ஆலந்தூர்
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
ஆலந்தூர் (Alandur), இந்தியாவின், தமிழ்நாட்டின், சென்னையின் புறநகர்ப் பகுதிகளுள் ஒன்றாகும். இது, வடக்கு மற்றும் கிழக்கில் கிண்டி, தெற்கில் ஆதம்பாக்கம், தென்மேற்கில் பழவந்தாங்கல் மற்றும் வடமேற்கில் பரங்கிமலை ஆகியவற்றால் சூழப்பட்டுள்ளது. 2011 நிலவரப்படி, ஆலந்தூர் மக்கள் தொகை 1,64,430 ஆகும். ஆலந்தூரின் நகர ஒருங்கிணைப்பு 2030-ஆம் ஆண்டளவில் 3,00,000 மக்கள் தொகையைக் கொண்டிருக்கும். ஆலந்தூரில் இந்திய ராணுவத்தின் அதிகாரிகள் பயிற்சி அகாடமி மற்றும் அண்டை பகுதிகளான புனித தோமையார் மலை கன்டோன்மென்ட் மற்றும் அருகிலுள்ள நகரங்களான கிண்டி மற்றும் ஆதம்பாக்கம் உள்ளன. தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வரான எம். ஜி. ராமச்சந்திரன், 1967-இல் ஆலந்தூரிலிருந்து தனது முதல் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கினார். சென்னையின் புகழ்பெற்ற அடையாளங்களான நேரு சிலை மற்றும் கத்திப்பாரா சந்திப்பு ஆகியவற்றையும் ஆலந்தூர் கொண்டுள்ளது.
ஆலந்தூர் | |
---|---|
ஆள்கூறுகள்: 12.997500°N 80.200600°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை |
புறநகர் | சென்னை |
அரசு | |
• ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
• முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
• மாவட்ட ஆட்சியர் | மருத்துவர். ஜெ. விஜய ராணி, இ. ஆ. ப |
ஏற்றம் | 39 m (128 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,64,430 |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
வாகனப் பதிவு | TN-22 |
மக்களவைத் தொகுதி | திருப்பெரும்புதூர் |
சட்டமன்றத் தொகுதி | ஆலந்தூர் |
இவ்வூரின் அமைவிடம் 13.03°N 80.21°E ஆகும்.[3] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 12 மீட்டர் (39 அடி) உயரத்தில் இருக்கின்றது.
சென்னை மத்திய தொடருந்து நிலையத்திலிருந்து 16 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்திலிருந்து 14 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து 12 கிலோமீட்டர் தொலைவிலும், ஆலந்தூர் அமைந்துள்ளது.
ஆலந்தூர் சாலை பல நகரங்களுக்கு செல்லும் சாலை அமைப்புடன் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. கத்திப்பாரா சந்திப்பு, ஆலந்தூரில் உள்ளது; இதன் வழியாக சென்னையின் பிற நகருக்கு செல்லும் பேருந்துகள் செல்கின்றன.
அருகிலுள்ள தொடருந்து நிலையம் பரங்கிமலை தொடருந்து நிலையம் ஆகும்; புறநகர் இரயில்வே, தெற்கு இரயில்வே, மெட்ரோ இரயில், எம். ஆர். டி. எஸ். மற்றும் பொது பேருந்துகள் ஆகிய ஐந்து பொதுப் போக்குவரத்திற்கு இடமளிக்கும் திட்டங்கள் உள்ளன.
இங்கிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில், சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையம் உள்ளது.
மதவாரியான கணக்கீடு | ||||
---|---|---|---|---|
மதம் | சதவீதம்(%) | |||
இந்துக்கள் | 84.09% | |||
முஸ்லிம்கள் | 7.08% | |||
கிறித்தவர்கள் | 7.94% | |||
சீக்கியர்கள் | 0.06% | |||
பௌத்தர்கள் | 0.04% | |||
சைனர்கள் | 0.25% | |||
மற்றவை | 0.51% | |||
சமயமில்லாதவர்கள் | 0.03% |
ஆண்டு | ம.தொ. | ±% |
---|---|---|
1981 | 97,449 | — |
1991 | 1,25,244 | +28.5% |
2001 | 1,46,154 | +16.7% |
2011 | 1,64,430 | +12.5% |
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,64,430 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். ஆலந்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 88%, பெண்களின் கல்வியறிவு 81% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விடக் கூடியதே. ஆலந்தூர் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
எம். ஜி. ஆர். சந்தை அல்லது ஆலந்தூர் மளிகை சந்தை சுமார் 200 ஆண்டுகள் பழமையானது. இது எம். கே. என். சாலையின் நடுவில் அமைந்துள்ளது (எம். கே. என். சாலை கிண்டியில் இருந்து தொடங்கி ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் முடிகிறது).
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.