From Wikipedia, the free encyclopedia
உமா ரமணன் (Uma Ramanan, 1954/1955 – 1 மே 2024[1]) தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகியாவார். இந்தியாவின் தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தமிழில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். இவர் 35 ஆண்டுகளில் 6,000 இற்கும் மேற்பட்ட மேடைக் கச்சேரிகளில் பல பாடல்களைப் பாடினார்.[2]
உமா ரமணன் | |
---|---|
பிறப்பு | 1954/1955 |
இறப்பு | (அகவை 69) |
இசை வடிவங்கள் | கருநாடக சங்கீதம், திரையிசை |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகி, மேடை பாடகி |
இசைக்கருவி(கள்) | குரல் |
இசைத்துறையில் | 1976 – 2024 |
உமா படித்துக் கொண்டிருந்தபோதே, பழனி விஜயலட்சுமியிடம் பாரம்பரிய இசையைக் கற்றார். உமா பல கல்லூரிகளுக்கிடையேயான போட்டிகளில் பங்கேற்றதுடன் பல வெகுமதிகளையும் பாராட்டுகளையும் வென்றார். பின்னர் இவர் தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகரும், மேடைப் பாடகருமான ஏ. வி. இரமணனைச் சந்தித்தார்.[2] அப்போது இரமணன் தனது மேடைக் கச்சேரிகளுக்காக புதிய குரல்களைத் தேடிக்கொண்டிருந்தார். அப்போதிருந்து, உமாவும் இரமணனும் இரட்டை மேடைக் கலைஞர்களாக மாறினர். இவர்கள் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் உள்ளார். அவரும் ஒரு இசைக்கலைஞராவார்.
உமா இரமணன் பத்மா சுப்பிரமணியத்திடம் பயிற்சி பெற்ற நடனக் கலைஞரும் ஆவார்.[3] உமா இரமணன் 2024 மே 1 அன்று தனது 69 வது வயதில் இறந்தார்.[4]
இரமணனின் மேடை நிகழ்ச்சிகளில் உமா பாடிக்கொண்டிருக்கும்போது, பிரபலத் தயாரிப்பாளரும்-ஒளிப்பதிவாளருமான ஜானகிராமன் 1976 இல் வெளிவந்த தனது இந்தித் திரைப்படமான "பிளே பாய்" திரைப்படத்தில் இருவருக்கும் சோடிப் பாடலை வழங்கினார். 1977 இல் ஏ. பி. நாகராஜன் இயக்கிய "ஸ்ரீ கிருஷ்ண லீலா" என்ற தமிழ்த் திரைப்படத்திலும், இசையமைப்பாளர் எஸ். வி. வெங்கட்ராமனின் கடைசிப் பணிகளில் ஒன்றிலும் பாடுவதற்கான வாய்ப்பு இந்த இணையருக்குக் கிடைத்தது. 1980 இல் ஏ. வி. ரமணன் இசையமைத்த நீரோட்டம் திரைப்படத்தில் உமா பாடினார். இருப்பினும், அதே ஆண்டில் இளையராஜா இசையமைப்பில் வெளிவந்த நிழல்கள் திரைப்படத்தில் "பூங்கதவே தாழ் திறவாய்" பாடல் தான் இவரை முன்னணி பாடகிகளின் பட்டியலில் கொண்டு வந்தது. இது அவருக்கு ஒரு பெரிய தொழில் வாய்ப்பை அளித்தது. மேலும் உமா இளையராஜாவுடன் தனியாக 100 இற்கும் மேற்பட்ட பாடல்களைப் பதிவு செய்தார்.[2] வித்தியாசாகர், தேவா, மணிசர்மா போன்ற இசையமைப்பாளர்களுக்காகவும் இவர் பாடினார்.
