அந்தீசு மலைத்தொடர் (Andes) உலகின் மிக நீளமான மலைத் தொடர் ஆகும். இது, தென் அமெரிக்காவின், மேற்குக் கரையோரமாகத் தொடரான உயர்நிலப் பகுதியை உருவாக்குகின்றது. 7,000 கி.மீ (4,400 மைல்கள்) நீளமும், சில பகுதிகளில் 500 கி.மீ வரை அகலமும் கொண்ட ஆண்டீய மலைத்தொடர் சராசரியாக 4,000 மீட்டர் (13,000 அடி) உயரமானது. நில கிடைவரைக் கோடுகள் தெற்கு 18° முதல் 20° வரையில் உள்ள பகுதிகள் மிக அகலமானவை (18° to 20°S latitude). அந்தீசு மலைத்தொடரில் மிகவும் உயரமான மலை முகடு அக்கோன்காகுவா (உயரம் 6,962 மீ (22,841 அடி)) ஆகும். இமயமலைத் தொடருக்கு அடுத்தாற்போல் உலகிலேயே அதிக உயரமான மலைகள் இந்த அந்தீசு மலைத்தொடரில்தான் உள்ளன. உயரத்தில் இமயமலையை நெருங்க முடியாவிட்டாலும், நீளத்தில் இம்மலைத்தொடர் இமயமலைத்தொடரைப்போல இரு மடங்கு நீளமானது. அகலத்திலும் இமயமலைத்தொடருக்கு ஈடாக நிற்பது. அந்தீசு மலைத்தொடரானது தென் அமெரிக்காவில் உள்ள அர்ஜென்டினா, பொலிவியா, சிலி, கொலம்பியா, ஈக்வெடோர்,பெரு, வெனிசூயெலா ஆகிய ஏழு நாடுகள் ஊடாக வடக்குத் தெற்காக எழுந்து நிற்கின்றது. உயர்மலைகளைக் கொண்ட இந்நாடுகளை அந்தீசு நாடுகள் என்று அழைப்பதும் வழக்கம்.
இந்த மலைத்தொடரானது அதன் இயற்கை அமைப்பால் பல எல்லைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆண்டிஸ் மலைப் பகுதியில் பல உயர்ந்த பீடபூமிகளின் இருப்பிடமாக உள்ளது - சிலவற்றில் கித்தோ, பொகோட்டா, அரேக்கிப்பா, மெதெயின், சுக்ரே, மெரிடா மற்றும் லா பாஸ் போன்ற முக்கிய நகரங்கள் அமைந்துள்ளன. திபெத்திய பீடபூமிக்கு அடுத்து உலகின் இரண்டாவது மிக உயரமான பீடபூமியான அலிப்ளானோ பீடபூமி இம் மலைத்தொடர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த மலைப் பகுதியின் எல்லைகள் காலநிலை அடிப்படையில் மூன்று முக்கிய பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன அவை: வெப்ப மண்டல ஆண்டிஸ், உலர் ஆண்டிஸ், மற்றும் வெப்பமண்டல மழை மிகுந்த ஆண்டிஸ் போன்றவை ஆகும்.
ஆசியா கண்டத்துக்கு வெளியே உள்ள உலகின் மிக உயரமான மலைகளைக் கொண்ட மலைத்தொடர் ஆண்டிஸ் ஆகும். ஆசியாவிற்கு வெளியே உள்ள மிக உயர்ந்த மலை, அக்கோன்காகுவா மலை, கடல் மட்டத்திலிருந்து 6,961 மீ (22,838 அடி) உயரம் கொண்டதாக உள்ளது. புவியின் சுழற்சியின் விளைவாக பூமியின் மேற்பரப்பில் உள்ள வேறு எந்த இடத்தையும் விட பூமியின் மையத்திலிருந்து எக்குவடோர் ஆண்டிஸி மலையில் உள்ள சிம்போரசோ மலை உச்சி கூடிய தூரத்தில் உள்ள இடம் ஆகும் (புவி கிடையாகச் சற்று நீள்வட்ட வடிவில் உள்ளது.). புவியிலிருந்து விண்வெளிக்கு அருகே உள்ள இடமும் இதுவே. சிலி-அர்ஜென்டீனா எல்லையில் ஆண்டிஸ் மலைத் தொடரில் ஓஜோஸ் டெல் சலாடோ உள்ளிட்ட உலகின் மிக உயரமான எரிமலைகள் உள்ளன, இது 6,893 மீ (22,615 அடி) உயரும் கொண்டது.
