6வது ஊவா மாகாணசபைத் தேர்தல் (6th Uva Provincial Council election) இலங்கையின் ஊவா மாகாணசபைக்கு 34 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2014 செப்டம்பர் 20 இல் நடைபெற்றன. ஊவா மாகாணத்தில் 942,730 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1] இலங்கை மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் படிநிலையில் நடைபெற்று வருகின்றன. இவ்வகையில் 5வது ஊவா மாகாணசபை 2014 சூலை 11 இல் கலைக்கப்பட்டது. வேட்பு மனுக்கள் 2014 ஆகத்து 6 வரை ஏற்றுக் கொள்ளப்பட்டன .ஏனைய எட்டு மாகாணசபைகளின் தேர்தல்கள் 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்றன.
விரைவான உண்மைகள் ஊவா மாகாணசபைக்கு 34 இடங்கள், First party ...
6வது ஊவா மாகாணசபைத் தேர்தல், இலங்கை![](//upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/11/Flag_of_Sri_Lanka.svg/50px-Flag_of_Sri_Lanka.svg.png)
|
|
ஊவா மாகாணசபைக்கு 34 இடங்கள் |
---|
|
மூடு
22 அரசியல் கட்சிகளும் 11 சுயேட்சைக் குழுக்களும் இத்தேர்தலில் போட்டியிட்டன. இவைகளின் சார்பில் 617 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். ஊவா மாகாணத்தில் 9 இலட்சத்து 42 ஆயிரத்து 730 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றனர். பதுளை மாவட்டத்திலிருந்து 18 உறுப்பினர்களும், மொனராகலை மாவட்டத்திலிருந்து 14 உறுப்பினர்களும் நேரடியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.[1]