![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/7/76/Raja_Bhoj_International_Airport_%2528BHO%2529_Bhopal_India.jpg/640px-Raja_Bhoj_International_Airport_%2528BHO%2529_Bhopal_India.jpg&w=640&q=50)
இராஜா போஜன் வானூர்தி நிலையம்
From Wikipedia, the free encyclopedia
இராஜா போஜன் வானூர்தி நிலையம் (Raja Bhoj Airport) (ஐஏடிஏ: BHO, ஐசிஏஓ: VABP) என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் தலைநகரான போபாலிற்கு வானூர்தி சேவையாற்றும் விமான நிலையமாகும். இது போபாலில் அமைந்துள்ள முதன்மையான வானூர்தி நிலையமாகும். 10ஆம் நூற்றாண்டின் பரமாரப் பேரரசு மன்னர் போஜனின் பெயர் இந்நிலையத்திற்கு இடப்பட்டுள்ளது. இந்தூரில் உள்ள தேவி அகில்யாபாய் ஓல்கர் வானூர்தி நிலையத்தினைத் தொடர்ந்து மத்தியப் பிரதேசத்தின் இரண்டாவது பெரிய வானூர்தி நிலையம் இதுவாகும்.
இராஜா போஜன் வானூர்தி நிலையம் Raja Bhoj Airport | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||||||||
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||||||
உரிமையாளர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||||||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||||||
சேவை புரிவது | போபால், செஹோர், கோசாங்காபாத், ரெய்சென் மத்தியப் பிரதேசம் | ||||||||||||||
அமைவிடம் | காந்திநகர், போபால் | ||||||||||||||
உயரம் AMSL | 1,719 ft / 524 m | ||||||||||||||
ஆள்கூறுகள் | 23°17′15″N 077°20′15″E | ||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
| |||||||||||||||
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2019 - மார்சி 2020) | |||||||||||||||
| |||||||||||||||
இது போபாலின் வடமேற்குப் பகுதியில், நகரத்தின் மையத்திலுள்ள போபால் சந்திப்பு தொடருந்து நிலையத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும், நகரின் தெற்கே உள்ள ஹபீப்கஞ்ச் தொடருந்து நிலையத்திலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம் தேசிய நெடுஞ்சாலை 46 (போபால் சுற்றுச் சாலை) மற்றும் போபாலை இந்தூருடன் இணைக்கும் மாநில நெடுஞ்சாலை 18 ஆகியவற்றின் சந்திப்புக்கு அருகில் உள்ளது.