உற்பத்தி

From Wikipedia, the free encyclopedia

உற்பத்தி

உற்பத்தி என்பது இயந்திரம், கருவிகள் போன்றவற்றின் செயலாக்கத்தாலும், தொழிலாளிகளின் உழைப்பாலும் சரக்குகள் அல்லது பொருட்களை தயாரிப்பதாகும். உற்பத்தி என்ற சொல் மனிதச் செயல்பாடுகள், கைவினைப்பொருள் அல்லது உயர் நுட்பத் உற்பத்தி போன்றவைகளை குறிப்பதாயினும், பொதுவாக மூலப் பொருள்களில் இருந்து பெருமளவில் ஆக்கம்பெற்ற சரக்குகளை உற்பத்தி செய்யும் தொழிற்துறை தயாரிப்பை குறிப்பதாகும். இதுபோன்ற ஆக்கம்பெற்ற சரக்குகள், பின் வேறு சில சிக்கலான தயாரிப்புகளை உற்பத்தி செய்யவோ, அல்லது மொத்த வியாபாரிகளுக்கு விற்கவோ பயன்படுகின்றன.

Thumb
உற்பத்திபொருளின் வாழ்க்கை வட்டம்

உற்பத்தியானது பொருளாதார அமைப்புகளில் அனைத்து வகையான மாற்றங்களையும் ஏற்படுத்துகிறது. தடையற்ற சந்தைப் பொருளாதாரத்தில், வழக்காக உற்பத்தி என்பது நுகர்வோருக்கு விற்பதால் இலாபமுண்டாகிற தயாரிப்புகளின் மொத்த தயாரிப்புகளையே குறிப்பிடுகிறது. கூட்டுடைமையளர் பொருளாதாரத்தில், உற்பத்தி என்பது மத்தியில் திட்டமிட்ட பொருளாதாரத்திற்கு வழங்கும் நிலையைக் குறிப்பிடும். கலப்புச் சந்தைப் பொருளாதாரத்தில், உற்பத்தி என்பது அரசின் சில கட்டுப்பாடுகளுக்கு இடையில் நடைபெறுகிறது.

உற்பத்தியின் அடிப்படையில் நாடுகளின் பட்டியல்

உற்பத்தியில் முதல் 20 நாடுகளின் பட்டியல்கள், உலக வங்கியின் புள்ளிவிபரங்கள் அடிப்படையில் மொத்த அமெரிக்க டாலர்களில்[1]

மேலதிகத் தகவல்கள் தரவரிசை, நாடு ...
தரவரிசைநாடுபத்து லட்சம் $US Year
 உலக உற்பத்தி13,171,0002017
1 சீனா4,002,7522018
2 ஐக்கிய அமெரிக்கா2,173,3192017
3 சப்பான்1,007,3302017
4 செருமனி832,4312018
5 தென் கொரியா440,9412018
6 இந்தியா408,6932018
7 இத்தாலி310,8972018
8 பிரான்சு273,9712018
9 ஐக்கிய இராச்சியம்251,9852018
10 மெக்சிக்கோ208,4982018
11 இந்தோனேசியா207,0172018
12 உருசியா203,9882018
13 பிரேசில்180,5412018
14 எசுப்பானியா180,2642018
15 கனடா160,5312015
16 துருக்கி146,0772018
17 தாய்லாந்து135,9272018
18 சுவிட்சர்லாந்து129,1622018
19 அயர்லாந்து115,5912018
20 சவூதி அரேபியா100,2322018
மூடு

மேற்கோள்கள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.