மார்க்கசு துல்லியசு சிசெரோ (Marcus Tullius Cicero) 3 சனவரி கி.மு106 – 7திசம்பர் கி.மு43) ஒரு பண்டைய உரோமானியரும், மெய்யியலாளரும், அரசியலாளரும், வழக்கறிஞரும், சொற்பொழிவாளரும், அரசியல் கோட்பாட்டாளரும், உரோம மன்ற உறுப்பினரும், உரோமக் குடியரசின் அரசியலமைப்பாளரும் ஆவார்.
எந்த மனிதனும் தவறுகள் செய்யலாம், ஆனால் முட்டாள் மட்டுமே அவனது தவறை தொடர்கிறான்.
மக்களின் பாதுகாப்பே மிக உயர்ந்த சட்டமாக இருக்க வேண்டும்.
உங்களை விட வேறு யாரும் உங்களுக்கு விவேகமான ஆலோசனையைக் கொடுக்க முடியாது.
உரையாடலின் சிறந்த கலைகளில் ஒன்று அமைதி.
நினைவுத்திறனே அனைத்து விடயங்களுக்குமான கருவூலமாகவும், பாதுகாவலனாகவும் இருக்கின்றது.
நியாயமான போரை விட நியாயமற்ற அமைதி மேலானது.
நன்றியுணர்வு என்பது உயர்ந்த நற்குணம் மட்டுமல்ல, அது மற்ற அனைத்து நற்குணங்களுக்கும் பெற்றோரைப் போன்றது.
தொடங்குவதற்கு முன்னர் கவனமாக திட்டமிட வேண்டும்.
நட்பே மகிழ்ச்சியை அதிகரிப்பதாகவும், துயரத்தை தணிப்பதாகவும் இருக்கின்றது.
புத்தகங்கள் இல்லாத வீடு, ஆன்மா இல்லாத உடலைப் போன்றது.
அபாயத்தை அறவே விலக்குவதில் நாம் உறுதியில்லாத கோழைகள் என்று காட்டும்படி நாம் ஒரு போதும் செய்யக்கூடாது. ஆனால், அதே சமயத்தில், தேவையில்லாத முறையில் நாம் அபாயத்திற்கு உள்ளாகும்படியும் நடக்கக் கூடாது. அதைவிட அறிவீனம் வேறில்லை.[1]
ஒருவன் சந்தர்ப்பம் அறியாமல் பேசுதலும், பேசிக்கொண்டிருக்கும் மற்றவர்களின் கவனத்தைத் தன்பால் இழுத்தலும், தன்னைப்பற்றியே பேசுதலும், தான் எவர்களுடன் இருக்கிறானோ அவர்களை மதியாமலிருத்தலும் அவனை அவமரியாதை என்ற குற்றமிழைத்தவனாகச் செய்யும்.[2]
ஆணவம் என்ற குற்றச்சாட்டுக்கு இடம் கொடாமலிருக்க வேண்டுமானால், நாம் செய்கின்ற வேலையில் வெட்கப்படக் கூடாது. நாம் வெட்கப்பட வேண்டிய வேலை எதையும் ஒரு போதும் செய்யக்கூடாது.[2]
எது சிந்தனை செய்கின்றதோ, புரிந்துகொள்கின்றதோ, தீர்மானம் செய்கின்றதோ, செயல் புரிகின்றதோ, அது தெய்விகமானது. அக்காரணத்தால் அது அவசியம் நித்திய மானதாகும்.[5]
இலக்கியம் பயில்வது இளைஞர்களுக்கு வளர்ச்சியளிக்கும். முதுமைப் பருவத்தில் விருந்தாக விளங்கும் செழுமையை அலங்கரிக்கும்; வறுமையில் ஆறுதலளிக்கும். வீட்டில் இன்பமளிக்கும் வெளியில் எங்கே செல்லவும் உரிமை அளிக்கும்.[6]
மற்றவர்களைத் தூண்டும்படியான பொலிவுடன் ஒரு பேச்சாளன் இருக்க வேண்டும் என்பது பேச்சுக்கலையின் முதல் விதி. அதைச் செய்யவல்லது அவனுடைய வாழ்க்கையே.[16]
நடக்க முடியாதவர்கள் குதிரைகள்மீது ஏறிச் செல்வது போல, சொற்பொழிவாளர்கள் தங்கள் விஷயம் மிகவும் பலவீனமாயிருந்தால், அப்பொழுதுதான் மிகவும் காரசாரமாய்ப் பேசுவார்கள்.[16]