அவகாசியிலிக் கொள்கை
1857 ஆம் ஆண்டு புரட்சி / From Wikipedia, the free encyclopedia
வாரிசு இழப்புக் கொள்கை (Doctrine of Lapse) என்பது இந்தியாவிலிருந்த பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தில் 1848இலிருந்து 1856 வரை ஆளுநராக இருந்த டல்ஹளசி பிரபுவால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒன்றிணைப்புக் கொள்கையாகும்.[1]
வாரிசு இழப்புக் கொள்கையின்படி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் நேரடிச் செல்வாக்குக்குட்பட்ட மன்னரானவர் ஆட்சி புரிவதற்குத் தகுதியற்றவராகவோ அல்லது நேரடி வாரிசு இன்றி இறந்து போனாலோ அம்மன்னராட்சி, பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் ஆட்சியில் இணைக்கப்படும்.