From Wikipedia, the free encyclopedia
பத்ராவதி (Bhadravati) இந்திய மாநிலமான கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தின் சிமோகா வருவாய் வட்டத்தில் உள்ள நகரமாகும். பத்ராவதி நகரம் பெங்களூரிவிலிருந்து 255 கிலோ மீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான சிமோகா நகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] பத்ராவதி நகராட்சி 67.05 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,51,102 மக்கள் தொகையும் கொண்டது.[3]
பத்ராவதி
ಭದ್ರಾವತಿ இரும்பு நகரம் | |
---|---|
நகரம் | |
அடைபெயர்(கள்): வெங்கிபுரம் அல்லது உக்கு நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | கர்நாடகம் |
மாவட்டம் | சிமோகா |
தோற்றுவித்தவர் | விஸ்வேஷ்வரய்யா |
பெயர்ச்சூட்டு | பத்ரா ஆறு |
பரப்பளவு | |
• மொத்தம் | 67.0536 km2 (25.8895 sq mi) |
ஏற்றம் | 597 m (1,959 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,51,102 |
• அடர்த்தி | 2,300/km2 (5,800/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | கன்னடம், |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 577301, 577302 |
தொலைபேசி குறியீடு எண் | +91-8282 |
ஐஎசுஓ 3166 குறியீடு | ISO எண் 3166-2:IN |
வாகனப் பதிவு | KA-14 |
பாலின விகிதம் | 1.04 ♂/♀ |
எழுத்தறிவு விகிதம் | 73.9% |
பெங்களூருவிலிருந்து தொலைவு | 255 கிலோமீட்டர்கள் (158 mi) NW |
சிமோகாவிலிருந்து தூரம் | 20 கிலோமீட்டர்கள் (12 mi) E |
தட்பவெப்ப நிலை | கோப்பென் காலநிலை வகைப்பாடு |
சராசரி மழைப் பொழிவு | 950 மில்லிமீட்டர்கள் (37 அங்) |
சராசரி கோடைக்கால வெப்பநிலை | 31 °C (88 °F) |
சராசரி குளிர்கால வெப்பநிலை | 25 °C (77 °F) |
இணையதளம் | bhadravathicity |
இந்நகரில் பாயும் பத்ரா ஆற்றின் பெயரால் இந்நகருக்கு பத்ராவதி எனப் பெயர் ஆயிற்று. இந்நகரத்தின் முந்தைய பெயர் பேன்கிபுரா அல்லது பேன்கி பட்டின ஆகும்.[2] ஹோய்சாளர்கள் இந்நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பத்ராவதி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,51,102 ஆகும். அதில் ஆண்கள் 75,009 ஆகவும்; பெண்கள் 76,093 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 86.36% ஆகவும் உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 1014 பெண்கள் என்ற அளவில் பாலின விகிதம் உள்ளது.[4] [5] ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள், மொத்த மக்கள் தொகையில் 10% அளவில் உள்ளனர்.[6] பத்ராவதி நகரத்தின் முக்கிய மொழி கன்னட மொழி ஆகும்.
தேசிய நெடுஞ்சாலை எண் 206 மற்றும் 13 பத்ராவதி நகரத்தின் வழியாக செல்கிறது. பெங்களூருவிலிருந்து சிமோகா செல்லும் பேருந்துகள் பத்ராவதி நகரத்தில் நின்று செல்கிறது.
சிமோகா – பெங்களூர், மைசூர் – சிமோகா, பிரூர் – சிமோகா செல்லும் அனைத்து தொடருந்துகளும், பத்ராவதி தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.[7]
பத்ராவதி நகரத்தில் இரும்புத் தொழிற்சாலையும், காகித தொழிற்சாலையும் உள்ளது.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.