உள்நாட்டு போராளிகள் கட்சி
From Wikipedia, the free encyclopedia
உள்நாட்டு போராளிகள் கட்சி (பெஜுவாங்) (ஆங்கிலம்: Homeland Fighter's Party; மலாய்: Parti Pejuang Tanah Air (PEJUANG); சீனம்: 祖國鬥士黨; என்பது மலேசியாவில் மலாய்க்காரர்கள் அடிப்படையிலான ஓர் அரசியல் கட்சியாகும். மலேசிய முன்னாள் பிரதமர் மகாதீர் பின் முகமது (Mahathir Mohamad) அவர்களால் 2020 ஆகத்து மாதம் உருவாக்கப்பட்டது.
உள்நாட்டு போராளிகள் கட்சி Homeland Fighter's Party Parti Pejuang Tanah Air | |
---|---|
சுருக்கக்குறி | PEJUANG |
தலைவர் | முக்ரிஸ் மகாதீர் (Mukhriz Mahathir) |
செயலாளர் நாயகம் | அமிருடின் அம்சா |
நிறுவனர் | மகாதீர் பின் முகமது |
குறிக்கோளுரை | கொள்கைப் போராளி Pejuang Berprinsip |
தொடக்கம் | 12 ஆகத்து 2020 (2020-08-12) |
சட்ட அனுமதி | 8 சூலை 2021 (2021-07-08) |
பிரிவு | பெர்சத்து |
தலைமையகம் | N-02-08, Blok N, Conezion Commercial Centre, Lebuhraya IRC3, IOI Resort City, 62502 புத்ரா ஜெயா, மலேசியா |
கொள்கை | மலாய் மேலாதிக்கம் மலாய் தேசியவாதம் சமூக பழமைவாதம் இசுலாம் சனநாயகம் ஊழல் எதிர்ப்பு |
அரசியல் நிலைப்பாடு | மைய-வலது அரசியல் |
தேசியக் கூட்டணி | கெராக்கான் தானா ஆயர் (2022–2023) ஒருங்கிணைந்த கூட்டணி: பாக்காத்தான் ஹரப்பான் (2020–2022) பெரிக்காத்தான் நேசனல் (2023) |
நிறங்கள் | நீல நிறம் |
பண் | உங்களுக்காக போராட்டம் Berjuang Untukmu |
மேலவை | 0 / 70 |
மக்களவை | 0 / 222 |
சட்டமன்றங்கள் | 4 / 607 |
மந்திரி பெசார் | 0 / 13 |
இணையதளம் | |
pejuang |
அப்போதைய பிரதமரும் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சியின் (Malaysian United Indigenous Party) தலைவருமான டான் ஸ்ரீ மொகிதின் யாசின் (Tan Sri Muhyiddin Yassin) தலைமையிலான ஆளும் பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional) மற்றும் பாரிசான் நேசனல் (Barisan Nasional) அரசாங்கத்திற்கு எதிராக உள்நாட்டு போராளிகள் கட்சி உருவாக்கப்பட்டது.
பெஜுவாங் (PEJUANG) கட்சியின் சின்னம், கவர்ச்சியான ڤ (P) எனும் சாவி எழுத்துமுறையை கொண்டுள்ளது. இது "பெஜுவாங்" என்ற வார்த்தையின் முதல் எழுத்தாகும்.