வட அமெரிக்கா, நடு அமெரிக்கா, தென் அமெரிக்கா, அண்டார்டிகா பகுதிவரை "முதுகெலும்பு" போல உருவான மலைத்தொடர்களின் தொடர்ச்சியான தொடர்வரிசைகளைக் கொண்டிருக்கும் மலைத்தொடர்களின் சங்கிலி, ஆண்டிஸ் அமெரிக்கன் கார்டில்லெராவின் பகுதியாகும்.
ஆண்டீய மலைத்தொடர் முக்கியமாக கிழக்கத்திய கோர்டில்லேரா[1](Cordillera Oriental) எனப்படும் மலையடுக்கும், மேற்கத்திய கோர்டில்லேரா (Cordillera Occidental) என அழைக்கப்படும் மலையடுக்கும் ஆகிய இரண்டு பெரும் மலைத்தொடர்களை உள்ளடக்கியுள்ளது.
அந்தீசு மலைத்தொடரில் உள்ள சில உயரமான மலை முகடுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. இம்மலை முகடுகளைப் பற்றி எண்ணும் பொழுது, அலாஸ்க்கா மலைத்தொடரில் உள்ள மெக்கின்லி மலையைத்தவிர வட அமெரிக்காவிலோ, ஐரோப்பாவிலோ, ஆப்பிரிக்காவிலோ, ஆஸ்திரேலியாவிலோ 6000 மீட்டருக்கும் உயரமான மலைகள் எங்கும் இல்லை என்பதை நினைவில் கொள்ளுதல் வேண்டும்.
பெயராய்வு
ஆண்டிஸ் என்ற வார்த்தையின் சொற்பிற்பு பற்றி விவாதிக்கப்பட்டது. பெரும்பான்மையினரின் ஒருமித்த கருத்தாக கெச்வா மொழிச் சொலான ஆண்டி என்ற சொல்லில் இருந்து இது உருவானது என கருதப்படுகிறது, இச்சொல்லின் பொருள் "கிழக்கு"[2] அதாவது அன்டிசுயுவில் ("கிழக்குப் பிராந்தியத்திற்கான கௌசோவா"),[2] இன்கா பேரரசின் நான்கு பிராந்தியங்களில் ஒன்றாகும்.
நிலவியல்
- ஆண்டிஸ் மலைத்தொடரை மூன்று பிரிவுகள் பிரிக்கலாம்:
- அர்ஜெண்டினா மற்றும் சிலி ஆகிய இடங்களில் உள்ள தெற்கு ஆண்டிஸ்;
- எக்குவடோர், பெரு மற்றும் பொலிவியாவில் நடு ஆண்டிஸ்
வெனிசுலா மற்றும் கொலம்பியாவில் உள்ள வடக்கு ஆண்டிசானது, மேற்கு, மத்திய மற்றும் கிழக்கு என மூன்று இணை எல்லைகளைக் கொண்டது.
ஆண்டிஸின் வடக்கு பகுதியானது, சியரா நெவாடா டி சாண்டா மார்தா தீவு மலைத்தொடர் பெரும்பாலும் ஆண்டிசின் பகுதியாக கருதப்படுகிறது. ஆண்டிசு மலைப்பகுதி அதன் நீளம் முழுவதும் 200 கிமீ (124 மைல்) அகலத்தில் உள்ளது, இதில் 640 கிலோமீட்டர் (398 மைல்) அகலம் கொண்ட பொலிவிய பகுதி ஒரு விதிவிலக்கு ஆகும்.
