ஈகை என்பது கொடையிலிருந்து வேறுபட்டது ஆகும். ஈகை குறித்து திருவள்ளுர் பதில் உதவி செய்ய முடியாத ஏழைகளுக்குக் கொடுப்பதே ஈகையாகும். பிற கொடைகள் யாவும் பயன் எதிர்பார்த்துக் கொடுக்கும் தன்மையை உடையது என்கிறார். இதிலிருந்து ஈகை என்பது வறியவர்களுக்கு பதில் உதவி எதிர்பாராது கொடுக்கும் சிறு உதவியே ஈகை எனக் கொள்ளலாம். இதை திருவள்ளுவர் கீழ் கண்ட குறளின் வழியாக உணர்த்துகிறார்.

மேற்கோள்கள்

வறியார்க்குஒன்று ஈவதேஈகை; மற்று எல்லாம்
குறியெதிர்ப்பை நீரது உடைத்து
-திருவள்ளுவர்

  • ஈகையைச் செய்யும் போது விளையும் பயன் குறித்து; நன்மை செய்யவோ, இன்பம் அளிக்கவோ இருக்கின்ற மன ஆசைதான், அதன் பொழிவு அதாவது சாறு, அதாவது சாரம் என்பது மட்டும் உறுதி.ஜான் ரஸ்கின்[1]
  • அன்பு முக்கியமாக வளர்வது ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் ஈகை என்ற தத்துவ உணர்விலேதான். -ஜான் ரஸ்கின்[1]
  • பணம் தன்னிடம் ஆசையைப் பிறப்பிக்கும் முன் அதைப் பிறர்க்கு உதவ ஆரம்பித்துவிடு. -ப்ரெளண்[2]
  • பிறர் துன்பம் கண்டு இரங்குதல் மனித குணம் அதை நீக்குதல் தெய்வ குணம். -மான்[2]
  • 'ஈதல்' -இதிலேயே மனிதன் கடவுளை ஒப்பான். -ஸிஸரோ[2]
  • என்னிடம் உதவி பெற்றவன் அதை மறந்தால் அது அவன் குற்றம். ஆனால் நான் உதவி செய்யாவிட்டால் அது என் குற்றம்.- ஸெனீக்கா[2]
  •  பெறுவது போலவே கொடுக்கவும் வேண்டும் சந்தோஷமாய், விரைவாய், தயக்கமின்றிக், கையைவிட்டுக் கிளம்பாத கொடையால் பயனில்லை. -ஸெனீக்கா[2]
  • ஈத்துவக்கும் இன்பத்தையே பரிபூரணமாக அனுபவிக்க முடியும். மற்ற இன்பங்களையெல்லாம் அரை குறையாகவே. -டூமாஸ்[2]
  • எத்தனையோ இன்பங்களைத் துய்க்கலாம், ஆனால் ஈத்துவக்கும் இன்பத்தைப்போன்றது எதுவுங்கிடையாது. -கே[2]
  • நாம் கொடுக்கும்பொழுதுதான் நம் பணம் நம்முடையதாகும். -மாக்கன்ஜி[2]
  • பரிபூரண மனிதருக்கும் இன்றியமையாத இரண்டு குணங்கள் அன்பும் கொடையுமே ஆகும். -புல்வெர்[2]
  • உடைமை என்பது கடனே; செல்வமே சிந்தையின் உரைகல்; பொருள் வைத்திருப்பது பாவம்: அதை வழங்கிய அளவே மன்னிப்பு. -பால் ரிச்சர்ட்[2]
  • பிறர்க்கு வழங்கியதை மறத்தல் பெருந்தன்மை பேசும். -காங்க்ரீவ்[2]
  • ஈதலாகிய ஆடம்பரத்தை அறிய ஏழையாயிருத்தல் வேண்டும். ஜார்ஜ் எலியட்[2]
  • கையில் வைத்துக்கொண்டே இன்று போய் நாளைவா என்று கூறாதே. விவிலியம்[2]
  • பெரிய கொடையே யாகிலும் அன்பின்றிக் கொடுத்தால் கொடையாகாமல் தேய்ந்து போகும். ஷேக்ஸ்பியர்[2]
  • கீழே விழுந்து கிட்ப்பவரைத் தூக்கி விடாதவன், எச்சரிக்கையாயிருக்கட்டும். அவன் வீழ்ந்து கிடக்கையில் எவரும் கை நீட்டி அவனைத் தூக்கமாட்டார். -ஜோபெர்ட்[3]
  • கொடுப்பதில் ஆளைப்பற்றி அதிகம் விசாரிக்க வேண்டாம். அவன் தேவையைப்பற்றி விசாரிக்கவும். மனிதன் உதவிக்கு அருகதையாய் இல்லாவிட்டாலும், அது மனித சமூகத்திற்குத் செய்யும் உதவியாகும். - குவார்லெல்[3]
  • ஈகையில்லாத செல்வன் ஒரு போக்கிரி. அவன் மூடன் என்பதையும் நிரூபிப்பது எளிதாயிருக்கும். - ஃபீல்டிங்[3]
  • துன்பத்திற்காக இரங்குதல் மனித இயல்பு அதை நீக்குதல் தெய்வ இயல்பு. - எச். மான்[3]

குறிப்புகள்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
  1. 1 2 என். வி. கலைமணி (1984). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp. 6- 12.
  2. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/ஈகை. நூல் 141-143. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. 1 2 3 4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 116. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.