பகைமையை அன்பால் வெல்லுங்கள்; சோம்பலை செயல் ஊக்கத்தால் வெல்லுங்கள்.
எத்தனை துன்பங்கள் பகைவர்களால் வந்தாலும், அதை அன்பாலேயே வென்று விடுங்கள்.
நாம் ஒவ்வொருவரும் வெவ்வேறு விதமான கருத்துகளைக் கொண்டிருக்கலாம். ஆனால் இதயங்கள் இணைவதற்குத் தடை ஏதுமில்லை.
அன்பு எப்போதும் பாதிப்படைவது. எப்போதும் வன்மம் கொள்ளாது, பழி வாங்காது.
அன்பு எப்போதும் கேட்காது, கொடுக்கத்தான் செய்யும்.
மனித குலத்தை அன்பு என்ற விதி தான் ஆள்கிறது. எங்கே அன்பிருக்கிறதோ அங்கே வாழ்க்கை இருக்கிறது.
செசுடர் பீல்டு
மற்றவர்களை அன்பால் மகிழச் செய்வதே, ஒருவன் பெற்றிருக்க வேண்டிய பாக்கியங்களில் எல்லாம் மேலான பாக்கியம்.
மௌரசு
அன்பு காட்டுவது எச்சரிக்கை உணர்வை விடவும் சிறந்தது, மேலானது; ஆனால், தயக்கம் இல்லாமல் மற்றவர்களுக்குக் கொடுக்கத் தெரிந்திருக்க வேண்டும்.
இங்கர்சால்
அன்பில்லாத இடத்தில் தான் கோபம், முட்டாள் தனம், விரோதம் எல்லாம் இருக்கும்.
அன்பே இல்லாத மாளிகை காட்டு மிருகங்கள் வாழும் இருண்ட குகை.
அரிசுடோடில்
அன்பில் அச்சம் கலந்திருக்க முடியாது. நாம் கண்டு அஞ்சும் மனிதனிடம் நாம் அன்பு செலுத்த முடியாது.
அரவிந்தர்
முழுமையான அன்பு இல்லையேல் முழுமையான அழகு இருக்க முடியாது; அழகு முழுமையாக இல்லாத இடத்தில் முழுமையான மகிழ்ச்சி ஏற்பட இயலாது.
கிருபானந்த வாரியார்
அன்பும் மரியாதையும் இருப்பவன் உலகத்தில் எதையும் சாதித்து விடுவான். தீமை செய்பவனும் அவனிடம் பணிவான்.
இதயத்திலிருந்து பிறக்கும் அன்பே பண்பு. மூளையிலிருந்து தோன்றும் கூற்றே அறிவு. அறிவை விட பண்பே உலகுக்குத் தேவை.
ராமகிருட்டிணர்
அன்பு அறிவில் இருந்தால் சத்தியம் பிறக்கும், அன்பு மனதில் இருந்தால் கருணை பிறக்கும், அன்பு உணர்வில் இருந்தால் காதல் பிறக்கும், அன்பு செயலில் இருந்தால் அஹிம்சை பிறக்கும், அன்பு கல்வியில் இருந்தால் தர்மம் பிறக்கும்.
வில்லியம்
மனிதர்கள் குறைகள் உள்ளவர்கள் தாம். அந்தப் பக்கத்தை மூடிவிட்டு அனைவரையும் நேசிக்க அன்பு என்ற கதவை மட்டும் திறந்து வையுங்கள். உங்கள் அன்பு உண்மையாக இருக்கும்போது உலகம் பிரகாசமாக இருக்கும்.
இயேசு கிறித்து
அன்பு கொள்ளாதவன் கடவுளை அறியாதவன். ஏனெனில் அன்பே கடவுள்.
முகமது நபி
அறிவு இறைவனின் உறைவிடத்தை நாடுகிறது. ஆனால் அன்புதான் இறைவனின் உறைவிடம்.
கதே
நமக்கு நன்மை செய்துகொள்ளச் சிறந்த வழி பிறர்க்கு அதைச் செய்வதாகும் இறைத்தால்தான் சேகரிக்க முடியும். சமூகத்தை ஒன்றாகக் கட்டிச் சேர்த்து வைத்திருப்பது அன்பு என்னும் பொற்சங்கிலி. - கதே[2]
பிறருடைய அன்பில் ஆனந்தம் காணும்பொழுதுதான் ஒருவன் உண்மையாக வாழ்ந்தவனாவான்.
சமூகத்தை ஒன்றாகக் கட்டிச் சேர்த்து வைத்திருப்பது அன்பு எனும் பொற்சங்கிலி.