உமா இரமணனும் இவரின் சமகாலத்தவர்கள் சிலரும் இளையராஜாவின் வாழ்க்கையில் அரிதானவர்களாகப் கருதப்படுகிறார்கள். உமா தனது தொழில் வாழ்க்கையில் இளையராஜாவின் இசையமைப்பில் சிறந்த பாடல்கள் சிலவற்றை பதிவு செய்துள்ளார்.[5]
இளையராஜாவின் இசையில் உமா இரமணனின் முக்கிய வெற்றிப் பாடல்கள் சில:
ஆண்டு | திரைப்படம் | பாடல் | இசையமைப்பாளர் | உடன் பாடியவர்கள் |
---|---|---|---|---|
1977 | ஸ்ரீ கிருஷ்ண லீலா | மோகன கண்ணன் முரளி | எஸ். வி. வெங்கட்ராமன் | ஏ. வி. ரமணன் |
1980 | நிழல்கள் | பூங்கதவே தாழ் திறவாய் | இளையராஜா | தீபன் சக்ரவர்த்தி |
1980 | நீரோட்டம் | ஆசை இருக்குது நெஞ்சுக்குள்ளே | ஏ. வி. ரமணன் | ஏ. வி. ரமணன் |
1980 | மூடுபனி | ஆசை ராஜா ஆரிரோ | இளையராஜா | |
1981 | தில்லு முல்லு | அந்த நேரம் பொருத்திருந்தால் | எம். எஸ். விஸ்வநாதன் | |
1981 | பால நாகம்மா | பள்ளி அறைக்குள் | இளையராஜா | |
1981 | எனக்காக காத்திரு | தாகம் எடுக்கிற நேரம் | இளையராஜா | |
1981 | கர்ஜனை | என்ன சுகமான உலகம் | இளையராஜா | மலேசியா வாசுதேவன் |
1981 | குடும்பம் ஒரு கதம்பம் | கல்வியில் சரஸ்வதி | ம. சு. விசுவநாதன் | வாணி ஜெயராம், எஸ். பி. சைலஜா & பி. எஸ். சசிரேகா |
1981 | மதுமலர் | வானமே மழை மேகமே | இளையராஜா | கே. ஜே. யேசுதாஸ் |
1981 | நண்டு | மஞ்சள் வெயில் மாலை | இளையராஜா | |
1981 | பன்னீர் புஷ்பங்கள் | ஆனந்த இராகம் | இளையராஜா | |
1981 | கோயில் புறா | அமுதே தமிழே | இளையராஜா | பி. சுசீலா |
1982 | கண்ணே ராதா | குலுங்க குலுங்க இளமை சிரிக்குது | இளையராஜா | |
1982 | கவிதை மலர் | அலைகளே வா அவருடன் வா | இளையராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
1982 | நம்பினால் நம்புங்கள் | டிஸ்கோ சங்கீதம் தான் | கங்கை அமரன் | தீபன் சக்ரவர்த்தி |
1982 | தூறல் நின்னு போச்சு | பூபாளம் இசைக்கும் | இளையராஜா | கே. ஜே. யேசுதாஸ் |
1983 | பகவதிபுரம் இரயில்வே கேட் | செவ்வரளி தோட்டத்திலே | இளையராஜா | இளையராஜா |
1983 | இன்று நீ நாளை நான் | தாளம் பூவே கண்ணுறங்கு | இளையராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் & எஸ். ஜானகி |
1983 | மனைவி சொல்லே மந்திரம் | ஆத்தாடி அதிசயம் | இளையராஜா | கே. ஜே. யேசுதாஸ் |
1983 | மெல்ல பேசுங்கள் | கூவின பூங்குயில்.... செவ்வந்தி பூக்களில் செய்த வீடு | இளையராஜா | தீபன் சக்ரவர்த்தி |
1984 | அன்பே ஓடி வா | காதில் கேட்டது ஒரு பாட்டு | இளையராஜா | |
1984 | கடமை | சங்கர் கணேஷ் | ||
1984 | வைதேகி காத்திருந்தாள் | மேகம் கருக்கையிலே | இளையராஜா | இளையராஜா |
1985 | கெட்டிமேளம் | தாகம் உண்டானதே | இளையராஜா | கே. ஜே. யேசுதாஸ் |
1984 | நாளை உனது நாள் | அலை அலையா பால ஆசைகளே | இளையராஜா | |
1985 | ஒரு கைதியின் டைரி | பொன் மானே கோவம் ஏனோ | இளையராஜா | உண்ணிமேனன் |
1984 | புதுமைப்பெண் | கஸ்தூரி மானே | இளையராஜா | கே. ஜே. யேசுதாஸ் |
1985 | திருமலை | இந்த அழகு தீபம் | சங்கர் கணேஷ் | மலேசியா வாசுதேவன் |
1985 | தென்றலே என்னைத் தொடு | கன்மணி நீ வரக் | இளையராஜா | கே. ஜே. யேசுதாஸ் |
1986 | கோடை மழை | பல பல பல குருவி | இளையராஜா | ஷோபா சந்திரசேகர் |
