From Wikipedia, the free encyclopedia
அலக்நந்தா ஆறு அல்லது அலக்கநந்தா ஆறு (Alaknanda River) இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் சிவாலிக் மலையில் உற்பத்தியாகும் ஒரு ஆறாகும்.
அலக்நந்தா ஆறு (अलकनंदा) | |
River | |
உத்தரகாண்ட், தேவப்பிரயாகையினுள்ளே பாயும் அலக்நாந்தா நதி. | |
நாடு | இந்தியா |
---|---|
மாநிலம் | உத்தரகாண்ட் |
பகுதி | கார்வால் கோட்டம் |
மாவட்டங்கள் | சமோலி, ருத்ரபிரயாக், பௌரி கர்வால் |
கிளையாறுகள் | |
- இடம் | சாரதா, தவுலிகங்கா, மந்தாகினி, பின்டார் |
- வலம் | நந்தாகினி |
உற்பத்தியாகும் இடம் | Confluence of Satopanth Glacier and Bhagirathi Kharak Glacier |
- உயர்வு | 3,880 மீ (12,730 அடி) |
Source confluence | பாகிரதி ஆறு |
கழிமுகம் | கங்கை ஆறு |
- அமைவிடம் | தேவப்பிரயாகை, உத்தரகாண்ட், இந்தியா |
- elevation | 475 மீ (1,558 அடி) |
நீளம் | 190 கிமீ (118 மைல்) |
வடிநிலம் | 10,882 கிமீ² (4,202 ச.மைல்) |
Discharge | |
- சராசரி | |
உத்தரகாண்ட் மாநிலத்தில் கார்வால் கோட்டம் வழியே பாயும் கங்கையின் இமாலய உற்பத்தி ஆறுகள். தேவப்பிரயாகையில் கங்கையின் இடது புறமுள்ள ஒர் துணை ஆறு அலக்நந்தா.
|
அலக்நந்தா ஆறு இமயமலைத் தொடரில் பனிப்பாறையில் இருந்து உருகி ஆறாக உற்பத்தியாகி இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் வழியாகப் பாயும் ஓர் ஆறு ஆகும். இந்நதி 196 கிலோமீட்டர் நீளம் கொண்டது. இந்த ஆறு சமோலி மாவட்டம், டெக்ரி கர்வால் மாவட்டம் மற்றும் பௌரி கர்வால் மாவட்டம் ஆகிய மாவட்டங்களின் வழியாகப் பாய்ந்தோடுகிறது. இந்த ஆறும், பாகீரதி ஆறும், தேவப்பிரயாகை என்னும் இடத்தில் இணைகிறது. பின் இங்கிருந்து கங்கை ஆறாக மாறுகிறது. இந்த ஆறே கங்கை ஆற்றின் நீர் வளத்தில் பெரும் பங்களிப்பைத் தருகிறது.
பத்ரிநாத் கோவில் இந்தியாவில் உள்ள இந்துக்களின் புனித தலங்களில் ஒன்றாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கியமான இந்துக்கோவில்களுள் இதுவும் ஒன்று. வைணவர்களால் போற்றப்படும் 108 திவ்வியதேசங்களுள் ஒன்றாகும். இது அலக்நந்தா ஆற்றின் கரையிலேயே அமைந்துள்ளது. இந்த இடமானது இமய மலைத்தொடரில் நாரயன் மற்றும் நார் என்ற இரண்டு மலைகளுக்கு இடையே அமைந்துள்ளது. நீல்கந்த் சிகரம் நாரயன் மலைத்தொடரின் பின்புறம் அமைந்துள்ளது. இந்த கோயிலைக் காண உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் வந்து பெருமாளைத் தரிசிக்கின்றனர். இமயமலையின் மிதமிஞ்சிய குளிரின் காரணமாக இது ஆண்டுக்கு ஆறு மாதங்கள் (ஏப்ரல் கடைசியில் இருந்து நவம்பர் தொடக்கம் வரை) மட்டுமே திறக்கப்பட்டிருக்கும்.
மந்தாகினி ஆறு, சாரதா, தவுலிகங்கா, நந்தாகினி ஆறு மற்றும் பிந்தார் ஆறுகள் ஆகியன இதன் துணையாறுகள்.
