ஆசிய நெடுஞ்சாலை 45
From Wikipedia, the free encyclopedia
ஆசிய நெடுஞ்சாலை 45 அல்லது ஏஎச்45 (AH45), ஆசிய நெடுஞ்சாலைகள் வலையமைப்பின் ஒரு பகுதியாகும். இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் தொடங்கி, பெங்களூர் வரை செல்லும் இந்த நெடுஞ்சாலை இந்தியாவுக்கு உள்ளேயே அடங்கிவிடுகிறது. இதன் மொத்த நீளம் 1,513 கிலோமீட்டர்.
ஏஎச்1 நெடுஞ்சாலையை கொல்கத்தாவிலும், ஏஎச்43 சாலையை பெங்களூருக்கு அருகிலும் சந்திக்கும் இச் சாலையை ஏஎச்46 காரக்பூரில் சந்திக்கிறது. ஆசிய வலையமைப்பில் சென்னைக்கு ஊடாகச் செல்லும் ஒரே சாலை இதுவாகும்.