மலைப்பிறப்பு
அந்தீசு மலைத்தொடரின் உருவாக்கத்திற்கு முந்திய மலைப்பிறப்புகளுக்கு தென்னமெரிக்க நிலக்கீழ்த் தகடு காரணமாக அமைந்துள்ளது. தற்போதைய அந்தீசு மலைத்தொடரின் மலைப்பிறப்பு டிராசிக் காலமத்தில் (சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு) இருந்ததாகக் கொள்ளப்படும் தொடர் தரை பிரிவடையத் தொடங்கியபோது ஏற்பட்ட மோதல்களின் விளைவாக ஏற்பட்டது. இது ஜுராசிக் காலத்திலும் தொடர்ந்தது. இம்மலையின் தற்போதைய தோற்றம் கிரீத்தேசியக் காலத்தில் ஏற்பட்டதாகும்.
காலநிலை
அந்தீசு மலைத்தொடரின் காலநிலை அமைவிடம், உயரம் மற்றும் கடலிலிருந்தான தூரம் என்பவற்றுடன் பெரிதும் மாறுபடுகின்றது. இதன் தென்பகுதி குளிர்ந்ததாகவும் அதிக மழை கொண்டதாகவும் காணப்படுகின்றது. மத்திய பகுதி பெரும்பாலும் உலர் வலயமாகவும் வடபகுதி மழையுடன் கூடிய மிதமான வெப்பமான பிரதேசமாகவும் விளங்குகின்றன.
தாவரங்களும் விலங்குகளும்
இம்மலைத்தொடரில் சுமார் 30,000 வகையான கலன்றாவரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் அரைவாசி இப்பிரதேசத்திற்கு உரியவை. மேலும் இங்கு சுமார் 3,500 வரையான விலங்கு வகைகள் காணப்படுகின்றன. இவற்றில் 600 வகையான பாலூட்டிகளும் 1,700 வகையான பறவைகளும் அடங்கும்.
அர்ஜென்டினா-சிலி நாடுகளில் உள்ள மலை முகடுகள்
- ஓஃகோஸ் டெல் சலாடோ (Ojos del Salado), 6,893 மீ
- நெவாடோ டிரேஸ் குரூசெஸ் (Nevado Tres Cruces), 6,749 மீ (தென் முகடு) (III Region)
- யுல்யையையாக்கோ (Llullaillaco), 6,739 மீ
- இன்க்காவுசி (Incahuasi), 6,620 மீ
- டுப்புன்காட்டோ (Tupungato), 6,570 மீ
- நாசிமியென்ட்டோ (Nacimiento), 6,492 மீ
- சியெர்ரா நெவாடா டெ லகூனாஸ் பிராவாஸ் (Sierra Nevada de Lagunas Bravas), 6,127 மீ
- மார்மோலேஃகோ (Marmolejo), 6110 மீ
- சோக்கோம்ப்பா (Socompa), 6,051 மீ
- ஃவால்சோ ஆசுஃவ்ரே (Falso Azufre), 5,890 மீ
- லாஸ்ட்டாரியா (Lastarria), 5,697 மீ
- ஓல்க்கா (Olca), 5,407 m
- செர்ரோ பாயோ [3](Cerro Bayo), 5,401 மீ (m)
- கோர்டோன் டெல் ஆசுஃவ்ரே (Cordón del Azufre), 5,463 மீ
- செர்ரோ எஸ்க்கோரியால் (Cerro Escorial), 5,447 மீ
- மைப்போ எரிமலை (Maipo)), 5,264 மீ
- செர்ரோ சால்ட்டென்(Cerro Chaltén), 3,375 மீ or 3,405 மீ, பட்டகோனியா, இது செர்ரோ ஃவிட்ஸ் அல்லது செர்ரோ ஃவிட்ஸ் ராய் (Cerro Fitz Roy) என்றும் அழைக்கப்படுகின்றது.
