ஸ்ரீதர் இயக்கத்தில் 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
இளமை ஊஞ்சலாடுகிறது (Ilamai Oonjal Aadukiradhu) 1978 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஜெயசித்ரா, ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]
இத்திரைப்படமானது 175 நாட்கள் மேல் வெற்றிகரமாக ஓடியது. இத்திரைப்படம் அந்த ஆண்டில் சிறந்த திரைப்படத்திற்கான தமிழக அரசு திரைப்பட விருதுகள் வென்றது. இத்திரைப்படம் தெலுங்கில் அதே ஆண்டில் 'வயசு பிலிசின்டி' மற்றும் இந்தியில் 1982 ஆண்டில் 'தில் இ நடான்' எனும் பெயரில் மீண்டும் எடுக்கப்பட்டது.[2]
இப்படத்திற்காக இசையமைக்க முதலில் எம். எஸ். விஸ்வநாதன் முடிவு செய்தார் ஸ்ரீதர். பின்னர் மாறுதல் செய்யப்பட்டு இளையராஜா ஒப்பந்தம் செய்யப்பட்டார். இப்படத்தில் பி. வாசு மற்றும் சந்தான பாரதி உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளனர்.[3]
இப்படம் 1978ல் வெளியானது. இளையராஜா இசையமைத்த பாடல்களை எஸ். பி. பாலசுப்ரமணியம், வாணி ஜெயராம், கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி, மலேசியா வாசுதேவன் ஆகியோர் பாடியிருந்தனர். பாடல்களை எழுதியவர் கவிஞர் வாலி.
எண். | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:வி) |
1 | ௭ன்னடி மீனாட்சி ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | வாலி | 4:00 |
2 | ஒரே நாள் உன்னை நான் ... | எஸ். பி. பாலசுப்பிரமணியம், வாணி ஜெயராம் | வாலி | 4:24 |
3 | கின்னத்தில் தேன்வடித்து ... | கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி | வாலி | 3:54 |
4 | நீ கேட்டால் நான் ... | வாணி ஜெயராம் | வாலி | 4:33 |
5 | தண்ணி கருத்திருச்சு ... | மலேசியா வாசுதேவன் | வாலி | 4:21 |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.