சுவாமி விவேகானந்தர்
வேதனையைத் தாங்கும் வல்லமை, செயலாற்றும் வல்லமையை விட மிகப் பெரியது; அன்பின் வல்லமை, வெறுப்பின் வல்லமையை விட மிகப் பெரியது.
அன்பு செய், உதவி செய், உன்னால் முடிந்ததை செய், ஆனால் நிபந்தனை ஏற்படுத்தாதே.
எல்லாப் பெருக்கமும் வாழ்வு; எல்லாச் சுருக்கமும் சாவு; அன்பு என்பது பெருக்கம்; சுயநலம் என்பது சுருக்கம்; எனவே அன்புடையவனே வாழ்பவன்; சுயநலமுடையவன் செத்துக் கொண்டிருக்கிறான்.
வஞ்சனையால் பெரும்பணி எதையும் சாதித்து விட முடியாது;அன்பாலும் உண்மையான ஆற்றலாலும் தான் அரும் பெரும் சாதனைகள் நிறைவேறுகின்றன.
அன்பிருக்கிறதா உங்களிடம்? உங்களால் ஆகாத காரியம் ஒன்றுமே இல்லை.
மார்க் ட்வைன்
செவிடரும் கேட்கக்கூடிய, பார்வையற்றோரும் படிக்கக் கூடிய மொழிதான் அன்பு.
செல்லி
சாதாரண செயல்கள் கூட அன்புடன் கலந்தால் அழகு பெறுகின்றன.
பெருந்தன்மையைக் காண்பதிலே, மற்றவர்களுக்கு அன்பு காட்டுவதிலே அதற்கேற்ப மன நெகிழ்வூட்டும் செயல்களைச் செய்து காட்டி மகிழ்ச்சி காண்பதே அன்பு என்ற கருணையின் அழகாகும்.[1]
அன்பும், நம்பிக்கையுமே ஓர் ஆன்மாவுக்குரிய தாய்ப்பால்.[1]
அன்பு முக்கியமாக வளர்வது ஒருவருக்கு ஒருவர் வழங்கிடும் ஈகை என்ற தத்துவ உணர்விலேதான்.[1]
சிறிது அன்பு குழந்தையிடம் காட்டினால் அது பன்மடங்கு திரும்பி தன் அன்பைக் கொட்டுகிறது.
அன்பு என்பது உதவி செய்வதுதான்; அனைவரிடத்தும் எல்லோரும் அன்பு காட்ட வேண்டும். இதனால் நல்லவர்களின் நட்பை நாடுங்கள்.[3]
பிறர்
அன்புணர்ச்சி இருந்தால், சாதாரணச் செயல்களும் பெருமையுள்ளவைகளாக விளங்குகின்றன. --தாக்கரே[2]
நன்மை செய்ய வேண்டும் என்ற உணர்ச்சியிருந்தால் அத்துடன் தீயகுணங்கள் அதிகமான அளவில் சேர்ந்திருக்க முடியாது; சுயநலத்தோடு சில நற்குணங்கள் கூடச் சேர்ந்திருப்பதில்லை -ஹோம்ஸ்[2]
இந்த உலகத்தில் நாம் கொடுப்பதுதான் நம்மைச் செல்வராக்குமே தவிர, நாம் பெற்றுக்கொள்வதன்று. - பீச்சர்[2]
உலகத்தின் நல்ல பொருள்களைத் தேவையுள்ளவர்களுக்குப் பகிர்ந்து கொடுப்பதில் எனக்குக் கிடைக்கும் இன்பத்தைப் பார்க்கினும் எனக்கு அதிக மகிழ்ச்சியளிப்பது வேறில்லை.- ஸெனீகா[2]
அன்பைப் போல் பெருகி வளர்வது வேறில்லை. ஒரு கையால் வாரி இறைப்பவர்கள். இரு கைகளால் அள்ளியெடுக்கிறார்கள். ஆனால், எப்பொழுதும் அது பணமாயிராது. வேறு நன்மையாகவும் இருக்கும். - ரே[2]
நல்ல மனிதனுடைய வாழ்க்கையில் சிறந்த பகுதி எதுவென்றால், அவ்வப்போது அவன் அன்புடன் சிறுசிறு செயல்களைச் செய்வதுதான், அவை அற்பமானவைகளாயும். குறிப்பிட முடியாதவைகளாயும், நினைவில் வைத்துக் கொள்ள வேண்டாதவைகளாயும் இருக்கும். - வோர்ட்ஸ்வொத்[2]
