![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/ef/ArRaqqah_collection.jpg/640px-ArRaqqah_collection.jpg&w=640&q=50)
அல்-றக்கா
சிரியாவில் உள்ள ஒரு நகரம் / From Wikipedia, the free encyclopedia
அல்-றக்கா (அரபு மொழி: الرقة அர்-ரக்கா), அல்லது றக்கா, ரக்கா, அற்-றக்கா என்பது சிரியாவில் புறாத்து ஆற்றின் வட கரையில் அலெப்போவுக்கு கிட்டத்தட்ட 160 கிலோமீட்டர்கள் (99 மைல்கள்) கிழக்கே அமைந்துள்ள ஒரு நகராகும். இது சிரியாவிலேயே பெரிய அணைக்கட்டாகிய தப்கா அணையிலிருந்து 40 கிலோமீட்டர்கள் (25 மைல்கள்) கிழக்கே அமைந்துள்ளது. இந்நகர் பொ.கா. 796 முதல் 809 வரையான காலப் பகுதியில் கலீபா ஹாறூன் அல்-றசீதின் ஆட்சியின் போது அப்பாசிய கலீபகத்தின் தலைநகராக விளங்கியது. 2004 ஆம் ஆண்டின் உத்தியோகபூர்வக் கணக்கெடுப்பின் படி 220,488[1] பேர் வசிக்கும் இந்நகர் சிரியாவின் ஆறாவது பெரிய நகராகும்.
அல்-றக்கா
الرقة | |
---|---|
நகரமும் நாகியாவும் | |
![]() அல்-றக்கா அல்-றக்கா வான் வெளி• புறாத்து ஆறு அல்-றக்கா நகரச் சுவர்• பகுதாது வாயில் பெண்கள் கோட்டை• உவைசுல் கர்னீ பள்ளிவாயல் | |
Country | ![]() |
முகாபழா | அல்-றக்கா |
மாவட்டம் | அல்-றக்கா |
நிறுவப்பட்டது | பொ.கா.மு. 244-242 |
ஆக்கிரமிப்பு | ![]() |
பரப்பளவு | |
• நகரம் | 1,962 km2 (758 sq mi) |
ஏற்றம் | 245 m (804 ft) |
மக்கள்தொகை (2004 கணக்கெடுப்பு)[1] | |
• நகரம் | 2,20,488 |
• அடர்த்தி | 110/km2 (290/sq mi) |
• நாகியா | 3,38,773 |
நேர வலயம் | ஒசநே+2 (கி.ஐ.நே.) |
• கோடை (பசேநே) | +3 |
P-Code | C5710 |
இடக் குறியீடு | 22 |
புவிசார் குறியீடு | SY110100 |
இணையதளம் | http://www.esyria.sy/eraqqa/ (அரபு மொழி) |
சிரிய உண்ணாட்டுப் போரின் போது இந்நகர் இசுலாமிய அரசினால் கைப்பற்றப்பட்டு சிரியாவில் அதன் தலைநகரமாக ஆக்கப்பட்டது. அதன் விளைவாக, இந்நகரின் மீது சிரிய அரசாங்கம், உருசியா, ஐக்கிய அமெரிக்கா, அறபு நாடுகள் என்பவற்றின் வான் தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டன. நகரின் சுன்னி பிரிவைச் சேராத பெரும்பாலான கட்டிடங்கள், குறிப்பாக சீஆக்களின் உவைசுல் கர்னீ பள்ளிவாயல் இசுலாமிய அரசினால் அழிக்கப்பட்டன.