வாழ்க்கையின் வறுமையிலே துன்பப்படுவோர்களுக்காக இரங்குக! இன்புறுவோர் துன்புறும் மக்களுக்குக் காட்டும் இரக்கம் மட்டுமல்ல அது; கடன், கடமை, மனிதநேயம்.[1]
பிறர் நலம் கண்டு மகிழமாட்டார்கள் யார்? பிறர் துன்பங்களைக் கண்டு மனம் வருந்தி இரங்கமாட்டார்கள்! யார்? அவர்கள்தான் அன்பிலார்! அவர்கள் எல்லாரும் இறந்து படுக.[1]
செல்வச் செழிப்புடனுள்ள ஒரு மனிதனை நேசிப்பதிலுள்ள பெருமையே அழகுள்ள ஒரு பெண்ணிடம் அன்பு கொள்வதிலும் இருக்கின்றது. இரண்டும் மாறக்கூடியவை.[11]
இயற்கை அறிவுக்கு மேலாகப் பகுத்தறிவை எவ்வளவு வேண்டுமானாலும் உயர்த்திக்கொள்ளுங்கள்; முதலாவதில் கடவுள் வழிகாட்டுகிறார்; இரண்டாவதில் மனிதன் வழி காட்டுகிறான்.[12]
கட்சி என்பது சிலருடைய நன்மைக்காகப் பலருக்குப் பைத்தியம் பிடிப்பதாகும். [13]
எந்த ஆராய்ச்சியிலும் நாம் சிறிது ஊன்றிக் கருத்தைச் செலுத்தினால், அது நமக்கு இன்பமளிக்காமல் இராது.[14]
ஒரு பொய்யைச் சொல்பவன் எவ்வளவு பெரிய வேலையை மேற்கொள்கிறான் என்பதை உணர்வதில்லை; அந்தப் பொய்யை நிலை நாட்டுவதற்கு அவன் மேலும் இருபது பொய்களை உண்டாக்க வேண்டும்.[15]
1 2 என். வி. கலைமணி(1984).உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள் (நாட்டுடமை நூல்). தேவகோட்டை: மெய்யம்மை நிலையம். pp.6- 12.