From Wikipedia, the free encyclopedia
நடு ஐரோப்பா (Central Europe, மத்திய ஐரோப்பா) என்பது ஐரோப்பா கண்டத்தின் கிழக்கு, மற்றும் மேற்குப் பகுதிகளுக்கு இடையேயுள்ள பிராந்தியத்தைக் குறிக்கும். பனிப்போர் முடிவடைந்த பின்னர் ஐரோப்பாவின் கிழக்கையும் மேற்கையும் அரசியல் ரீதியாக பிரிப்பதன் பொருட்டு, அதற்கிடைப்பட்ட பகுதிகளை வேறுபடுத்துவதற்காக நடு ஐரோப்பா என்ற பெயர் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.[1][2] 2004 ஆம் ஆண்டில் விசெகிராது குழு நாடுகள் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைந்ததன் பின்னர் இதன் பயன்பாடு அதிகரித்தது.[3]
மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்படையில் நடு ஐரோப்பிய நாடுகள் "மிகவும் வளர்ச்சியடையும் நாடுகள்" வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.[4]
"நடு ஐரோப்பா" என்ற கருத்துரு பொதுவாக சர்ச்சைக்குரியதாகும்.[6] ஆனாலும், விசெகிராது குழு உறுப்பு நாடுகள் நடைமுறைப்படி நடு ஐரோப்பிய நாடுகளில் அடங்கியுள்ளன.[7] பொதுவாகப் பின்வரும் நாடுகள் நடு ஐரோப்பியப் பிராந்தியத்தினுள் உள்ளடக்கப்பட்டுள்ளன:
Seamless Wikipedia browsing. On steroids.