இந்த ஆற்றில் தௌலி கங்கை ஆறு, அலக்நந்தா ஆறு, பிந்தர் ஆறு, மந்தாகினி ஆறு மற்றும் பகீரதி ஆறு என்னும் ஐந்து கிளை ஆறுகள் உத்தராகண்டம் மாநிலத்தின் கார்வால் பகுதியில் ஒன்றாக கலக்கின்றன. எனவே இந்த இடம் புனித ஆறுகளின் சங்கமம் எனும் பொருளில் பஞ்ச பிரயாகை எனறு அழைக்கப்படுகிறது. ஆறுகள் கூடுமிடங்களில் பல கோயில்கள் கட்டப்பட்டுள்ளன.
இந்த ஆற்றில் ரப்பர் படகுகளைக் கொண்டு படகுப் பயணம் செய்தல் என்பது ஒரு சிறந்த பொழுதுபோக்கு அம்சமாகும். இங்கு வரும் சுற்றுலப்பயணிகள் இதை பெரிதும் விரும்புவர். மேலும் பல்வேறு வகையான சுற்றுலாத் தலங்கள் காணாப்படுகின்றன. எனவே இந்த ஆறு உலக அளவில் சுற்றுலாப் பயணிகளை வெகுவும் கவர்கிறது.
இவ்வாற்றின் குறுக்கே 37 அணைகள் (கட்டிமுடிக்கப்பட்டோ கட்டப்பட்டோ அல்லது திட்டமிடப்பட்டோ) நீர் மின்சாரம் தயாரிப்பதற்காக உள்ளன. அவைகள்
# | அணைகளின் பெயர்கள் | மெகா வாட் | நிலை | அணையின் உயரம் |
---|---|---|---|---|
1 | பத்ரிநாத் | 1.25 | செயல்பாட்டில் உள்ளது | |
2 | தபோவனம் | 0.8 | செயல்பாட்டில் உள்ளது | |
3 | தாராலி | 0.4 | செயல்பாட்டில் உள்ளது | |
4 | தில்வாரா | 0.2 | செயல்பாட்டில் உள்ளது | |
5 | உர்கம் | 3 | செயல்பாட்டில் உள்ளது | |
6 | விஷ்ணுபிரயாகை | 400 | செயல்பாட்டில் உள்ளது | 14 |
7 | காளிகங்கா 1 | 4 | கட்டுமானத்தில் உள்ளது | |
8 | காளிகங்கா 2 | 6 | கட்டுமானத்தில் உள்ளது | |
9 | கோட்டி பெல் 1 | 320 | கட்டுமானத்தில் உள்ளது | 90 |
10 | கோட்டி பெல் 2 | 530 | கட்டுமானத்தில் உள்ளது | 82 |
11 | மாதாமஹேஸ்வர் | 50 | கட்டுமானத்தில் உள்ளது | |
12 | தபோவனம் விஸ்ணுகுட் | 520 | கட்டுமானத்தில் உள்ளது | 22 |
13 | ஸ்ரீநகர் | 330 | கட்டுமானத்தில் உள்ளது | |
14 | சிங்கிளி பிஹத்வாரி | 99 | கட்டுமானத்தில் உள்ளது |
இந்த ஆற்றின் கரையில் அமைந்துள்ள நகரங்கள் பத்ரிநாத், ஸ்ரீநகர் மற்றும் கங்ககையின் துணையாறுகள் கலக்குமிடங்களான் தேவபிரயாகை, ருத்திரப்பிரயாகை, கர்ணபிரயாகை, விஷ்ணுபிரயாகை, நந்தபிரயாகை எனும் பஞ்ச பிரயாகைகள் உள்ளது.
இவ்வாற்றின் முதன்மைப் பகுதியில் மழைக் காலங்களில் பனிப் பெருகி உருகி அடிக்கடி வெள்ளப்பெருக்கினை ஏற்படும். இதனால் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படும். எனவே மக்கள் இந்த ஆற்றின் கரையின் ஒரங்களில் குடியிருக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 2013ல் ஏற்பட்ட வெள்ளப்பெருக்குகளிலும், நிலச்சரிவுகளிலும் சிக்க பல பேர் மாண்டுள்ளனர். இந்திய வான்படை, இராணுவம், மற்றும் மத்திய பாதுகாப்புப் படை ஆகியவை இணைந்து 1,00,000 அதிகமானோரை வெள்ளம் பாதித்த பகுதிகளிலிருந்து மீட்டனர். பத்ரிநாத் கோயிலுக்கு செல்லும் வழியும் தடை பட்டது. தற்போது நிலைலமை சீராகி விட்டது. இருந்த போதிலும் இமயமலைத் தொடரில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களால் சுற்றுலாப் பயணிகள் இந்த ஆற்றின் போக்கை அறிந்து பயணம் மேற்கொள்ளலாம்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.