அழகு (Beauty) என்பது ஒர் எண்ணம், விலங்கு பொருள், நபர் அல்லது இடம் இவற்றின் பண்பு சார்ந்த இன்பம் அல்லது திருப்தியை அளிக்கும் ஒரு புலனுணர்வு அனுபவம் ஆகும்.
அழகு எனும் பொருளின் திட்டங்களுக்கு அடங்காதனவற்றை அறவே கவனிக்காதீர்கள். அழகிற்கு அப்பாற்பட்ட செயல்கள் எதையும் செய்யாதீர்கள்.கான்பூசியசு[1]
பெருந்தன்மையைக் காண்பதிலே, மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதிலே அதற்கேற்ப மன நெகிழ்வூட்டும் செயல்களைச் செய்து காட்டி மகிழ்ச்சி காண்பதே அன்பு என்ற கருணையின் அழகாகும். ஜான் ரஸ்கின்[2]
அனாவசியமாக அதிகமாயிருப்பவற்றை அகற்றுவதே அழகு எனப்படுவதாகும்.மைக்கலாஞ்சலோ[3]
அழகு என்பது உண்மையை பொருத்த ஒன்று தான். கல் கல்லை போல் இருக்க வேண்டும். செங்கல் அதைப்போல் இருக்க வேண்டும்.நாம் பொருட்களை அதன் இயல்புக்கு ஏற்ப பயன்படுத்தினால், பிரம்பு, மூங்கில், செங்கல், கல் என எது பயன்படுத்தினாலும் அதுவே அழகாக இருக்கும். லாரி பேக்கர்[4]
அழகின் சிறந்த பகுதி என்பது எந்தச் சித்திரமும் வெளிப்படுத்த முடியாத ஒன்று. - பேக்கன்[5]
ஒருவர் பார்க்கும் அழகில் ஒரு பகுதி அவர் பார்வையில் இருக்கின்றது. - போவீ[5]
தலைசிறந்த அழகியைக்காட்டிலும், புற அழகிலே குறைந்த, ஆனால், அறிவும் புத்திக் கூர்மையும் மிகுந்த ஒரு பெண் என்னை அதிகமாய்க் கவர்ந்துவிடுகிறாள் உள்ளேயிருக்கும் தெய்வத் தன்மையே வெளியேயுள்ள தெய்வத் தன்மைக்குக் காரணமாயுள்ளது. - வாஷிங்டன் இர்விங்[5]
அழகைப் போற்றுவதே விகாரமான புலனுணர்ச்சிகளுக்குச் சிறந்த மாற்றாகும். உயர்ந்த ரகமான உருவப் படங்கள் யாவும் பரிசுத்தமாகவே உள்ளவை. அவை சிந்தனைகளைத் தூய்மைப்படுத்துகின்றன. சோகத்தில் முடியும் துன்பியல் நாடகம் மன உணர்ச்சிகளைத் தூய்மைப்படுத்துகின்றன என்று அரிஸ்டாட்டல் கூறியுள்ளதைப் போன்றவை அந்தச் சித்திரங்கள். - ஷிலிகெல்[5]
அழகின் ஊற்று இதயத்திலுள்ளது. மேலான ஒவ்வொரு சிந்தனையும் உன் இதயத்தின் சுவர்களை அழகு செய்யும் சித்திரங்களாக அமைகின்றன.[5]
அழகோடு ஒழுக்கமும் சேர்ந்தால், அது இதயத்தின் கவர்க்கமாகும் தீயொழுக்கம் அதனுடன் சேர்ந்துவிட்டால், அதுவே ஆன்மாவின் நரகமாகும். -. குவார்லெஸ்[5]
ஆண்டவன் நல்லொழுக்கத்தின்மீது வைக்கும் முத்திரையே அழகு இயகையான எந்தச் செயலும் வழிலுடையது: ஒவ்வொரு வீரச்செயலும் நேர்த்தியானது. அது நிகழும் இடத்தையும், அருகில் நிற்பவர்களையும் ஒளியமாக்குகின்றது. -எமர்ஸன்[5]
கிளியோபாட்ரா ராணியின் மூக்கு சற்றுக் குட்டையாக அமைந்திருந்தால், அது உலகத்தின் சரித்திரத்தை வேறு விதமாக மாற்றியிருக்கும். -பாஸ்கல்[5]
கவர்ச்சியாயும் அழகாயும் உள்ளது எப்பொழுதுமே நல்லதாக இருப்பதில்லை; ஆனால், நல்லது எதுவும் எப்பொழுதும் அழகுள்ளது. -லா' என்கிளாஸ்[5]
அழகான ஒருவரிடம் காணும் நல்ல பண்புகூட அதிக எழிலுடன் விளங்குகின்றது. - வர்கில்[5]
அழகு நன்மையானதுதான். ஆனால், வீணானது. அதன் பயனும் சந்தேகமானதுதான் அது திடீரென்று வாடும் வெளிப்பகட்டு அரும்பத் தொடங்கும் பொழுதே மடியக்கூடிய மலர்: சந்தேகமான தன்மை: ஒரு மினுக்கு ஒரு கண்ணாடி ஒரு மலர், அது ஒரு மணி நேரத்திற்குள் இழக்கப்பெறுவது: வாடக்கூடியது. உடையக்கூடியது அழியக்கூடியது. - ஷேக்ஸ்பியர்[5]
பிறவியிலேயே பார்வை இல்லாதவர்கள் ,மனிதர்களிடம் அழகென்று எதைக் காண்கிறார்களோ அதுவாகவே இருந்துவிட ஆசை - யாத்திரி ( 'காதலே கதிமோட்சம் ' என்னும் கவிதைத் தொகுப்பிலிருந்து )