அஸ்தோது
From Wikipedia, the free encyclopedia
அஸ்தோது அல்லது அஸ்டோட் (Ashdod; எபிரேயம்: אַשְׁדּוֹד (audio)ⓘ; அரபு மொழி: اشدود, إسدود Isdud) என்பது இசுரேலில் ஆறாவது பெரிய நகரமும், அந்நாட்டின் தென் மாவட்டத்திலும், இசுரேலின் நடுநிலக் கடலில் கடற்கரைப்பகுதியில் டெல் அவீவ்வின் வடக்கிற்கும் (32 கிலோமீட்டர்கள் (20 மைல்கள்) தூரத்தில்) அஸ்கெலோனின் தெற்கிற்கும் (20 km (12 mi) தூரத்தில்) இடையே அமைந்துள்ள ஓரு நகராகும். கிழக்கில் எருசலேம் கிழக்கில் 53 km (33 mi) தொலைவில் உள்ளது.
அஸ்தோது
| |
---|---|
எபிரேயம் transcription(s) | |
• ISO 259 | ʔašdod |
Country | இசுரேல் |
உருவாக்கம் | 1956 |
அரசு | |
• வகை | நகர் (1968 முதல்) |
• மேயர் | யெகில் லசிறி |
பரப்பளவு | |
• மொத்தம் | 47,242 dunams (47.242 km2 or 18.240 sq mi) |
மக்கள்தொகை (2014)[1] | |
• மொத்தம் | 2,17,959 |
அஸ்தோது இசுரேலின் மிகப் பெரிய துறைமுகமாகும். அந்நாட்டின் 60% இறக்குமதி இதனூடாகவே இடம்பெறுகின்றன. இந் நகரம் ஒரு முக்கிய பிராந்திய தொழில்துறை மையமாகவும் உள்ளது.
தற்போதைய அஸ்தோத்தில் பண்டைய இரு இரட்டை நகரங்களை, ஒன்றை நிலத்தின் உட்பகுதியிலும் மற்றயதை கடற்கரையிலுமாக உள்வாங்கிக் கொண்டுள்ளது. ஒன்றுக்கொன்று நெருக்கமான உறவுகளால் இணைக்கப்பட்டிருந்ததுடன் அவற்றின் வரலாற்றில் இரண்டு தனித்தனி கூறுகளைக் கொண்டு இருந்தன.
அஸ்தோதின் முதலாவது ஆவணப்படுத்தப்பட்ட நகர்ப்புற குடியிருப்பு கி.மு. 17 ஆம் நூற்றாண்டின் கானான் கலாச்சாரத்திற்குச் செல்வதால்,[2] இதனை உலகின் மிகவும் பழைய நகரங்களில் ஒன்றாக்கிறது.
அஸ்தோது விவிலியத்தில் 13 தடவைகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடைய 1956 இற்கு முந்திய வரலாற்றுக் காலத்தில், இந்நகரில் பெலிஸ்தர், இசுரயேலர் குடியேறியதோடு, அலெக்சாண்டரின் வெற்றியை அடுத்து காலனியத்தினர், உரோமர், பைசாந்தியர், அராபியர், சிலுவைப் போர் வீரர்கள், உதுமானிய துருக்கியர் ஆகியோரும் அங்கு இருந்தனர்.[3]
புதிய அஸ்தோது பண்டைய நகரின் அருகேயுள்ள மணற்குன்றுகள் மீது 1956 இல் நிறுவப்பட்டு, 1968 இல் ஒரு நகரமாக இணைத்துக்கொள்ளப்பட்ட இது கிட்டத்தட்ட 60 சதுர கிலோமீட்டர்கள் (23 sq mi) நிலப் பகுதியைக் கொண்டது. இது ஒரு திட்டமிட்ட நகரமாக இருப்பதால், ஒரு பிரதான அபிவிருத்தித் திட்ட விரிவாக்கத்தைத் தொடர்ந்து, மக்கள் தொகை வளர்ச்சியின் மத்தியிலும் குடியிருப்புப் பகுதிகளில் போக்குவரத்து, வளி மாசடைதல் தடுப்பு ஆகிய வசதிகளைச் செய்கிறது.
இசுரேலிய மத்திய புள்ளிவிபரப் பணியகத்தின்படி, அஸ்தோது 2014 இல் 217,959 மக்கள் தொகை 47,242 டூனம்கள் (47.242 கிமி2; 18.240 ச. மைல்) பரப்பளவில் கொண்டிருந்தது.[4]