மலேசியா எயர்லைன்சு விமானம் 17
From Wikipedia, the free encyclopedia
From Wikipedia, the free encyclopedia
மலேசியா ஏர்லைன்சு விமானம் 17 (Malaysia Airlines Flight 17, எம்எச்17 (MH17/MAS17)[2] என்பது ஆம்ஸ்டர்டாமில் இருந்து கோலாலம்பூர் நோக்கி சென்றுகொண்டிருக்கையில், 2014 சூலை 17 இல், விபத்துக்குள்ளாகி வீழ்ந்து நொறுங்கிய மலேசிய நாட்டு வானூர்தி ஆகும். போயிங் 777 ரக விமானம் உக்ரைனின் தோனெத்ஸ்க் வட்டாரத்தில் கிராபோவ் நகருக்கு அண்மையில்[3][4] உருசிய எல்லையில் இருந்து கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் வீழ்ந்தது.[5] விமானத்தில் பயணம் செய்த அனைத்து 283 பயணிகளும், 15 பணியாளர்களும் உயிரிழந்தனர்.[6]
ரோமின் பியுமிசினொ விமான நிலையத்தில் 2011ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சம்பந்தப்பட்ட விமானம் நின்றிருந்தபோது எடுக்கப்பட்ட ஒளிப்படம் | |
Incident சுருக்கம் | |
---|---|
நாள் | 17 சூலை 2014 |
சுருக்கம் | Under investigation. Fired at with surface-to-air missile.[1] |
இடம் | ஹ்ரபோவே அருகே ,டநிட்ஸ்க் ஒப்லாஸ்து , உக்ரைன் 48°7′56″N 38°39′19″E |
பயணிகள் | 283 |
ஊழியர் | 15 |
உயிரிழப்புகள் | (மொத்தம்) 298 |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | போயிங் 777-200ER |
இயக்கம் | மலேசியா எயர்லைன்சு |
வானூர்தி பதிவு | 9M-MRD |
பறப்பு புறப்பாடு | ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல் |
சேருமிடம் | கோலாலம்பூர் பன்னாட்டு வானூர்தி நிலையம் |
உக்ரைனில் உருசிய-சார்புக் கிளர்ச்சியாளர்களுக்கும், அரசுப் படையினருக்கும் இடையில் இடம்பெற்று வரும் போர்ப் பகுதியிலேயே விமானம் வீழ்ந்துள்ளது. அமெரிக்கப் புலனாய்வுத்துறை அறிக்கைகளின் படி, இவ்விமானம் ஏவுகணைத் தாக்குதலுக்கு உள்ளாகியதாகக் கூறப்படுகிறது. ஆனாலும், யார் இதனைச் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.[7][8] உக்ரைனியப் பிரச்சினையில் உருசியா சம்பந்தப்பட்டிருப்பதால் அதன் மீது அமெரிக்கா பல பொருளாதாரத் தடைகளை அறிவித்த அடுத்த நாள் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.[9]
விமானம் 10,000 மீட்டர் உயரத்தில் வைத்து பூக் நில வான் ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டிருப்பதாக உக்ரைனின் உட்துறை அமைச்சு அறிவித்தது.[10][11] உக்ரைனிய அரசுத்தலைவர் பெத்ரோ பொரொசென்கோ இதனை ஒரு "பயங்கரவாதத் தாக்குதல்" எனக் கூறியுள்ளார்.[12] உக்ரைனியப் படையினரே விமானத்தை சுட்டு வீழ்த்தினர் என கிளர்ச்சியாளர்கள் குற்றம் சுமத்தினர். தாம் ஒரு பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக கிளர்ச்சியாளர்கள் இருவர் தமக்குள் தொலைபேசியில் உரையாடியதைத் தமது புலனாய்வுப் பிரிவு ஒட்டுக் கேட்டதாக உக்ரைனிய அரசு அறிவித்தது.[13][14]
11 செப்டம்பர் 2001 தாக்குதலுக்குப் பிறகு நடந்த மிகவும் மோசமான வானூர்தித் தொடர்பான தாக்குதலாக இந்நிகழ்வு கருதப்படுகிறது[15].
நெதர்லாந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு சூலை 17, 2014 அன்று 12:15 (நெதர்லாந்து நேரம்) மணியளவில் விமானம் புறப்பட்டது. பயண அட்டவணைப்படி இவ்விமானம் காலை 06:10 (மலேசிய நேரம்) மணியளவில் கோலாலம்பூர் சென்று சேரவேண்டும். ஆனால் 17:15 (உக்ரைன் நேரம்) மணியளவில் கிழக்கு உக்ரேனின் வான்வெளிப் பகுதியில் விமானம் எரிந்து விழுந்தது. கடைசித் தொடர்பின்போது விமானம் 10,000 மீட்டர் உயரத்தில் பறந்துள்ளது.[16]
கடந்துவிட்ட நேரம் | நேரம் | நிகழ்வு | |||
---|---|---|---|---|---|
ஒருங்கிணைந்த அனைத்துலக நேரம் | ஆம்ஸ்டர்டாம் | உக்ரைன் | கோலாலம்பூர் | ||
00:00 | 10:14 | 12:14 | 13:14 | 18:14 | |
04:01 | 14:15 | 16:15 | 17:15 | 22:15 | விமானம் உக்ரைன் ரேடாரில் இருந்து மறைந்தது |
நாடு | எண்ணிக்கை |
---|---|
நெதர்லாந்து | 192[lower-alpha 1] |
மலேசியா | 44[lower-alpha 2] |
ஆத்திரேலியா | 27[18] |
இந்தோனேசியா | 12 |
ஐக்கிய இராச்சியம் | 10 |
பெல்ஜியம் | 4 |
செருமனி | 4 |
பிலிப்பீன்சு | 3 |
நியூசிலாந்து | 1[19] |
கனடா | 1 |
மொத்தம் | 298 |
விமானத்தில் பயணம் செய்த அனைத்து 283 பயணிகளும், 15 மலேசியப் பணியாளர்களும் உயிரிழந்தனர்.[20][21][22] இவர்களில் 192 பேர் நெதர்லாந்து நாட்டவர்.[23][24] சூலை 19 இல் அனைத்து 298 பேரினதும் விபரங்களை மலேசியா ஏர்லைன்சு நிறுவனம் வெளியிட்டது.[17]
ஆத்திரேலியாவின் மெல்பேர்ண் நகரில் நடைபெறும் 20வது பன்னாட்டு எயிட்சுக் மாநாட்டில் கலந்து கொள்ளவென விமானத்தில் போய்க்கொண்டிருந்த கிட்டத்தட்ட 100 எயிட்சு வல்லுநர்களும், பன்னாட்டு எயிட்சு நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஜோயிப் லாங்கேயும் இதில் கொல்லப்பட்டனர்.[25][26][27] இவர்களுடன் டச்சு மேலவை உறுப்பினர் வெல்லெம் விட்டெவீன்,[28] ஆத்திரேலிய எழுத்தாளர் லியாம் டேவிசன்,[29] மலேசியத் தமிழ் நடிகை சுபா ஜெய்,[30] மலேசியப் பிரதமர் நஜீப் துன் ரசாக்கின் பாட்டியார் சிறீ சித்த அமீரா[31] ஆகியோரும் இறந்த பிரபலங்களில் அடங்குவர்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.