அத்தி (தாவரம்)
From Wikipedia, the free encyclopedia
அத்தி (ஒலிப்புⓘ) (fig; Ficus carica) மர வகையைச் சேர்ந்தது. நாட்டு அத்தி, வெள்ளை அத்தி (GULAR FIG), நல்ல அத்தி (FICUS GLOMERATA CLUSTER FIG) என பல வகை அத்தி மரங்கள் உண்டு. அத்தி, அளவான உயரமுடைய நடுத்தர மரமாகும். இம்மரம், சுமார் 10 மீட்டர் வரை உயரமாக வளர்கிறது. மரத்தின் பட்டை சாம்பல் மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படுகிறது. அத்தி இலைகளில் மூன்று நரம்புகள் இருக்கும். காய்கள் சற்று நீளமான முட்டை வடிவில் தண்டிலும், கிளைகளிலும் அடிமரத்திலும் கொத்துக் கொத்தாகத் தோன்றும். பெரிய நெல்லிக்காய் அளவில் உருண்டையாக சிறிது பச்சை நிறத்துடன் இருக்கும். காய் பழுத்த பின்பு கொய்யாப்பழத்தைப் போல் வெளிறிய மஞ்சள் நிறமாக மாறிவிடும். பழங்கள் தானே கீழே உதிர்ந்து விழுந்து விடும். அத்திப் பழம் நல்ல மணத்துடன் இருந்தாலும், அறுத்துப் பார்த்தால் உள்ளே மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். பொதுவாக பதப்படுத்தாமல் உண்ண முடியாது. திருவொற்றியூர், திருக்கானாட்டுமுள்ளூர் முதலிய திருக்கோயில்களில் இரண்டாவது தலமரமாக விளங்குவது அத்தியாகும்.
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
அத்தி | |
---|---|
அத்தி மரம் மற்றும் பழம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | Rosales |
குடும்பம்: | மோராசியே |
சிற்றினம்: | அத்தி மரம் (பைகஸ்) |
பேரினம்: | அத்தி மரம் (பைகஸ்) |
துணைப்பேரினம்: | Ficus |
இனம்: | F. carica |
இருசொற் பெயரீடு | |
Ficus carica L. | |