சிறீபிரியா (ஸ்ரீபிரியா) தென்னிந்திய திரைப்பட நடிகை மற்றும் அரசியல்வாதியும் ஆவார். இவர் 1970கள் மற்றும் 1980 களில் முன்னணி வேடங்களில் நடித்த நடிகை ஆவார், 350 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.[2] இவர் தற்போது கமல்ஹாசனால் தொடங்கப்பட்ட மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைமைப் பேச்சாளராகப் பொறுப்பு வகிக்கின்றார்.[3]
சிறீ பிரியா | |
---|---|
பிறப்பு | அலமேலு[1] 5 மார்ச்சு 1956 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர், இயக்குநர், அரசியல்வாதி |
செயற்பாட்டுக் காலம் | 1973–1992 2007-தற்போது வரை |
அரசியல் கட்சி | மக்கள் நீதி மய்யம் |
வாழ்க்கைத் துணை | ராஜ்குமார் சேதுபதி (1988-தற்போது வரை) |
பிள்ளைகள் | சினேகா, நாகார்ஜூன் |
திருமண வாழ்க்கை
சிறீபிரியா தெலுங்கு, கன்னட, மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளபோதிலும், இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இராஜ்குமார் என்னும் நடிகரை மணந்தார். இவர்களுக்கு சினேகா, நாகார்ஜூன் என்னும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தற்போது துணைவேடங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இரு திரைப்படங்களையும் இரு தொலைக்காட்சி தொடர்களையும் இவர் இயக்கியுள்ளார்.[4]
அறிமுகம்
பி. மாதவன் 1974ஆம் ஆண்டு சிறீ பிரியாவை முருகன் காட்டிய வழி என்னும் திரைப்படத்தில் அறிமுகப்படுத்தினார்.[5] பின்னர் 1974ஆம் ஆண்டு கே.பாலச்சந்தர்ரின் அவள் ஒரு தொடர்கதை என்னும் திரைப்படத்தில் நடித்தார். அநேகமாகப் புதுமுகங்களே நடித்து மாபெரும் வெற்றி பெற்ற அப்படத்தில் நாயகியின் இளவயது விதவைத் தங்கையாக குணச்சித்திரப் பாத்திரத்தை ஏற்று நடித்து சிறீ பிரியா தனது நடிப்பாற்றலை வெளிப்படுத்தியிருந்தார். அப்போது முன்னேறி வரும் நடிகராக இருந்த கமல்ஹாசன் அவரிடம் ஒருதலைக் காதல் கொள்பவராக நடித்திருந்தார்.
சிறீ பிரியா தமிழில் முதன்மையான அனைத்து இயக்குனர்கள் மற்றும் நடிகர்களின் படங்களிலும் நடித்தார். கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய இருவருடனும் மிக அதிகமான படங்களில் இணைந்து சிறீ பிரியா நடித்துள்ளார்.
இவரது திரைப்பட வரலாற்றில் ஒரு மைல்கல் சாதனையாகத் திகழ்வது அவள் அப்படித்தான் என்னும் திரைப்படம். இதில் தாம் சந்தித்த தொடர் தோல்விகளின் காரணமாக, சமூகத்தின் மீதும் வாழ்க்கையின் மீதும் நம்பிக்கை அற்றுப்போன பெண்ணின் கதாபாத்திரத்தினை மிக இயல்பாக சித்தரித்திருந்தார். இப்படத்தின் சிறந்த நடிப்புக்காக தமிழக அரசின் சிறந்த நடிகை விருது பெற்றார்.[6]
முக்கியமான படங்கள்
- முருகன் காட்டிய வழி (1974)
- அவள் ஒரு தொடர்கதை (1974)
- பணத்துக்காக (1974)
- பட்டிக்காட்டு ராஜா (1975)
- தங்கத்திலே வைரம் (1975)
- மோகம் முப்பது வருஷம் (1976)
- தசாவதாரம் (1976)
- ஆட்டுக்கார அலமேலு (1977)
- ஆடு புலி ஆட்டம் (1977)
- மாங்குடி மைனர் (1978)
- பைரவி (1978)
- இளமை ஊஞ்சலாடுகிறது (1978)
- சட்டம் என் கையில் (1978)
- அவள் அப்படித்தான் (1978)
- தாய் மீது சத்தியம் (1978)
- திரிசூலம் (1979)
- அன்னை ஓர் ஆலயம் (1979)
- மங்களவாத்தியம் (1979)
- நீயா (1979)
- நட்சத்திரம் (1980)
- பில்லா (1980)
- தீ (1981)
- ராம் லட்சுமண் (1981)
- சவால் (1981)
- சிம்லா ஸ்பெஷல் (1982)
- வாழ்வே மாயம் (1982)
- நானே வருவேன் (1992)
தெலுங்குத் திரைப்படம்
- அந்துலேனி கதா
- சிலகம்மா செப்பந்தி
கன்னடத் திரைப்படம்
- மரியா மை டார்லிங் (1980)
இவற்றில் நீயா மற்றும் நட்சத்திரம் ஆகிய படங்களை இவர் தயாரித்து நடித்திருந்தார்.[7] 'நானே வருவேன்', 'திருஷ்யம்' (தெலுங்கு) போன்ற சில படங்களை இயக்கியுள்ளார்.
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.