![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4c/Narendra_Modi%2527s_cabinet%252C_2014.jpg/640px-Narendra_Modi%2527s_cabinet%252C_2014.jpg&w=640&q=50)
இந்தியக் குடியரசின் 16வது அமைச்சரவை
From Wikipedia, the free encyclopedia
நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை அல்லது 2014 இந்தியாவின் மத்திய அமைச்சரவை, ஒன்பது கட்டங்களாக ஏப்ரல் 7 முதல் மே 12, 2014 வரை நடைபெற்ற பொதுத் தேர்தலை அடுத்து பதவியேற்ற அமைச்சரவையாகும். மே 16, 2014 அன்று வெளியான தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பதினாறாவது மக்களவை அமைக்கப்பட்டது. இந்த மக்களவையின் பெரும்பான்மை விருப்பத்தைப் பெற்ற நரேந்திர மோதி 15வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரும் இவரது அமைச்சர்களும் மே 26, 2014 அன்று பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பல துறைகளை ஒருங்கிணைத்து 71 பேர் கொண்ட முந்தைய அமைச்சரவைக்கு மாறாக 45 பேர் அடங்கிய அமைச்சரவை "சிறிய அரசு சிறப்பான அரசாண்மை" என்ற முழக்கத்துடன் பதவியேற்றது.[1]
விரைவான உண்மைகள் நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை, உருவான நாள் ...
நரேந்திர மோதியின் முதல் அமைச்சரவை | |
---|---|
21வது அமைச்சரவை - இந்தியா | |
உருவான நாள் | 26 மே 2014 |
மக்களும் அமைப்புகளும் | |
அரசுத் தலைவர் | நரேந்திர மோதி |
நாட்டுத் தலைவர் | பிரணப் முகர்ஜி |
உறுப்புமை கட்சி | பாரதிய ஜனதா கட்சி (தே.ஜ.கூ) |
சட்ட மன்றத்தில் நிலை | பெரும்பான்மை |
வரலாறு | |
தேர்தல்(கள்) | 2014 |
Legislature term(s) | 5 ஆண்டுகள் |
முந்தைய | மன்மோகன் சிங்கின் இரண்டாம் அமைச்சரவை |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/4c/Narendra_Modi%27s_cabinet%2C_2014.jpg/640px-Narendra_Modi%27s_cabinet%2C_2014.jpg)