இந்தியப் பாதுகாப்புப் படைகள்
இந்தியக் குடியரசின் முப்படைகள் / From Wikipedia, the free encyclopedia
இந்திய இராணுவ படைகள் (தேவநாகரி: भारतीय सशस्त्र सेनाएं) இந்திய குடியரசின் இராணுவ படைகள் ஆகும். இந்திய இராணுவம், இந்திய கடற்படை, இந்திய விமான படை மற்றும் இந்திய கரையோர பாதுகாப்பு படை என நான்கு தொழில்முறை சீருடை அணிந்த சேவைகளாக செயல்படுகின்றன. இந்திய ஜனாதிபதி இராணுவ தலைமை கமாண்டராக இருக்கிறார், மேலும் இந்திய இராணுவப் படை ஒரு நான்கு நட்சத்திர இராணுவ தளபதியால் கட்டுப்படுத்தப்பட்டுகிறது. மேலும், இந்திய ஆயுதப்படைக்கு பல துணைப்படை அமைப்புகள் (அசாம் ரைபிள்ஸ் மற்றும் சிறப்பு எல்லைப்புற பாதுகாப்பு படை) மற்றும் சேவைகளிடை உளவுத்துறை நிறுவனங்கள் துணைபுரிகின்றன.
இந்திய இராணுவப் படைகள் Bharatiya Shashastra Senaen | |
---|---|
Emblem of India | |
சேவை கிளைகள் | இந்தியத் தரைப்படை இந்தியக் கடற்படை |
தலைமைத்துவம் | |
முதற் பெரும் படைத்தலைவர் | இந்தியக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு |
பாதுகாப்புத் துறை அமைச்சகம் | ராஜ்நாத் சிங் |
பாதுகாப்பு படைகளின் தலைவர் | ஜெனரல் பிபின் இராவத் |
ஆட்பலம் | |
படைச்சேவை வயது | 18 [1] |
கட்டாயச் சேர்ப்பு | None |
இராணுவ சேவைக்கு தயாரான நபர்கள் | 319,129,420 ஆண்கள், வயது 16–49 (2010 est.), 296,071,637 பெண்கள், வயது 16–49 (2010 est.) |
படைச்சேவைக்கு ஏற்றவர் | 249,531,562 ஆண்கள், வயது 16–49 (2010 est.), 240,039,958 பெண்கள், வயது 16–49 (2010 est.) |
ஆண்டு தோறும் படைத்துறை வயதெட்டுவோர் | 12,151,065 ஆண்கள் (2010 est.), 10,745,891 பெண்கள் (2010 est.) |
பணியிலிருப்போர் | 1,325,000 (தரவரிசை 3-வது) |
இருப்புப் பணியாளர் | 2,142,821 |
செலவுகள் | |
நிதியறிக்கை | US$ 46.1 billion (FY12)[2] (ranked 8th) |
மொ.உ.உ இன் சதவீதம் | 2.5% (2012 est.) |
தொழிற்துறை | |
உள்நாட்டு வழங்குனர் | இயந்திரா இந்தியா ஆர்மர்டு வெகிகல்ஸ் நிகாம் லிமிடெட் இந்திய மேம்பட்ட ஆயுதங்கள் மற்றும் உபகரண உற்பத்தி நிறுவனம், முனிசன்ஸ் இந்தியா லிமிடெட், ட்ரூப் கம்ஃபோர்ட்ஸ் லிமிடெட், கிளைடர்ஸ் இந்தியா லிமிடெட் இந்தியா ஆப்டெல் லிமிடெட் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் Bharat Electronics Limited Bharat Earth Movers Limited பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் மசாகன் கப்பல் கட்டும் நிறுவனம் Goa Shipyard Limited Garden Reach Shipbuilders and Engineers Mishra Dhatu Nigam[3] |
வெளிநாட்டு வழங்குனர் | உருசியா[2] இசுரேல்[2] பிரான்சு[2] ஐக்கிய அமெரிக்கா[2] |
ஆண்டு இறக்குமதி | US$ 24 billion (2000-2011)[4][5][6] |
ஆண்டு ஏற்றுமதி | US$ 167 million (2000-2011)[4] US$ 184 million (2010-12)[7] |
தொடர்புடைய கட்டுரைகள் | |
வரலாறு | இந்திய படைத்துறையின் வரலாறு Presidency armies British Indian Army இந்தியத் தேசிய இராணுவம் |
தரங்கள் | Air Force Army Navy |
இந்திய ஆயுதப்படைகள் மத்திய பாதுகாப்பு அமைச்சரின் தலைமையிலான மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் (MoD) நிர்வாகத்தின் கீழ் இருக்கின்றன.இந்திய இராணுவம் 1.3 மில்லியன் தீவிர ஊழியர்கள் கொண்டு உலகின் 3 வது மிக பெரிய இராணுவ சக்தியாக இருக்கிறது.
இந்திய ஆயுத படைகள் 1947, 1965 மற்றும் 1971 ல் இந்திய-பாகிஸ்தான் போர், 1971, கோவா படையெடுப்பு, இந்திய சீன போர், கார்கில் போர் மற்றும் சியாச்சின் மோதல் உட்பட பல முக்கிய இராணுவ நடவடிக்கைளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஆயுதப் படையானது உலகின் மிகப்பெரிய இராணுவங்களில் ஒன்றாகும்.
இந்திய இராணுவமே உலகின் மிக பெரிய ஆயுதங்களை இறக்குமதி செய்யும் நாடாக உள்ளது.[8] தற்போது ரஷ்யா, இஸ்ரேல், பிரான்ஸ் மற்றும் அமெரிக்கா இந்திய இராணுவத்திற்கு உபகரணங்கள் அளிக்கும் முதன்மை வெளிநாடுகள் ஆகும்.[9][10][11]. ஏறக்குறைய 1.32 மில்லியன் செயலார்ந்த படைகளையும் , 2.14 மில்லியன் இருப்பு படைகளையும் கொண்டுள்ளது. இந்தியா $ 36.03 பில்லியன் இராணுவத்திற்காக செலவிடுகிறது.இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.83% ஆகும்.