![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5f/Emblem_of_Sri_Lanka.svg/langta-640px-Emblem_of_Sri_Lanka.svg.png&w=640&q=50)
இலங்கைப் பிரதமர்களின் பட்டியல்
விக்கிப்பீடியா:பட்டியலிடல் / From Wikipedia, the free encyclopedia
1947 ஆம் ஆண்டில் இலங்கையில் பிரதமர் பதவி உருவாக்கப்பட்டதில் இருந்து இதுவரையில் 14 பேர் பிரதமர்களாகப் பதவியேற்றுள்ளனர். 1978 வரை பிரதமரே அரசுத்தலைவராகவும் இருந்தார். 1978 இல், அபோதைய பிரதமர் ஜே. ஆர். ஜெயவர்தனா நிறைவேற்றதிகாரம் கொண்ட சனாதிபதி ஆட்சிமுறையை அறிவித்தார். இதன் மூலம் பிரதமரின் அதிகாரங்கள் பெருமளவில் குறைக்கப்பட்டன. சனாதிபதி நாட்டுத் தலைவராகவும், அரசுத் தலைவராகவும் ஆனார்.[1] பிரதமர் பதவி சம்பிரதாயபூர்வமான பதவியாக ஆனது.[2]
2015 ஏப்ரல் 28 இல், நாடாளுமன்றம் 19வது திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்தியது. இதன்படி, சனாதிபதியின் சில அதிகாரங்கள் பிரதமருக்குக் கொடுக்கப்பட்டன.[3]
1947 ஆம் ஆண்டு முதல் பதவியில் இருந்த 14 பிரதமர்களில் ரணில் விக்கிரமசிங்க நான்கு தடவைகளும்,[4] டட்லி சேனநாயக்கா, சிறிமாவோ பண்டாரநாயக்கா ஆகியோர் மூன்று தடவைகளும், இரத்தினசிறி விக்கிரமநாயக்க இரு தடவைகளும் பிரதமர்களாக இருந்துள்ளனர். ஐந்து பிரதமர்கள் சனாதிபதிகளாகப் பதவியேற்றனர். தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 2015 சனவரி 9 முதல் பிரதமராகப் பதவியில் உள்ளார்.[5]