அன்புள்ள இதயத்தின் ஊற்று. அதைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும். - வாஷிங்டன் இர்விங்[2]
அன்பு என்ற மொழியை ஊமையர் ചേ8 முடியும். செவிடர் கேட்டுப் புரிந்துகொள்ள முடியும். போவீ[2]
ஓர் எதிரியை உண்மையான உயர்ந்த முறையில் கொல்ல வேண்டும் என்றால். அவனை வதைப்பது வழியன்று. அன்பினால் நீ, அவன் பகைவனாயிருப்பதை மாற்றிவிட முடியும். அதனால் பகைவன் ஒழிந்துவிடுவான். - அலேய்ன்[2]
நம்முள் ஒவ்வொருவரும் நம்மைச் சுற்றியிருக்கும் சிறு கூட்டத்தாரை அதிக மகிழ்ச்சியுடனும், மேலான நிலையிலும் வாழச்செய்வது கடமையாகும். ஏ. பி. ஸ்டேன்லி[2]
பிறரை இன்புறச்செய்தல் நம்மை மேல்நிலைக்கு உயரச் செய்யும். - என். எம். சைல்டு[2]
நல்ல உதவிகளை விதைத்தால், அவைகளிலிருந்து இனிய நினைவுகள் வளர்ந்து பெருகும். - திருமதி. டி. ஸ்டேயல்[2]
உதவி செய்பவன்தான் அதை உடனே மறந்துவிட வேண்டும் ஒருவனுக்குச் செய்த உதவியை அவனுக்கு நினைவுறுத்தலும் அதைப்பற்றிப் பேசுதலும். அவனை அவமானப்படுத்துவது போலாகும். -டெமாஸ்தனிஸ்[2]
இதயங்களை அன்பால் வசப்படுத்திக்கொள். எல்லோரும் உனக்குப் பணி செய்வார்கள். எல்லாப் பணப்பைகளும் உன்னுடையவையாகும். - பர்லே[2]
ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் ஏற்படும் கஷ்டத்தைக் குறைத்துக்கொள்ள உதவி செய்யாவிட்டால், நாம் எதற்காக வாழ்கிறோம்? - ஜியார்ஜ் எலியட்[2]
அன்புள்ள இதயம் இல்லாவிட்டால், நாம் நீதியாக இருக்க முடியாது - வாவினார் கூன்[2]
மனிதர்கள் தாங்கள் எல்லாரும் அனுபவித்து வரும் துயரத்தைக் குறைத்துக்கொள்வதற்குத் தமக்குள் அன்பு பரோபகாரம், இரக்கம் ஆகியவைகளைக் கைக்கொண்டாடி, மானிட வாழ்க்கையிலுள்ள பாதித் துயரம் குறைந்துவிடும். -அடிஸன்[2]
மதிப்பை அடிப்படையாகக் கொண்டதே அன்பு - பக்கிங்ஹாம்[2]
உண்மையாக அன்பு செலுத்துவோனுடைய இதயம் பூவுலகின் ஒரு சுவர்க்கம் அவனிடம் இறைவர் தங்குகிறார். ஏனெனில் இறைவர் அன்பு மயமானவர். - லாமென்னெய்ல்[2]
வாழ்க்கையில் தலைசிறந்த இன்பம் அன்பு -ஸர் வில்லியம் டெம்பின்[2]
அன்பு தானாக வருவது. அதை விலைக்கு வாங்க முடியாது- லாங்ஃபெல்லோ[2]
நாம் எவைகளில் அன்பு வைக்கிறோமோ அவைகளாலேயே உருவாக்கப்பெறுகிறோம். -கரே[2]
தெய்வத்தைப்பற்றிய தியானமும், அன்பும் மனிதனுக்கு இருந்தால் போதும் - அவன் மலைகளைப் போல் நெடுங்காலம் நிலைத்திருத்தலைப் போன்றது. - வாட்ஸ்[2]
பணிவுள்ள அன்புதான் சுவர்க்க வாயிலைக் காத்து நிற்கின்றது: செருக்குள்ள விஞ்ஞான அறிவன்று. -யங்[2]
அன்பு, மனிதர்களின் சுயநலத்தின் அடிப்படையில் எழும்புகிறது. தாங்கள் ஏதாவது நன்மை பெறுகிற வரையில் அன்பு செலுத்துவார்கள். அது நின்று போனதும் அன்பும் நின்றுபோகும். -நிக்கோலோ மாக்கியவெல்லி[4]