இந்திய ஆண் ஈட்டி எறி வீரர் From Wikipedia, the free encyclopedia
நீரஜ் சோப்ரா (Neeraj Chopra, விசேப; பிறப்பு: 24 திசம்பர் 1997)[5] என்பவர் இந்திய ஈட்டி எறிதல் வீரரும், இந்தியத் தரைப்படையின் இளநிலை அதிகாரியும் ஆவார். இவர் இளையோருக்கான உலக வாகைத் தடகளப் போட்டிகளில் வெற்றியடைந்த முதலாவது இந்திய வீரரும், ஒலிம்பிக் தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் பெற்ற முதலாவது இந்தியரும் ஆவார்.[8]
தனிநபர் தகவல் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுட்டுப் பெயர்(கள்) | தங்க மகன் [1][2][3][4] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேசியம் | இந்தியர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 24 திசம்பர் 1997[5] பானிப்பத், அரியானா, இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கல்வி | DAV கல்லூரி, சண்டிகர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இராணுவப் பணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சார்பு | இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சேவை/ | இந்தியத் தரைப்படை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சேவைக்காலம் | 2016–இன்று | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தரம் | Subedar | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தொடரிலக்கம் | JC-471869A[6] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
படைப்பிரிவு | 4 ராஜ்புத்தனா துப்பாக்கி[7] | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விருதுகள் | விசிட்ட சேவா பதக்கம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாடு | இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
விளையாட்டு | தடகளம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | ஈட்டி எறிதல் (விளையாட்டு) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பயிற்றுவித்தது | ஊவ் ஹோன் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
சாதனைகளும் விருதுகளும் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தனிப்பட்ட சாதனை(கள்) | NR 89.94மீ (2021) | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பதக்கத் தகவல்கள்
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
7 ஆகத்து 2021 இற்றைப்படுத்தியது. |
2016 ஆம் ஆண்டில் 20 வயதிற்குக் குறைவானோருக்கான உலக வாகையாளர் போட்டிகளில் ஈட்டி எறிதல் போட்டியில் 86.48 மீ தூரம் எறிந்து இளையோருக்கான உலக சாதனையை ஏற்படுத்தினார்.[9] 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடக்க விழாவில் சோப்ரா இந்தியாவுக்கான கொடி ஏந்துவதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், இது அவரது முதலாவது ஆசிய விளையாட்டுப் போட்டியாகும்.[10][11] 2018 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் 88.06 மீ தூரம் ஈட்டி எறிந்து இந்தியாவுக்காகத் தங்கப் பதக்கம் பெற்றார்.[12] 2018 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்றார். 2021 ஆம் ஆண்டில் தோக்கியோவில் நடைபெற்ற 2020 ஒலிம்பிக் போட்டிகளில் சோப்ரா 87.58 மீ தூரம் ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் பெற்றார்.
நீரஜ் சோப்ரா ஒலிம்பிக் போட்டிகளில் தனிநபர் தங்கப் பதக்கம் வென்ற இரண்டு இந்தியர்களில் ஒருவர்,[13][14] அத்துடன் ஒரு தனிநபர் நிகழ்வில் இளையோருக்கான தங்கம் வென்ற இந்தியர், மற்றும் ஒலிம்பிக் அறிமுகத்தில் தங்கம் வென்ற முதலாவது இந்திய வீரர், ஒலிம்பிக் தங்கம் வென்ற மிக இளைய இந்திய வீரர் ஆகிய பெருமைகளைப் பெற்றார்.[15]
இவர் 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதல் விளையாட்டில், 7 ஆகத்து 2021 அன்று 87.58 மீட்டர் நீளத்திற்கு ஈட்டி எறிந்து தங்கப் பதக்கம் வென்றார்.[16]
ஐக்கிய அமெரிக்காவின் யூஜின் நகரத்தில் நடைபெற்ற 2022 [உலக_தடகள_போட்டிகள்|[உலக தடகள போட்டிகளில்]] 88.13 மீ தூரம் ஈட்டி எறிந்து வெள்ளிப்பதக்கத்தை வென்றார். இதன் மூலம் உலக தடகள போட்டிகளில் பதக்கம் வெல்லும் இரண்டாவது வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா அடைத்தார். இதற்கு முன் 2003 ஆம் ஆண்டு அஞ்சு பாபி ஜார்ஜ் பாரீசில் நடைபெற்ற உலக தடகள போட்டிகளில் வெண்கலம் வென்றிருந்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.