பொலிவியா நாட்டில் உள்ள மலை முகடுகள்
- நெவாடோ சஃகாமா (Nevado Sajama), 6,542 மீ
- இல்யாமனி அல்லது இயாமனி (Illimani), 6,438 மீ
- அன்க்கோவுமா(Ancohuma), 6,427 மீ
- இல்யாப்பு அல்லது இயாம்ப்பு (Illampu), 6,368 மீ
- உய்னா பொட்டோசி (Huayna Potosí), 6,088 மீ
- கபாரே (Cabaray), 5,860 மீ
- நெவாடோ அன்னாயாஃகசி (Nevado Anallajsi), 5,750 மீ
- மாச்சீசோ டெ லரான்க்காகுவா (Macizo de Larancagua), 5,520 மீ
- சக்கால்தயா (Chacaltaya), 5,421 மீ
- தாத்தா சபாயா (Tata Sabaya), 5,430 மீ
- மாச்சீசோ டெ பக்கூனி (Macizo de Pacuni), 5,400 மீ
- பாட்டியா பட்டா (Patilla Pata), 5,300 மீ
பொலிவியா-சிலி நாடுகளின் எல்லையில் உள்ள மலை முகடுகள்
- அக்கோட்டாங்கோ (Acotango), 6,052 மீ
- செர்ரோ மின்ச்சின்ச்சா (Cerro Minchincha), 5,305 மீ
- இறுபுட்டுன்க்கு (Irruputuncu), 5,163 மீ
- லிக்கான்காபுர் (Licancabur), 5,920 மீ
- ஓல்க்கா (Olca), 5,407 மீ
- பரினாக்கோட்டா எரிமலை (Parinacota), 6,348 மீ
- பருமா (Paruma), 5,420 மீ
- போமராப்பே (Pomerape), 6,282 மீ
சிலி நாட்டில் உள்ள மலை முகடுகள்
- மொன்டி சான் வலென்டின் (Monte San Valentin), 4,058 m (13,314 அடி)
- கோடியெல்லேரா டெல் பெய்ன் (Cordillera del Paine), 2,750 m (9,022 அடி)
- செரோ மக்கா (Cerro Macá) 2,300 m (7,546 அடி)
- மொன்டி டார்வின் (Monte Darwin) 2,500 m (8,202 அடி)
- வொல்கன் ஹட்சன் (Volcan Hudson) 1,900 m (6,234 அடி)
- செரோ காஸ்டிலோ டைனெவொர் (Cerro Castillo Dynevor) 1,100 m (3,609 அடி)
- மௌண்ட் டார்ன் (Mount Tarn) 825 m (2,707 அடி)
- பொல்லெராஸ் (Polleras) 5,993 m (19,662 அடி)
கொலம்பியா நாட்டில் உள்ள மலை முகடுகள்
- நெவாடோ டெல் ஹுயிலா (Nevado del Huila), 5,365 m (17,602 அடி)
- நெவாடோ டெல் ருயிஸ் (Nevado del Ruiz), 5,321 m (17,457 அடி)
- நெவாடோ டெல் டொலிமா (Nevado del Tolima), 5,205 m (17,077 அடி)
- பிக்கோ பான் டி அசுக்கார் (Pico Pan de Azucar), 5,200 m (17,060 அடி)
- ரிட்டாகுபா நேக்ரா (Ritacuba Negra), 5,320 m (17,454 அடி)
- நெவாடோ டெல் கம்பல் (Nevado del Cumbal), 4,764 m (15,630 அடி)
- செரோ நேக்ரோ டி மயஸ்கெர் (Cerro Negro de Mayasquer), 4,445 m (14,583 அடி)
- ரிட்டாகுபா பிளங்கோ (Ritacuba Blanco), 5,410 m (17,749 அடி)
- நெவாடோ டெல் குயின்டியோ (Nevado del Quindío), 5,215 m (17,110 அடி)
- புராசே (Purace), 4,655 m (15,272 அடி)
- சாந்தா இசபெல் (Santa Isabel), 4,955 m (16,257 அடி)
- டொனா ஜுவானா (Doña Juana), 4,150 m (13,615 அடி)