1986 | மௌனம் கலைக்கிரத்து | மாலை நேரம் | சங்கர் கணேஷ் | ரமேஷ் |
1986 | முதல் வசந்தம் | ஆறும் அது ஆழமில்லா | இளையராஜா | |
1986 | பாரு பாரு பட்டணம் பாரு | யார் தூரிகை தந்த ஓவியம் | இளையராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
1986 | தழுவாத கைகள் | குடும்பத்தை உருவாக்கச் சொன்னால் | இளையராஜா | எஸ். பி. சைலஜா, பி. எஸ். சசிரேகா & சாய்பாபா |
நானொரு சின்னப்பதான் | பி. எஸ். சசிரிகா | |||
1987 | ஆயுசு நூறு | பிரம்ம தேவன் அவன் | டி. ராஜேந்தர் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
1987 | ஒரு தாயின் சபதம் | இராக்கோழி கூவையிலே | டி. ராஜேந்தர் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
1987 | வீரன் வேலுத்தம்பி | அடி கட்டழகு மானே | எஸ். ஏ. ராஜ்குமார் | மனோ |
1988 | அத்தனைபேரும் உத்தமர்தானா | புது ரோசா அள்ளு | கண்ணன் லதா | லதா கண்ணன் |
1988 | பூவுக்குள் பூகம்பம் | நாள் வருது நாள் வருது | சங்கீதா ராஜன் | |
1989 | என் தங்கை | மதுவின் மயக்கம் | எஸ். ஏ. ராஜ்குமார் | கல்யாண் |
1989 | மனசுக்கேத்த மகராசா | மஞ்சக்குளிக்கிற பிஞ்சு குருவிக்கு | தேவா. | |
1989 | ஒரு பொண்ணு நெனச்சா | உதயமே உயிரே நிலவே | எஸ். ஏ. ராஜ்குமார் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
1989 | பாண்டி நாட்டுத் தங்கம் | ஏலேலங் குயிலே ஏலமர வெய்லே | இளையராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
1989 | பொன்மன செல்வன் | இனிமேல நல்ல நேரம்தான் | இளையராஜா | மலேசியா வாசுதேவன் |
1989 | தென்றல் சுடும் | ஆத்தாடி அல்லிக்கொடி | இளையராஜா | |
1989 | வாய்க் கொழுப்பு | சந்திரபோஸ் | ||
1988 | வீடு மனைவி மக்கள் | செங்கல்லை தூக்கர | சங்கர் கணேஷ் | மலேசியா வாசுதேவன் |
1990 | 60 நாள் 60 நிமிடம் 6 | உந்தன் கண்ணுக்குள் | கண்ணன் லதா | மனோ |
1990 | அரங்கேற்ற வேளை | ஆகாய வெண்ணிலாவே | இளையராஜா | கே. ஜே. யேசுதாஸ் |
1990 | எதிர்காற்று | ராஜா இல்லா | இளையராஜா | அருண்மொழி |
இங்கும் இருக்கும் | ||||
1990 | கேளடி கண்மணி | நீ பாதி நான் பாதி கண்ணே | இளையராஜா | கே. ஜே. யேசுதாஸ் |
தண்ணியில நனஞ்ச (திரைப்படத்தில் படமாக்கப்படவில்லை) | ||||
1990 | மல்லுவேட்டி மைனர் | உன்ன பார்த்த நேரத்துல | இளையராஜா | மலேசியா வாசுதேவன் |
அடி மத்தாளந்தான் அதிரும் | மலேசியா வாசுதேவன் & கே. எஸ். சித்ரா | |||
சின்ன மணி | கே. ஜே. யேசுதாஸ் & கே. எஸ். சித்ரா | |||
1990 | பாலைவன பறவைகள் | முத்து சம்பா | இளையராஜா | மலேசியா வாசுதேவன் |
1990 | புலன் விசாரணை | குயிலே குயிலே | இளையராஜா | கே. ஜே. யேசுதாஸ் |
1991 | அன்பு சங்கிலி | மந்திரப் புன்னகை | இளையராஜா | |
1991 | என்னருகில் நீ இருந்தால் | ஓ உன்னாலே நான் | இளையராஜா | மனோ |
1991 | கும்பக்கரை தங்கய்யா | பூத்து பூத்து குலுங்குதடி | இளையராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
1991 | மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும் | பொட்டு வச்ச பூவே | இளையகங்கை | எஸ். பி. பாலசுப்பிரமணியம் & கோகுலனன் |
