அர்கீசொ
நகரங்கள் / From Wikipedia, the free encyclopedia
அர்கீசொ (சோமாலி: 'Hargeysa', அரபு மொழி: هرجيسا)[1][2] சோமாலிலாந்துவின் தலைநகராக உள்ளது. சோமாலிலாந்து தன்னைத்தானே குடியரசு நாடாக 1991 இல் அறிவித்துக் கொண்டப்பொழுதும் சர்வதேச அளவில் சோமாலியாவின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது.[3]
அர்கீசொ
ஹர்கெய்சா هرجيسا | |
---|---|
நகரம் | |
நாடு | சோமாலிலாந்து |
பிராந்தியம் | ஊகுயி கல்பீத் |
மாவட்டம் | அர்கீசொ |
அரசு | |
• மேயர் | அப்துர்ரகுமான் மகமூத் ஐதீது |
பரப்பளவு | |
• நிலம் | 71 km2 (27 sq mi) |
மக்கள்தொகை (2015) | |
• மொத்தம் | 12,00,000 |
• அடர்த்தி | 1,600/km2 (3,000/sq mi) |
நேர வலயம் | ஒசநே+3 (EAT) |
இடைக்காலத்தில் அர்கீசொ அடல் சுல்தானியகத்தின் அங்கமாக இருந்தது. 1941இல் பிரித்தானிய ஆட்சியின் கீழிருந்த சோமாலிலாந்தின் தலைநகரானது. 1960இல் பிரித்தானியரிடமிருந்து விடுதலை பெற்ற சோமாலிலாந்து, இத்தாலிய ஆட்சியிலிருந்து விடுபட்ட சோமாலிலாந்துடன் இணைக்கப்பட்டு சூலை 1 அன்று சோமாலியக் குடியரசாக உருவானது.[4][5]
ஓகோ மலைத்தொடரின் பள்ளத்தாக்கு ஒன்றில் அர்கீசொ அமைந்துள்ளது. இதன் சராசரி உயரம் 1,334 m (4,377 அடி) ஆகும். இங்கு புதிய கற்கால பாறை ஓவியங்களைக் காணலாம். அருமணி வெட்டுதல், கட்டுமானம், சில்லறை வர்த்தகம், ஏற்றுமதி/இறக்குமதி செயற்பாடுகளுக்கு வணிக மையமாக விளங்குகின்றது.[1]