அமெரிக்க ஐக்கிய நாடுகள்
மத்திய வட அமெரிக்க நாடு / From Wikipedia, the free encyclopedia
அமெரிக்க ஐக்கிய நாடுகள் (United States of America/USA/US) அல்லது அமெரிக்கா (America) என்பது வட அமெரிக்கக் கண்டத்தின் முதன்மையான ஒரு நாடு ஆகும். இது 50 மாநிலங்களையும், ஒரு கூட்டமைப்பு மாவட்டத்தையும், ஐந்து முதன்மையான ஒன்றிணைக்கப்படாத நிலப்பரப்புகளையும், ஒன்பது சிறிய, வெளிப்புறத் தீவுகளையும் உள்ளடக்கியுள்ளது.[lower-alpha 7] தொல்குடி அமெரிக்கர்களுக்காக ஒதுக்கப்பட்ட 326 பகுதிகளையும் இது உள்ளடக்கியுள்ளது. நிலப்பரப்பளவு மற்றும் மொத்தப் பரப்பளவு ஆகிய இரு அளவுகளின் அடிப்படையிலும் அமெரிக்காவானது உலகின் மூன்றாவது மிகப்பெரிய நாடாகத் திகழ்கிறது.[lower-alpha 8] இது வடக்கே கனடாவுடனும், தெற்கே மெக்சிகோவுடனும் நில எல்லைகளைப் பகிர்ந்து கொள்கிறது. பகாமாசு, கியூபா, உருசியா, மற்றும் பிற நாடுகளுடன் கடல் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.[lower-alpha 9] 33.3 கோடிக்கும் மேற்பட்ட மக்களையுடைய[lower-alpha 10] இந்நாடு அமெரிக்காக்களில் அதிக மக்கள் தொகையுடைய நாடாகவும், உலகின் மூன்றாவது அதிக மக்கள் தொகையுடைய நாடாகவும் திகழ்கிறது. அமெரிக்காவின் தலைநகரம் வாசிங்டன், டி. சி. ஆகும். இதன் அதிக மக்கள் தொகையுடைய நகரம் மற்றும் முதன்மையான நிதி மையமாக நியூயார்க்கு நகரம் திகழ்கிறது.
இக்கட்டுரை அல்லது இதன் ஒரு பகுதி தானியங்கி மொழிபெயர்ப்பைக் கொண்டுள்ளது. இதன் காரணமாக இக்கட்டுரை படித்துப் புரிந்து கொள்ள கடினமாக இருப்பதுடன் தவறான சொற்றொடர் அமைப்புகளையும், மேற்கோள் இணைப்புகளையும் கொண்டிருக்கலாம். இந்தக் கட்டுரையை நீங்களும் செம்மைப்படுத்தி உதவலாம். |
அமெரிக்க ஐக்கிய நாடுகள் United States of America | |
---|---|
குறிக்கோள்: | |
நாட்டுப்பண்: "விண்மீன் மின்னும் பதாகை"[3] | |
தலைநகரம் | வாசிங்டன், டி. சி. 38°53′N 77°01′W |
பெரிய நகர் | நியூயார்க்கு நகரம் 40°43′N 74°00′W |
தேசிய மொழி | ஆங்கிலம் (நடைமுறைப்படி) |
இனக் குழுகள் | இன வாரியாக:
இசுபானிய அல்லது இலத்தீன் தோற்றம்:
|
சமயம் (2021)[7] |
|
மக்கள் | அமெரிக்கர்[lower-alpha 1][8] |
அரசாங்கம் | கூட்டாட்சி அரசுத்தலைவர் அரசமைப்புக் குடியரசு |
ஜோ பைடன் | |
கமலா ஆரிசு | |
• அவைத் தலைவர் | கெவின் மெக்கார்த்தி |
• பிரதம நீதியரசர் | யோன் ரொபர்ட்சு |
சட்டமன்றம் | பேரவை |
• மேலவை | மூதவை |
• கீழவை | பிரதிநிதிகள் அவை |
விடுதலை பிரித்தானியாவிடம் இருந்து | |
சூலை 4, 1776 (1776-07-04) | |
• கூட்டிணைப்பு | மார்ச்சு 1, 1781 (1781-03-01) |
செப்டம்பர் 3, 1783 (1783-09-03) | |
சூன் 21, 1788 (1788-06-21) | |
பரப்பு | |
• மொத்தப் பரப்பளவு | 3,796,742 sq mi (9,833,520 km2)[9] (3-ஆவது) |
• நீர் (%) | 4.66[10] (2015) |
• நிலப்பரப்பு | 3,531,905 sq mi (9,147,590 km2) (3rd) |
மக்கள் தொகை | |
• 2022 மதிப்பிடு | 333,287,557[11] |
• 2020 கணக்கெடுப்பு | 331,449,281[lower-alpha 2][12] (3rd) |
• அடர்த்தி | 87/sq mi (33.6/km2) (185-ஆவது) |
மொ.உ.உ. (கொ.ஆ.ச.) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $25.035 திரிலியன்[13] (2-ஆவது) |
• தலைவிகிதம் | $75,180[13] (8-ஆவது) |
மொ.உ.உ. (பெயரளவு) | 2022 மதிப்பீடு |
• மொத்தம் | $25.035 trillion[13] (1-ஆவது) |
• தலைவிகிதம் | $75,180[13] (7-ஆவது) |
ஜினி (2020) | 39.4[lower-alpha 3][14] மத்திமம் |
மமேசு (2021) | 0.921[15] அதியுயர் · 21st |
நாணயம் | U.S. dollar ($) (USD) |
நேர வலயம் | ஒ.அ.நே−4 to −12, +10, +11 |
ஒ.அ.நே−4 to −10[lower-alpha 4] | |
திகதி அமைப்பு | mm/dd/yyyy[lower-alpha 5] |
வாகனம் செலுத்தல் | right[lower-alpha 6] |
அழைப்புக்குறி | +1 |
ஐ.எசு.ஓ 3166 குறியீடு | US |
இணையக் குறி | .us |