அத்தி (பேரினம்)
தாவரப் பேரினம் / From Wikipedia, the free encyclopedia
அத்தி (ficus, /ˈfaɪkəs/[1][2][3]) என்பது மோரேசி குடும்பத்தில் உள்ள கெட்டியான மரங்கள், புதர்கள், கொடிகள், மேலொட்டிகளைக் கொண்ட ஏறத்தாழ 850 இனங்களின் ஒரு பேரினம் ஆகும். இக்குடும்பத்தில் காணப்படும் அனைத்து தாவரங்களும் இணைந்து அத்தி மரங்கள் அல்லது அத்தி என அழைக்கப்படுகின்றன. இவை பெருமளவாக வெப்பவலயப் பகுதிகளிலும், சிறிய அளவில் மிதவெப்பமான பகுதியிலும் வளர்கிறது.
Fig trees புதைப்படிவ காலம்:Maastrichtian–Present | |
---|---|
Sycamore fig, Ficus sycomorus | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம் |
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி |
உயிரிக்கிளை: | ரோசிதுகள் |
வரிசை: | Rosales |
குடும்பம்: | Moraceae |
இனக்குழு: | Ficus Dumort. |
பேரினம்: | Ficus |
இனங்கள் | |
800 உள்ளன |
இக் குடும்பத்தில் பொதுவாக காணப்படும் அத்தி (common fig), அல்லது பைகஸ் காரிக்கா (F.Carica) தென்மேற்கு ஆசியா மற்றும் நடுநிலக் கடல் பகுதிகளில் (ஆப்கானித்தான் முதல் போர்த்துகல் வரை) பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. பழங்காலத்தில் இதில் காணப்படும் பழம் அத்தி (figs) என அழைக்கப்பட்டது. இவற்றில் காணப்படும் பழங்கள் உள்ளுர் பொருளாதாரத்திற்கும் மற்றும் உணவுப் பொருளிலும் முக்கியத்துவம் பெறுகின்றன. இவற்றின் கனிகள் காட்டு உயிரினங்களுக்கு முக்கிய உணவாகப் பயன்படுகின்றன.