செந்தர இரும்புப் பாதை
From Wikipedia, the free encyclopedia
செந்தர இருப்புப் பாதை (standard gauge) அல்லது செந்தரப் பாட்டை பரவலாகப் பயன்படுத்தப்படும் இருப்புப் பாதை அகலமாகும். இது சில நேரங்களில் ஜார்ஜ் ஸ்டீபென்சன் நினைவாக இசுடீபென்சன் பாதை என்றும் , பன்னாட்டு இருப்புப் பாதை அல்லது வழமை பாதை என்றும் அறியப்படுகின்றது. உலகின் 60% இருப்புப் பாதைகள் இந்த அகலத்தில் அமைந்துள்ளன. உருசியா, உசுபெகிசித்தான், பின்லாந்து தவிர அனைத்து அதிவிரைவு தொடர்வண்டிகள் இந்த செந்தரப் பாட்டையில் அமைந்துள்ளன. இரண்டு இருப்புப் பாதைகளின் உட்புற விளிம்புகளுக்கிடையேயானத் தொலைவு 1,435 மில்லி மீட்டராக வரையறுக்கப்பட்டுள்ளது; ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும் இது 4 அடி 8 1⁄2 அங்; ஆக வரையறுக்கப்படுகின்றது (இது 1,435 மிமீயாகும்). இது UIC பாட்டை, அல்லது UIC இருப்புப் பாதை என்றும்[1][2][3] ஐரோப்பிய ஒன்றியத்திலும் உருசியாவில் ஐரோப்பிய பாட்டை என்றும்[4] and Russia,[5] குயின்சுலாந்தில் சீரான அளவி என்றும் அறியப்படுகின்றது.