ஹைர் பெனக்கல்
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெருங்கற்காலத் தளம் From Wikipedia, the free encyclopedia
கர்நாடக மாநிலத்தில் உள்ள பெருங்கற்காலத் தளம் From Wikipedia, the free encyclopedia
ஹைர் பெனக்கல் (Hire Benakal) ஹிரெபெனக்கல் எனவும் அறியப்படும் இது இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள பெருங்கற்காலத் தளமாகும். இது கிமு 800 முதல் கிமு 200 வரை இரும்புக் காலம் தேதியிட்ட ஒரு சில இந்திய பெருங்கற்காலத் தளங்களிலும் ஒன்றாகும். இவை கொப்பள் மாவட்டத்தில் கங்காவதி நகரத்திற்கு மேற்கே 10 கிலோமீட்டர் (6.2 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மேலும், ஹோஸ்பேட் நகரத்திலிருந்து 35 கிலோமீட்டர் (22 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. இது சுமார் 400 பெருங்கற்கால கல்லறைகளைக் கொண்டுள்ளது. இது புதிய கற்காலத்திற்கும் இரும்புக் காலத்திற்கும் இடையிலான காலத்துடன் தேதியிடப்பட்டுள்ளது. கன்னட மொழியில் ஏலு குடகலு என உள்ளூரில் அறியப்படும் இவற்றின் குறிப்பிட்ட பெயர் மோரியர் குடா ( குடா, என்றால் "மலை"). தென்னிந்தியாவில், பெரும்பாலும் கர்நாடகாவில் காணப்படும் 2000 பெருங்கற்காலத் தளங்களில் ஹைர் பெனக்கல் மிகப்பெரிய இடுகாடாக இருப்பதாகக் கூறப்படுகிறது.[1] 1955 முதல், இந்திய தொல்பொருள் ஆய்வு மையத்தின் நிர்வாகத்தின் கீழ் உள்ளது.[2][3]
ஹைர் பெனக்கல்
ಹಿರೇಬೆಣಕಲ್ ஹிரெபெனக்கல் | |
---|---|
ஆள்கூறுகள்: 15°26′16.12″N 76°27′21.61″E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கருநாடகம் |
மாவட்டம் | கொப்பள் |
மொழிகள் | |
• அலுவல் | கன்னடம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
வாகனப் பதிவு | கேஏ-37 |
அண்மை நகரம் | கங்காவதி |
ஹைர் பெனக்கல் 2021 மே 19 அன்று யுனெஸ்கோ உலக பாரம்பரியக் களமாக [1] அறிவிக்கப்பட்டது.[4][5][6][7]
இறுதிச் சடங்குகளுக்கான நினைவுச்சின்னம் ஏழு மலைகள் நிறைந்த பாறைகளில் அமைந்துள்ளன. இந்த தளம் துங்கபத்திரை ஆற்றின் இடது கரையில் உள்ளது. இது முட்புதர்கள் மற்றும் வழுவழுப்பான சிதறிய கற்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. ஆடு தடத்தைத் தவிர வழக்கமான பாதைகள் அல்லது சாலைகள் இல்லாததால் தளத்தை அடைவது கடினம். கூடுதலாக, ஒரு சிற்றாறை கடக்க வேண்டும். [2] ஏரியின் வடிவத்தில் ஒரு வற்றாத நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், அருகிலேயே கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பழைய குவாரி தளம் ஹைர் பெனக்கல் நினைவுச்சின்னங்களில் காணப்படும் வகையிலான கட்டுமானப் பொருட்களுக்கான ஆதாரமாக இருந்திருக்கலாம். மாநில நெடுஞ்சாலை வழியாக கங்காவதி, ஹோஸ்பேட் மற்றும் கொப்பள் நகரங்களில் இருந்து ஹைர் பெனக்கலை அணுகலாம். ஹோஸ்பெட் தொடர் வண்டி நிலையம் இந்த இடத்திற்கு அருகிலுள்ளது. [2]
இந்த தளம் 2000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. பல பெருங்கற்காலக் கட்டமைப்புகள் கிமு 800 முதல் கிபி 200 வரை தேதியிடப்பட்டுள்ளன. [2][3] இரும்புக் காலம் இந்தியாவின் இந்த பகுதியில் கிமு 1200 முதல் பொ.ச. 200 வரை 1000 ஆண்டுகளுக்கு மேலாக இருந்துள்ளது. இப் பகுதியின் மேற்குக் குழுவில் உள்ள துறைமுகத் துளை அறை இராஜன்கொல்லூரில் கணப்படும் இதே போன்ற கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.[8]
