அமெரிக்க அணுசக்தி அறிவியலாளர் From Wikipedia, the free encyclopedia
ஆல்பர்ட் கியோர்சோ (ஜூலை 15, 1915 - டிசம்பர் 26, 2010) ஒரு அமெரிக்க அணுசக்தி அறிவியலாளரும் தனிம அட்டவணையில் 12 தனிமங்களைக் கண்டுபிடித்த இணை கண்டுபிடிப்பாளரும் ஆவார். அவரது ஆராய்ச்சி வாழ்க்கை 1940 களின் முற்பகுதியிலிருந்து 1990 களின் பிற்பகுதி வரை ஆறு பதின்ம ஆண்டு காலம் நீடித்தது.
1970 ஆம் ஆண்டல் ஆல்பர்ட் கியோர்சா | |
பிறப்பு | சூலை 15, 1915 வாலேஜோ, கலிபோர்னியா, அமெரிக்க ஐக்கிய நாடுகள் |
---|---|
இறப்பு | திசம்பர் 26, 2010 95) பெர்க்கிலி, கலிபோர்னியா, U.S. | (அகவை
தேசியம் | அமெரிக்கர் |
துறை | அணுக்கரு இயற்பியல் |
நிறுவனம் | லாரன்சு பெர்க்லி தேசிய ஆய்வகம் |
அறியப்பட்டது | வேதித்தனிமங்கள் கண்டுபிடிப்பு |
பரிசுகள் | 2004 வாழ்நாள் சாதனையாளர் விருது (கதிரியக்க வேதியியல் கழகம்),[1] தி போட்ஸ் பதக்கம் (பிராங்க்ளின் நிறுவனம்), ஜி. டி. சியர்ள் அண்ட் கோ விருது (அமெரிக்க வேதியியல் கழகம்), கௌரவ முனைவர் பட்டம் (கஸ்டாவஸ் அடோல்பஸ் கல்லூரி), ஆய்வாளர் (கலை மற்றும் அறிவியல் அமெரிக்க அகாதெமி), ஆய்வாளர் (அமெரிக்க இயற்பியல் கழகம்), உலக சாதனைகளுக்கான கின்னஸ் புத்தகம் (அதிக தனிமங்கள் கண்டுபிடிப்பு) |
கியோர்சோ 1915 ஆம் ஆண்டு சூலை 15 ஆம் நாள் கலிபோர்னியாவில் இத்தாலிய மற்றும் எசுப்பானிய வம்சாவளியில் பிறந்தார்.[2] இவர் ஆலமீடாவில் வளர்ந்தார். ஒரு பதின்பருவத்தினராக, இவர் கதிரியக்க சுற்றிணைப்பை இராணுவ பயன்பாட்டிற்கு வெளியே அமைத்ததன் காரணமாக புகழ் பெற்றார்.[3]
இவர் மின் பொறியியலில் தனது இளம் அறிவியல் பட்டத்தை (பெர்க்லி) கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் 1937 ஆம் ஆண்டில் பெற்றார். தனது பட்டப்படிப்பிற்குப் பிறது இவர் அரசிற்கு கதிரியக்கக் கண்டுபிடிப்பான்களை விநியோகம் செய்யும் வணிகத்தில் ஈடுபட்டிருந்த ஒரு முன்னணி அமெச்சூர் கதிரியக்க இயக்க நிறுவனமான ரெஜிலாந்து டிப்பெட்சு நிறுவனத்தில் பணிபுரிந்தார். இத்தகைய கருவிகளை உருவாக்கும் கியோர்சோவின் திறன் மற்றும் மின்னணுவியல் செயல்களை நிகழ்த்தும் திறன் காரணமாகவும், இவர் பெர்க்கிலியில் இருந்த கலிபோர்னியா பல்கலைக்கழக கதிரியக்க ஆய்வகத்தில் பணிபுரிந்த அணுக்கரு ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர்களுடனும் குறிப்பாக கிளென் டி. சீபார்க்கிடமும் இவருக்குத் தொடர்புகள் ஏற்பட்டது.[4]
ஆல்பர்ட் கியோர்சோ பின்வரும் தனிமங்களின் இணை கண்டுபிடிப்பாளர் என்ற பெருமைக்குரியவர் [5]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.