இந்திய நாட்டின், பதின்மூன்றாம், 'மாண்புமிகு' குடியரசுத் தலைவராக இருந்த ஆளுமை. From Wikipedia, the free encyclopedia
பிரணப் குமார் முகர்ஜி (Pranab Mukherjee, வங்காள மொழி: প্রণব কুমার মুখার্জী, 11 திசம்பர் 1935 - 31 ஆகத்து 2020) (சுருக்கமாக பிரணாப் முகர்ஜி), இந்திய அரசியல்வாதி. 13 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவராக 2012 முதல் 2017 வரை பதவி வகித்தவர். மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மூத்த காங்கிரசு அரசியல்வாதியான பிரணப், குடியரசுத் தலைவர் ஆகும் முன்னர் மன்மோகன் சிங் அரசில் நிதி அமைச்சர் ஆக இருந்தார்.[2] முன்னதாக கல்கத்தா பல்கலைக்கழகத்திலிருந்து சட்டப் பட்டத்தைப் பெற்றுள்ளார்.
பிரணாப் முகர்ஜி | |
---|---|
13-வது இந்தியக் குடியரசுத் தலைவர் | |
பதவியில் 25 சூலை 2012 – 25 சூலை 2017 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
துணை அதிபர் | அமீத் அன்சாரி |
முன்னையவர் | பிரதீபா பட்டீல் |
பின்னவர் | ராம் நாத் கோவிந்த் |
இந்தியாவின் நிதியமைச்சர் | |
பதவியில் 24 சனவரி 2009 – 26 சூன் 2012 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | மன்மோகன் சிங் |
பின்னவர் | மன்மோகன் சிங் |
பதவியில் சனவரி 1982 – திசம்பர் 1984 | |
பிரதமர் | இந்திரா காந்தி ராஜீவ் காந்தி |
முன்னையவர் | ரா. வெங்கட்ராமன் |
பின்னவர் | வி. பி. சிங் |
வெளிவிவகாரத்துறை அமைச்சர் | |
பதவியில் 24 அக்டோபர் 2006 – 23 மே 2009 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | மன்மோகன் சிங் |
பின்னவர் | எஸ். எம். கிருசுனா |
பதவியில் பெப்ரவரி 10, 1995 – மே 16, 1996 | |
பிரதமர் | பி. வி. நரசிம்ம ராவ் |
முன்னையவர் | தினேசு சிங் |
பின்னவர் | சிக்கந்தர் பக்த் |
பாதுகாப்பு அமைச்சர் | |
பதவியில் 22 மே 2004 – 26 அக்டோபர் 2006 | |
பிரதமர் | மன்மோகன் சிங் |
முன்னையவர் | ஜார்ஜ் பெர்னாண்டஸ் |
பின்னவர் | அ. கு. ஆன்டனி |
திட்டக் குழு துணைத் தலைவர் | |
பதவியில் சூன் 24, 1991 – மே 15, 1996 | |
பிரதமர் | பி. வி. நரசிம்ம ராவ் |
முன்னையவர் | மோகன் தாரியா |
பின்னவர் | மது தண்டவதே |
தலைவர், மேற்கு வங்கம் பிரதேச காங்கிரசு கமிட்டி | |
பதவியில் ஆகத்து, 2000[1] – சூலை, 2010 | |
முன்னையவர் | சோமந்தரா நாத் மித்ரா |
பின்னவர் | மனாசு புனியா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | மிரதி, பீர்பம், பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு | 11 திசம்பர் 1935
இறப்பு | 31 ஆகத்து 2020 84) புதுதில்லி, இந்தியா | (அகவை
தேசியம் | இந்தியர் |
துணைவர் | சுவ்ரா முகர்ஜி |
வாழிடம்(s) | கொல்கத்தா, இந்தியா |
முன்னாள் கல்லூரி | கொல்கத்தா பல்கலைக்கழகம் |
இணையத்தளம் | ministry/dept eco affairs/dea.html Official Website |
1969ம் ஆண்டு இந்திரா காந்தியால் இந்திய மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர் 1975, 1981, 1993, 1999 ஆகிய ஆண்டுகளிலும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2004ம் ஆண்டு 14வது மக்களவைக்கு மேற்கு வங்காளத்தில் உள்ள ஜங்கிப்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார், 2009ம் ஆண்டு 15வது மக்களவைக்கு ஜங்கிப்பூரிலிருந்து மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார் [3]. இந்திரா காந்தி அமைச்சரவையில் 1982 - 84ல் நிதியமைச்சராக பணியாற்றினார். இந்திரா காந்தியின் மறைவுக்குப்பின் 1986-89 வரை காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி ராஷ்ட்ரிய சமாஜ்வாடி காங்கிரஸ் கட்சியைத் தொடங்கி நடத்தினார். 2004-06ல் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும், 1995-96, 2006-09 ஆகிய ஆண்டுகளில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் இருந்தார்[4].
2012ஆம் ஆண்டு சூலையில் நடந்த இந்தியக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பதியப்பட்ட 10,29,750 வாக்குகளில் 69.3% வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.[5] சூலை 25, 2012 அன்று இந்தியக் குடியரசின் பதினான்காவது குடியரசுத் தலைவராகப் (பதின்மூன்றாவது நபராக) பொறுப்பேற்றார்.
இவரது நூல்கள்:
மேற்கு வங்காளம் மாநிலம் பிர்பும் மாவட்டத்தில் உள்ள மிரதி எனும் கிராமத்தில் பிறந்தவர். தந்தை கமதா கின்கர் முகர்ஜி, தாயார் ராஜலட்சுமி. இவரின் தந்தை 1952-64 வரை மேற்கு வங்காளம் மாநில சட்ட மேலவை உறுப்பினராக இருந்தார் [6][7]. இவர் 1957ம் ஆண்டு ஜூலை 13ம் தேதி சுவ்ரா என்பவரை மணந்தார். இவர்களுக்கு அபிஜித், இந்திரஜித் என்ற மகன்களும், சர்மிஷ்தா என்ற மகளும் உள்ளனர்[8]. அபிஜித், மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சியின் ஜஙிபுர் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார், மகள் கதக் நடன கலைஞராக உள்ளார்[9]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.