ஹைர் பெனக்கல் பற்றி முதலில் வெளியிடப்பட்ட அறிக்கைகள் 1835 ஆம் ஆண்டில் ராயல் ஆசியடிக் சொசைட்டி என்ற அமைப்பின் இதழில், ஐதராபாத்தின் நிசாமின் சேவையின் கீழ் இருந்த பிலிப் மெடோஸ் டெய்லர் என்பவரால் வெளியிடப்பட்டது.[1] அதன்பிறகு ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, இந்த தளத்தைப் பற்றி மேலும் முறையான ஆய்வு எதுவும் நடத்தப்படவில்லை. 1944-48 க்கு இடையில், சர் மோர்டிமர் வீலர் என்பவர் தொல்பொருள் அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டார். இவை அடிகா சுந்தராவால் கூடுதலாக வழங்கப்பட்டன. இது குறித்து 1975 இல் வெளியிடப்பட்டன. [1] "தென்னிந்தியாவின் ஆரம்ப அறை கல்லறைகள்: வட கர்நாடகாவின் இரும்பு வயது பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் பற்றிய ஆய்வு" என்ற அவரது வெளியீட்டில், சுந்தராவின் பட்டியலில் அடர்த்தியான காட்டின் ஒரு இடத்தில் 300 பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இடுகாடுகளின் விவரங்களை விவரிக்கிறது. [1] இசுட்டான்போர்ட் பல்கலைக்கழகத்தின் மானுடவியல் துறையின் ஆண்ட்ரூ பாயர் 20 ஹெக்டேர் நிலத்தில் (49 ஏக்கர்) சுமார் 1000 வகையான பழங்கால பொருட்களை அடையாளம் கண்டுள்ளார். அவரது கண்டுபிடிப்புகள் மனிதனின் இறுதி சடங்கு கட்டமைப்புகள், குத்துக்கல் மற்றும் வட்ட வடிவங்களிலுள்ள கல் வேலிகள் பற்றி விவரிக்கப்பட்டுள்ளன. மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட செங்குத்தான கற்களையும், அவற்றினால் கிடைநிலையில் தாங்கப்படும் பெரிய தட்டையான கற்பலகை ஒன்றையும் கொண்ட கற்திட்டைகளும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டது. [1]
கற்காலத்தைச் சேர்ந்த 400 மட்பாண்டங்களும் இங்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.[3] முன்-பெருங்கற்காலக் கருவிகள், இரும்பு கசடு, கற்காலத்தின் மட்பாண்டங்கள், பெருங்கற்காலம் மற்றும் ஆரம்பகால வரலாற்று காலம் ஆகியவையும் அடையாளம் காணப்பட்டுள்ளன. பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு கருவிகள், தென்னிந்தியாவில் காணப்படும் ஒரு பொதுவான அம்சமாகும்.[3] இவை ஹைர் பெனக்கல் தளத்திலும் காணப்படுகிறது. இந்த கலாச்சாரக் கண்டுபிடிப்புகள் கற்கால மற்றும் பெருங்கற்கால செயல்பாடுகள் ஆகும்.[2] பெருங்கற்கால மட்பாண்டங்களுடன், இரும்பு கசடு கூட கண்டுபிடிப்புகளின் ஒரு பகுதியாக இருந்தது.[3]
இந்தியத் தொல்லியல் ஆய்வகம் இந்த தளத்தின் புதுப்பித்தல் மற்றும் பராமரிப்பை மேற்கொண்டிருந்தாலும், எந்தவொரு நடவடிக்கையும் தெளிவாகத் தெரியவில்லை. இது இந்திய மக்களிடையே நன்கு அறியப்பட்ட தளம் அல்ல, ஆண்டுதோறும் ஒரு சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமே இந்த இடத்திற்கு வருகிறார்கள்.[3] மலையடிவாரத்திலும், ராய்ச்சூர்-கொப்பள் மாநில நெடுஞ்சாலைக்கு அருகிலும் இடங்களில் பணிகளை மேம்படுத்துவது அவசியம்.[1] பொக்கிஷங்களைத் தேடி வரும் கொள்ளையர்களால் கற்திட்டைகள் பல நூற்றாண்டுகளாக கொள்ளையடிக்கப்படுகின்றன. மேய்ப்பர்கள் தங்கள் கால்நடைகளை அந்த இடத்தில் தொடர்ந்து மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதன் விளைவாக கற்திட்டிகள் அடிக்கடி சரிந்து விடுகின்றன. [1]
வருடாந்திர திருவிழாவின் போது, உள்ளூர் மக்கள் கால்நடை மேய்ச்சலுக்காக இந்த பகுதிக்கு வருவதில்லை. ஏனெனில் திருவிழா நாளில், கடவுள் ஹைர் பெனக்கலின் ஏழு மலைகள் வழியாக நடந்து செல்கிறார் என்று அவர்கள் நம்புகிறார்கள். [3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.