அகலப் பாதை
From Wikipedia, the free encyclopedia
அகலப் பாதை (Broad gauge) தொடர்வண்டிப் போக்குவரத்தில் செந்தர இருப்புப் பாதையை விட (1,435 மிமீ (4 அடி 8 1⁄2 அங்)) அகலமான இருப்புப் பாதை ஆகும். உருசியா, இந்தியா, அயர்லாந்து மற்றும் ஐபீரியா தொடர்வண்டி இருப்புப் பாதைகள் அகலப் பாதையானவை. இவ்வகலப் பாதைகள் துறைமுகங்களில் மின்தூக்கிகள் நகரவும் பயன்படுத்தப்படுகின்றன.[1][2][3]