அடிஸ் அபாபா
From Wikipedia, the free encyclopedia
அடிஸ் அபாபா (Addis Ababa) எத்தியோப்பியாவினதும் ஆப்பிரிக்க ஒன்றியத்தினதும் தலைநகரம் ஆகும். ஆப்பிரிக்க ஒன்றியத்தின் முன்னோடி அமைப்பான ஆப்பிரிக்க ஒற்றுமை அமைப்பின் தலைநகரமாகவும் இதுவே இருந்தது. 1886 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நகரம், எத்தியோப்பியாவின் மிகப்பெரிய நகரமும் ஆகும். 2007 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி அடிசு அபாபாவின் மக்கள்தொகை 3,384,569 ஆகும். இது ஒரு நகரமாகவும் அதே வேளையில் ஒரு மாநிலமாகவும் விளங்குகிறது. ஆப்பிரிக்க வரலாற்றில் இதன் ராசதந்திர மற்றும் அரசியல் முக்கியத்துவம் காரணமாக இது ஆப்பிரிக்காவின் தலைநகரம் எனவும் அழைக்கப்படுவது உண்டு[5]. 80 க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும், அதே எண்ணிக்கை கொண்ட தேசிய இனத்தவர் வாழும் எத்தியோப்பியாவின் பல பகுதிகளிலுமிருந்தும் மக்கள் வந்து இந்நகரத்தில் குடியேறியுள்ளனர். அடிசு அபாபா கடல் மட்டத்தில் இருந்து 7,726 அடிகள் (2355 மீட்டர்கள்) உயரத்தில் உள்ளது.
அடிசு அபாபா
አዲስ አበባ (அம்காரியம்) Finfinne (ஓரோமோ) | |
---|---|
தலைநகரம் மற்றும் பட்டய நகரம் | |
அடைபெயர்(கள்): மனிதர்களின் நகரம், ஷெகர், அடு ஜெனெட் | |
எத்தியோப்பியாவில் அடிசு அபாபாவின் அமைவு | |
ஆள்கூறுகள்: 9°1′48″N 38°44′24″E | |
நாடு | எதியோப்பியா |
நிறுவப்பட்டது | 1886 (௧௮௮௬) |
தலைநகராக இணைக்கப்பட்டது | 1889 (௧௮௮௯) |
அரசு | |
• மாநகராட்சித் தலைவர் | அதனேச் அபேபே |
பரப்பளவு | |
• மொத்தம் | 527 km2 (203 sq mi) |
• நிலம் | 527 km2 (203 sq mi) |
ஏற்றம் | 2,355 m (7,726 ft) |
மக்கள்தொகை (2007)[2] | |
• மொத்தம் | 27,39,551 |
• மதிப்பீடு (2021)[3] | 37,74,000 |
• அடர்த்தி | 5,165.1/km2 (13,378/sq mi) |
• நகர்ப்புறம் | 29,93,719 |
• பெருநகர் | 29,73,004 |
நேர வலயம் | ஒசநே+3 (கி.ஆ.நே.) |
தொலைபேசிக் குறியீடு | +251―011 |
ம.மே.சு. (2019) | 0.722[4] High · 1st of 11 |
இணையதளம் | cityaddisababa |