- கலேராஸ் (Galeras), 4,276 m (14,029 அடி)
- அசிஃப்ரல் (Azufral). 4,070 m (13,353 அடி)
ஈக்குவடோர் நாட்டில் உள்ள மலை முகடுகள்
- aன்டிசனா (Antisana), 5,752 m (18,871 அடி)
- கயம்பே Cayambe), 5,790 m (18,996 அடி)
- சிம்பொராசோ (Chimborazo), 6,268 m (20,564 அடி)
- கொராசோன் (Corazón), 4,790 m (15,715 அடி)
- கொட்டோபக்சி (Cotopaxi), 5,897 m (19,347 அடி)
- எல் அல்ட்டார் (El Altar), 5,320 m (17,454 அடி)
- இல்லினிசா (Illiniza), 5,248 m (17,218 அடி)
- பிச்சின்ச்சா (Pichincha), 4,784 m (15,696 அடி)
- குயிலோட்டோ (Quilotoa), 3,914 m (12,841 அடி)
- ரெவென்ராடோர் (Reventador), 3,562 m (11,686 அடி)
- சன்கே (Sangay), 5,230 m (17,159 அடி)
- துங்குராஹோ (Tungurahua), 5,023 m (16,480 அடி)
- திற்றிகச்சா (Titicacha), 5,035 m (16,519 அடி)
பெரு நாட்டில் உள்ள மலை முகடுகள்
- அல்ப்பமாயோ (Alpamayo), 5,947 m (19,511 அடி)
- அர்டேசொன்ராஜு (Artesonraju), 6,025 m (19,767 அடி)
- கரினிசேரோ (Carnicero), 5,960 m (19,554 அடி)
- சம்பி (Chumpi), 6,106 m (20,033 அடி)
- எல் மிஸ்ரி (El Misti), 5,822 m (19,101 அடி)
- எல் ரோறோ (El Toro), 5,830 m (19,127 அடி)
- ஹுவன்டோய் (Huandoy), 6,395 m (20,981 அடி)
- ஹுவஸ்கரன் (Huascarán), 6,768 m (22,205 அடி)
- ஜிரிசங்கா (Jirishanca), 6,094 m (19,993 அடி)
- புமசில்லு (Pumasillu), 5,991 m (19,656 அடி)
- ரசாக் (Rasaq), 6,040 m (19,816 அடி)
- ருன்டுய் (Runtuy), 5,870 m (19,259 அடி)
- சரப்பு (Sarapu), 6,127 m (20,102 அடி)
- செரியா நோர்டே (Seria Norte), 5,860 m (19,226 அடி)
- சியுலா கிரான்டே (Siula Grande), 6,344 m (20,814 அடி)
- வய்ட்டபல்லானா (Waytapallana), 5,557 m (18,232 அடி)
- யெருபஜா (Yerupaja), 6,635 m (21,768 அடி)
- யெருபஜா சிக்கோ (Yerupaja Chico), 6,089 m (19,977 அடி)
வெனிசுவேலா நாட்டில் உள்ள மலை முகடுகள்
- பிக்கொ பொலிவார் (Pico Bolívar), 5,007 m (16,427 அடி)
- பிக்கொ ஹம்போல்ட், 4,940 m (16,207 அடி)
- பிக்கொ பொன்பிலான்ட் (Pico Bonpland), 4,880 m (16,010 அடி)
- பிக்கொ லா கொஞ்சா (Pico La Concha), 4,870 m (15,978 அடி)
- பிக்கொ பியெட்றாஸ் பிளங்காஸ் (Pico Piedras Blancas), 4,740 m (15,551 அடி)
- பிக்கொ எல் அகியுலா (Pico El Águila), 4,180 m (13,714 அடி)
- பிக்கொ எல் ரோறோ (Pico El Toro) 4,729 m (15,515 அடி)
- பிக்கொ எல் லியோன் (Pico El León) 4,740 m (15,551 அடி)
- பிக்கொ முக்குனுக் (Pico Mucuñuque) 4,609 m (15,121 அடி)
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.