From Wikipedia, the free encyclopedia
தைகா டேவிட் கோஹன்[2][3][4] (ஆங்கில மொழி: Taika David Cohen) (பிறப்பு: 16 ஆகத்து 1975) என்பவர் நியூசிலாந் நாட்டு திரைக்கதை ஆசிரியர், திரைப்பட இயக்குநர், நகைச்சுவையாளர், நடிகர் மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஒரு அகாதமி விருது மற்றும் கிராமி விருது, அத்துடன் இரண்டு பிரதானநேர எம்மி விருதுளையும் பெற்றுள்ளார். இவரது படங்களான பாய் (2010) மற்றும் ஹன்ட் ஃபார் தி வைல்டர் பீப்பிள் (2016) ஆகிய திரைப்படங்கள் அதிக வசூல் செய்த நியூசிலாந்து திரைப்படங்கள் ஆகும்.[5][6]
தைகா வைதிதி | |
---|---|
பிறப்பு | தைகா டேவிட் கோஹன் 16 ஆகத்து 1975 நியூசிலாந்து |
படித்த கல்வி நிறுவனங்கள் | வெலிங்டன் விக்டோரியா பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1999–இன்று வரை |
அறியப்படுவது | |
வாழ்க்கைத் துணை | செல்சியா வின்ஸ்டன்லி (தி. 2011) [1] |
பிள்ளைகள் | 2 |
இவர் 2017 ஆம் ஆண்டு முதல் மார்வெல் திரைப்படமான தோர்: ரக்னராக்[7][8] மற்றும் தோர்: லவ் அண்ட் தண்டர்[9] (2022) போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். 2019 ஆம் ஆண்டு ஜோஜோ ராபிட்[10] என்ற படத்தை எழுதி, தயாரித்து மற்றும் இயக்கியுள்ளார். இப் படத்திற்க்காக ஆறு அகாதமி விருது பரிந்துரைகளைப் பெற்று சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருதை வென்றுள்ளார்.[11][12]
ஆண்டு | படம் | இயக்குநர் | எழுத்தாளர் | தயாரிப்பாளர் | குறிப்பு |
---|---|---|---|---|---|
2007 | ஈகிள் விஸ் ஷார்க் | ஆம் | ஆம் | இல்லை | |
2010 | பாய்[13] | ஆம் | ஆம் | இல்லை | |
2014 | வாட் வி டூ இன் தி ஷடோவ்ஸ் | ஆம் | ஆம் | ஆம் | ஜெமைன் கிளெமென்ட் உடன் இணைந்து இயக்கியுள்ளார் |
2016 | ஹன்ட் ஃபார் தி வைல்டர் பீப்பிள்[14] | ஆம் | ஆம் | ஆம் | |
2017 | தோர்: ரக்னராக்[15] | ஆம் | இல்லை | இல்லை | |
2017 | தி பிரேக்கர் அப்பேரஸ் | இல்லை | இல்லை | ஆம் | |
2019 | ஜோஜோ ராபிட் | ஆம் | ஆம் | ஆம் | சிறந்த தழுவிய திரைக்கதையிற்கான அகாதமி விருது சிறந்த தழுவிய திரைக்கதைக்கான பாஃப்டா விருது பரிந்துரை – சிறந்த திரைப்படத்திற்கான அகாதமி விருது |
2020[16] | பேபி டன் | இல்லை | இல்லை | ஆம் | |
2022 | தோர்: லவ் அண்ட் தண்டர் | ஆம் | ஆம் | இல்லை | படப்பிடிப்பு; ஜெனிபர் கெய்டின் ராபின்சன் உடன் இணைந்து எழுதப்பட்டது |
TBA | நெஸ்ட் கோல் வின்ஸ்[17] | ஆம் | ஆம் | ஆம் | பிந்தைய தயாரிப்பு; ஐயன் மோரிஸ் உடன் இணைந்து எழுதப்பட்டது |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.