அமேசான் மழைக்காடு
காடு / From Wikipedia, the free encyclopedia
அமேசான் மழைக்காடு என்பது தென் அமெரிக்காவின் அமேசான் ஆற்றுப் படுகையில் அமைந்துள்ள ஒரு பெரிய மழைக்காடு ஆகும். அமேசானியா அல்லது அமேசான் படுகை என்றழைக்கப்படும் இதன் பரப்பளவு ஏழு மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும். இதில் காடு மட்டும் 5.5 மில்லியன் ச.கி.மீ ஆகும். மேலும் இது ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள் பிரேசில் (ஏறத்தாழ 60 சதவீத மழைக்காட்டினை உள்ளடக்கியது), கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும். இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசானாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டது.
விரைவான உண்மைகள் நாடுகள், பகுதி ...
அமேசான் மழைக்காடு | |
Forest | |
அமேசான் மழைக்காடுகள், பிரேசில் | |
நாடுகள் | பிரேசில், பெரு, கொலம்பியா, வெனிசுலா, ஈக்குவாடோர், பொலிவியா, கயானா, சுரிநாம், பிரான்சு (பிரெஞ்சு கயானா) |
---|---|
பகுதி | தென் அமெரிக்கா |
ஆறு | அமேசான் ஆறு |
பரப்பு | 55,00,000 கிமீ² (21,23,562 ச.மைல்) |
மூடு