ஊடக நிறுவனம் From Wikipedia, the free encyclopedia
பிபிசி (BBC) ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த, பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம், 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிபிசி தொலைக்காட்சி, வானொலி, இணையத்தள சேவைகளை வழங்குகிறது.
முந்தியது | பிரித்தானிய ஒலிபரப்புக் கம்பனி |
---|---|
நிறுவுகை | 1 சனவரி 1922 |
நிறுவனர்(கள்) | சான் ரீத் |
தலைமையகம் | இலண்டன், ஐக்கிய இராச்சியம் பிராட்காஸ்டிங் ஹவுஸ் |
சேவை வழங்கும் பகுதி | உலகம் முழுவதும் |
தொழில்துறை | மக்கள் ஊடகம் |
உற்பத்திகள் | |
சேவைகள் |
|
வருமானம் | £5.166 பில்லியன்(2013/14)[1] |
உரிமையாளர்கள் | ஐக்கிய இராச்சிய அரசாங்கம் |
பணியாளர் | 20,951 (2014/15)[2][3][4][5][6] including part-time, flexible as well as fixed contract staff, the total number is 35,402.[7] |
இணையத்தளம் | www (ஐக்கிய இராச்சியம்) www (மற்ற நாடுகள்) |
இதன் தலைமையகம் இலண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நகரத்தில் உள்ளது. இந்நிறுவனம் இருபத்து மூன்றாயிரம் பணியாளர்களைக் கொண்டுள்ள உலகின் பெரிய ஒலிபரப்பு நிறுவனமாகும். இந்நிறுவனம் வழங்கும் செய்திகள் உலகளவில் சேகரிக்கப்படுகின்றது. இதன் முதன்மைப் பணி ஐக்கிய இராச்சியத்திலுள்ள பகுதிகளுக்கு அரசு சார்பாக ஒலிபரப்புவதாகும். இது உலகின் 150 தலைநகரங்களில் ஒலிபரப்பாகிறது.
உலகின் 28 மொழிகளில் நிகழ்ச்சிகளை வழங்கும் பிபிசி வானொலி பிபிசி தமிழோசை என்ற பெயரில் நாள்தோறும் அரை மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. தமிழோசை நிகழ்ச்சிகளை பெப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி ஒலிபரப்புச் செய்து வந்தது எனினும் ஈழப்போர்ச் செய்திகளை பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பெப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினூடான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது[8].
இந்தியாவின் தலைநகரான புது தில்லியில் நடந்த பெண் வல்லுறவு நிகழ்வை ஒட்டி எடுக்கப்பட்ட இந்தியாவின் மகள் என்ற ஆவணப்படத்தில் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளி முகேஷ் சிங்கின் பேட்டி பெண்களை அவமதிப்பதாக இருப்பதாகக் கூறி, இதை ஒளிபரப்பு செய்த பிபிசியின் மீது இந்தியா அரசு நடவடிக்கை எடுக்க முயன்றது.[9]
பி பி சி இந்தியா அலுவலகத்தில் 14 பிப்ரவரி 2023 அன்று இந்திய வருமான வரி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.[10][11]6 சூன் 2023 அன்று பி பி சி இந்தியா, தாங்கள் ரூபாய் 40 கோடியை வருமான வரி கணக்கில் குறைத்துக் காட்டியதாக மின்னஞ்சல் மூலம் வருமான வரித் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.[12][13]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.