1991 | புது நெல்லு புது நாத்து | ஏய் மரிக்கொழுந்து என்னம்மா கிருஷ்ணவேணி | இளையராஜா | கே. எஸ். சித்ரா |
1991 | தந்துவிட்டேன் என்னை | முத்தம்மா முத்து முத்து | இளையராஜா | அருண்மொழி |
1991 | என் மாமனுக்கு நல்ல மனசு | மேகம் மழை தூறல் | சிற்பி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
1992 | புதிய சுவரங்கள் | ஓ வானமுள்ள காலம் | இளையராஜா | கே. ஜே. யேசுதாஸ் |
1992 | தம்பி பொண்டாட்டி | கண்ணன் வந்ததாலே | இளையராஜா | |
1993 | சின்ன மாப்ளே | கண்மணிக்குள் சின்ன சின்ன மின்மினிகள் | இளையராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் &மினிமினி |
1993 | எங்க தம்பி | இது மானோடு மயிலாடும் காடு | இளையராஜா | அருண்மொழி |
1993 | மணிக்குயில் | தண்ணீரிலே முகம் பார்க்கும் | இளையராஜா | மனோ |
காதல் நிலவே | அருண்மொழி | |||
1993 | பொன் விலங்கு | சந்தன கும்பா உடம்புலா | இளையராஜா | மனோ |
1993 | வால்டர் வெற்றிவேல் | பூங்காற்று இங்கே வந்து | இளையராஜா | மனோ |
1994 | மகாநதி | ஸ்ரீ ரங்க ரங்க நாதனின் | இளையராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் & மகாநதி சோபனா |
1994 | மேட்டுப்பட்டி மிராசு | மங்களம் மங்களமே | எம். எஸ். ஸ்ரீராஜ் | கே. ஜே. யேசுதாஸ் & கே. எஸ். சித்ரா |
1994 | பெரிய மருது | சிங்காரமா நல்ல | இளையராஜா | |
1994 | புதுப்பட்டி பொன்னுதாயி | ஊரடங்கும் சாமத்திலே | இளையராஜா | சுவர்ணலதா |
1994 | செவத்த பொண்ணு | சித்திரையில் திருமணம் | தேவா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
1994 | செவ்வந்தி | வாச மல்லி பூவு | இளையராஜா | |
1994 | தென்றல் வரும் தெரு | அம்மா பிள்ளை | இளையராஜா | மனோ |
1995 | ஒரு ஊரில் ஒரு ராஜகுமாரி | எத்தனை நாளா | இளையராஜா | மனோ |
1995 | ஆணழகன் | பூச் சூடும் | இளையராஜா | சுவர்ணலதா |
1995 | சின்ன வாத்தியார் | அத்த மக இரத்தினமே | இளையராஜா | மலேசியா வாசுதேவன் |
1995 | பாட்டு பாடவா | நில் நில் நில் பதில் சொல் | இளையராஜா | இளையராஜா |
1995 | புள்ளகுட்டிக்காரன் | போதும் எடுத்த ஜென்மமமே | தேவா | அருண்மொழி |
1995 | நந்தவன தேரு | வெள்ளி நிலவே வெள்ளி நிலவே | இளையராஜா | எஸ். பி. பாலசுப்பிரமணியம் |
1997 | அபிமன்யு | தாய் உனக்கு | தேவா. | |
1997 | அரசியல் | வா சகி வா சகி | வித்தியாசாகர் | ஹரிஷ் ராகவேந்திரா |
1997 | புதையல் | ஒச்சம்மா ஒச்சம்மா உச்சம்பட்டி | வித்தியாசாகர் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், உண்ணிமேனன் |
பூத்திருக்கும் வனமே | ஹரிஹரன் | |||
1997 | சிஷ்யா | யாரோ அழைத்தது | தேவா. | ஹரிஹரன் |
2000 | கருவேலம்பூக்கள் | ஏய் பூத்ததடி சாதி மல்லிப் பூவு | இளையராஜா | |
2005 | சிவகாசி | இது என்ன இது என்ன புது உலகா | சிறீகாந்து தேவா | ஹரிஷ் ராகவேந்திரா |
2005 | திருப்பாச்சி | கண்ணும் கண்ணுந்தான் கலந்தாச்சு | மணிசர்மா | ஹரிஷ் ராகவேந்திரா & பிரேம்ஜி அமரன் |
19 | சிலு சிலு காத்து | எஸ். ஏ. ராஜ்குமார் | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | |
வெளியிடப்படாத திரைப்படம் | சிந்து | ஜீவன் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.