைப்பிரிவு சண்டைக்குத் தயார் என அறிவித்தது.[8] இது லொக்கீட் மார்ட்டின் மற்றும் அதன் துணை ஒப்பந்ததாரர்களான நார்த்ரோப் குரூமன், பிராட் & விட்னி மற்றும் பிஏஈ சிஸ்டம்ஸ் உள்ளிடவர்களால் கட்டப்பட்டுகிறது.
எப்-35 எப்-35 மின்னல் II | |
---|---|
எப்-35 | |
வகை | மறைந்து தாக்கும் முறை பல்வகைத் தாக்குதல் வானூர்தி |
உருவாக்கிய நாடு | ஐக்கிய அமெரிக்கா |
உற்பத்தியாளர் | லொக்கீட் மார்ட்டின் |
வடிவமைப்பாளர் | ஐக்கிய அமெரிக்கா |
முதல் பயணம் | 15 டிசம்பர் 2006 |
அறிமுகம் | 2016க்குப் பின்[1] |
தற்போதைய நிலை | ஆரம்ப உற்பத்தி, அமெரிக்காவில் பயிற்சிக்காக மட்டும்[2] |
உற்பத்தி | 2006–தற்போதும் |
தயாரிப்பு எண்ணிக்கை | 63[3] |
அலகு செலவு | எப்-35ஏ: ஐ.அ$197 மில்லியன் (2012)[4] எப்-35பி: ஐ.அ$237.7மில்லியன் (2012)[5] எப்-35சி: ஐ.அ$236.8மில்லியன் (2012)[5] |
முன்னோடி | லொக்கீட் மார்ட்டின் எக்ஸ்-35 |
2018 செப்டம்பர் 28 இல், எஃப்-35பி ஜெட் போர் விமானம் தென் கரொலைனாவில் தரையில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. விமானம் தரையில் மோதுவதற்கு முன்னால் விமானி விமானத்தில் இருந்து பாதுகாப்பாக வெளியேறினார். இதுவே எஃப்-35 ரக விமானம் ஒன்றின் முதலாவது விபத்தாகும்.[9]
தகவல் மூலம் லொக்கீட் மார்ட்டின் விவரக்கூற்றுக்கள், எப்-35 திட்டச் சுருக்கம்,[10][11] எப்-35 ஜேஎஸ்டிப்[12]
தொழில் நுட்பத்தகவல்கள்
செயற்திறன்
போர்க் கருவிகள்
பறப்பு மின்னணுவியல்
F-35A CTOL |
F-35B STOVL |
F-35C CATOBAR | |
---|---|---|---|
நீளம் | 51.4 அடி (15.7 m) | 51.3 அடி (15.6 மீ) | 51.5 அடி (15.7 மீ) |
சிறகு அகலம் | 35 அடி (10.7 m) | 35 அடி (10.7 m) | 43 அடி (13.1 m) |
சிறகு பரப்பு | 460 அடி² (42.7 மீ²) | 460 அடி² (42.7 மீ²) | 668 அடி² (62.1 மீ²) |
வெற்று நிறை | 29,300 ப (13,300 கிகி) | 32,000 ப (14,500 கிகி) | 34,800 ப (15,800 கிகி) |
உள்ளக எரிபொருள் | 18,500 ப (8,390 கிகி) | 13,300 ப (6,030 கிகி) | 19,600 ப (8,890 கிகி) |
அதிகபட்ச எடை | 70,000 ப (31,800 கிகி) | 60,000 ப (27,000 கிகி) | 70,000 ப (31,800 கிகி) |
தூரம் | 1,200 nமீi (2,220 கிமீ) | 900 nமீi (1,670 கிமீ) | 1,400 nமீi (2,520 கிமீ) |
சண்டை ஆரம் உள்ளக எரிபொருளில்[20] |
584 nமீi (1,082 கிமீ) | 383 nமீi (709 கிமீ) | 640 nமீi (1,185 கிமீ) |
தள்ளுதல்/எடை முழு எரிபொருளில் 50% fuel |
0.87 1.07 |
0.90 1.04 |
0.75 0.91 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.