தமிழ்த் திரைப்பட நடிகர் From Wikipedia, the free encyclopedia
உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin) என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளரும் அரசியல்வாதியும் ஆவர்.[3] தற்போது இவர் தமிழகத்தின் துணை முதல்வராக உள்ளார்.[4] இவர் இரெட் செயன்டு மூவிசு திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தைச் சொந்தமாகக் கொண்டுள்ளார்.[5]
உதயநிதி ஸ்டாலின் | |
---|---|
2020-இல் உதயநிதி | |
3-ஆவது தமிழ்நாடு துணை முதலமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 28 செப்டம்பர் 2024 | |
ஆளுநர் | ஆர். என். இரவி |
முன்னையவர் | ஓ. பன்னீர்செல்வம் |
தொகுதி | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி |
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 14 டிசம்பர் 2022[1] | |
முன்னையவர் | சிவ. வீ. மெய்யநாதன் |
தொகுதி | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி |
தமிழ்நாடு சட்டப் பேரவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 11 மே 2021 | |
தலைவர் | மு.க. ஸ்டாலின் |
முன்னையவர் | ஜெ. அன்பழகன் |
தொகுதி | சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி |
திமுக இளைஞர் அணிச் செயலாளர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூலை 2019 | |
முன்னையவர் | மு. பெ. சாமிநாதன்[2] |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 27 நவம்பர் 1977 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
அரசியல் கட்சி | திராவிட முன்னேற்றக் கழகம் |
துணைவர் | கிருத்திகா உதயநிதி (தி. 2002) |
பிள்ளைகள் |
|
பெற்றோர் |
|
உறவினர் | பார்க்க: கருணாநிதி குடும்பம் |
வாழிடம்(s) | 25/9, சித்தரஞ்சன் வீதி, ஆழ்வார் பேட்டை, சென்னை |
கல்வி | பி.காம் |
முன்னாள் கல்லூரி | இலயோலாக் கல்லூரி, சென்னை |
வேலை |
|
உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரான மு. கருணாநிதியின் பேரனும் இப்போதைய முதல்வரான மு. க. ஸ்டாலினின் மகனும் ஆவார்.[6] இவர் கிருத்திகா என்பவரைத் திருமணம் செய்துள்ளார்.[7]
விஜய், திரிஷா நடித்த குருவி எனும் திரைப்படம் உதயநிதி ஸ்டாலினின் தயாரிப்பில் வெளிவந்த முதல் திரைப்படமாகும்.[8] உதயநிதி ஸ்டாலினை வழங்குநராகக் கொண்டு வெளிவந்த முதல் திரைப்படம் கௌதம் மேனனின் விண்ணைத்தாண்டி வருவாயா என்ற திரைப்படம் ஆகும்.
திரைப்பட நடிப்பில் ஆர்வமாக நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின், 2018 மார்ச் முதல் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாக அறிவித்தார்.[9] 2019-இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தமிழகச் சட்டசபையின் 22 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களிலும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்குமான தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட்டார். 2019 சூலை 7 அன்று திமுக இளைஞர் அணிச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[10]
உதயநிதி ஸ்டாலின் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[11][12]
ஆண்டு | வெற்றி பெற்ற தொகுதி | கட்சி | பெற்ற வாக்குகள் | வாக்கு விழுக்காடு (%) |
---|---|---|---|---|
2021 | சேப்பாக்கம் | திமுக | 93285 | 67.89[13] |
ஆண்டு | தலைப்பு | கதைமாந்தர் | இயக்குநர் | குறிப்புகள் |
---|---|---|---|---|
2009 | ஆதவன் | பணியாள் உதவியாளர் | கே. எசு. இரவிக்குமார் | சிறப்புத் தோற்றம்[14] |
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி | சரவணன் | எம். இராசேசு | முதன்மைக் கதைமாந்தராக முதற்றிரைப்படம்[15] |
2014 | இது கதிர்வேலன் காதல் | கதிர்வேல் | எஸ். ஆர். பிரபாகரன் | |
2015 | நண்பேன்டா | சத்யா | ஜகதீஷ் | |
2016 | கெத்து | சேது | திருக்குமரன் | |
2016 | மனிதன் | சக்திவேல் | அகமது | |
2017 | சரவணன் இருக்க பயமேன் | சரவணன் | எழில் | |
2017 | பொதுவாக எம்மனசு தங்கம் | கணேஷ் | தளபதி பிரபு | |
2017 | இப்படை வெல்லும் | மது சூதனன் | கவுரவ் நாராயணன் | |
2018 | நிமிர் | செல்வம் | பிரியதர்சன் | |
2019 | கண்ணே கலைமானே | கமல கண்ணன் | சீனு ராமசாமி | |
2020 | சைக்கோ | கவுதம் | மிஷ்கின் | |
2020 | கண்ணை நம்பாதே | அருண் | மாறன் | படப்பிடிப்பில் |
2020 | ஏஞ்சல் | அதியமான் | படப்பிடிப்பில் | |
2022 | நெஞ்சுக்கு நீதி | எஸ். விஜயராகவன் | அருண்ராஜா காமராஜ் | முதன்மை கதாபாத்திரம். இந்தியில் வெளிவந்த ஆர்டிக்கில் 15 படத்தின் தமிழ் உருவாக்கம் |
ஆண்டு | தலைப்பு | நடிகர்கள் | இயக்குநர் |
---|---|---|---|
2008 | குருவி | விசய், திரிசா | தரணி |
2009 | ஆதவன் | சூர்யா, நயன்தாரா | கே. எசு. இரவிக்குமார் |
2010 | மன்மதன் அம்பு | கமல் ஆசன், திரிசா, மாதவன் | கே. எசு. இரவிக்குமார் |
2011 | ஏழாம் அறிவு | சூர்யா, சுருதி ஆசன் | ஏ. ஆர். முருகதாசு |
2012 | ஒரு கல் ஒரு கண்ணாடி | உதயநிதி இசுட்டாலின், அன்சிக்கா மோட்வானி, சந்தானம் | எம். இராசேசு |
2012 | நீர் பறவைகள் | விட்டுணு விசால், பிந்து மாதவி | சீனு இராமசாமி |
ஆண்டு | தலைப்பு | நடிகர்கள் | இயக்குநர் |
---|---|---|---|
2010 | விண்ணைத்தாண்டி வருவாயா | சிலம்பரசன், திரிசா | கௌதம் மேனன் |
2010 | மதராசபட்டினம் | ஆர்யா, ஏமி சாக்சன், நாசர் | ஏ. எல். விசய் |
2010 | பாஸ் என்கிற பாஸ்கரன் | ஆர்யா, நயன்தாரா | எம். இராசேசு |
2010 | மைனா | விதார்த்து, அமலா பால் | பிரபு சாலமன் |
2011 | கோ | சீவா, கார்த்திக்கா நாயர், அச்மல் அமீர் | கே. வி. ஆனந்து |
2022 | டான் | சிவகார்த்திகேயன், S. J. சூர்யா, சமுத்திரக்கனி, பிரியங்கா அருள் மோகன், சூரி | சிபி சக்கரவர்த்தி |
2022 | விக்ரம் (2022) | கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பாஹத் பாசில், சூர்யா | லோகேஷ் கனகராஜ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.