திபெத்திய நரி

From Wikipedia, the free encyclopedia

திபெத்திய நரி

திபெத்திய நரி (Tibetan fox-விலுப்பெசு பெரிலேடா), திபெத்திய மணல் நரி என்றும் அழைக்கப்படுகிறது. இது திபெத்திய பீடபூமி, இலடாக் பீடபூமி, நேபாளம், சீனா, சிக்கிம் மற்றும் பூட்டான் வரை சுமார் 5,300 m (17,400 அடி) உயரம் வரையிலான பகுதிகளில் காணப்படும் அகணிய உயிரி ஆகும். திபெத்திய பீடபூமியின் புல்வெளிகள் மற்றும் பகுதி பாலைவனங்களில் பரவியிருப்பதன் காரணமாக, இது பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் தீவாய்ப்புக் கவலை குறைந்த இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[1]

விரைவான உண்மைகள் திபெத்திய நரி, காப்பு நிலை ...
திபெத்திய நரி
Thumb
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
விலுப்பெசு
இனம்:
வி. பெரிலேடா
இருசொற் பெயரீடு
விலுப்பெசு பெரிலேடா[2]
கோட்ஜ்சன், 1842[3]
Thumb
திபெத்திய நரி பரம்பல்
வேறு பெயர்கள்
  • விலுப்பெசு பெரிலேடா
  • விலுப்பெசு எக்லோனி (பிரிசிவால்சிகி, 1883)
  • கேனிசு பெரிலேடா
  • கேனிசு எக்லோனி
  • நியோசையான் பெரிலேடா
  • நியோசையான் எக்லோனி
மூடு

பண்புகள்

திபெத்திய நரி சிறியது, மென்மையான, அடர்த்தியான தோலினையும், குறுகிய முகவாயினையும் அடர் வாலினையும் கொண்டது. இதன் முகவாய், தலை, கழுத்து, முதுகு மற்றும் காலின் கீழ்ப்பகுதி பழுப்பு நிறமாக இருக்கும். இதன் கன்னங்கள், பக்கவாட்டுகள், கால் மேற்பகுதி மற்றும் பிடரி சாம்பல் நிறத்திலிருக்கும். இதன் வால் நுணி வெண்மையாக இருக்கும்.[4] குறுகிய காதுகளின் பின்புறத்தில் பழுப்பு முதல் சாம்பல் நிறத்திலிருக்கும். அதே நேரத்தில் உட்புறங்கள் மற்றும் அடிப்பகுதிகள் வெண்மையாக இருக்கும். முதிர்ச்சியடைந்த திபெத்திய நரிகள் 60 முதல் 70 செ. மீ. வரையிலிருக்கும். இதனுடைய வால் நீளம் 29 முதல் 40 செ. மீ. நீளமானது. இதன் எடை பொதுவாக 4 முதல் 5.5 கிலோ வரையிலிருக்கும்.[5]

நரிகளில், இதன் மண்டையோட்டமைப்பு ஊனுண்ணிகளில் மிகவும் சிறப்பு வாய்ந்தது.[6] இது காண்டிலோபாசல் நீளத்திலும், மலை நரிகளை விடக் கட்டைவிரல் மற்றும் கன்னப் பல் நீளமாக உள்ளது. இதன் மண்டையோட்டு பகுதி மலை நரிகளை விடக் குறுகியது. மேலும் இது கன்ன எலும்பு வளைவுகள் குறுகியது. இதன் தாடைகளும் மிகவும் குறுகலாகவும், நெற்றியின் குழிவானதாகவும் இருக்கும். இந்த நரியின் கோரைப் பற்கள் மலை நரிகளின் பற்களை விட மிக நீளமானவை.[7]

பரவலும் வாழிடமும்

திபெத்திய நரி மேற்கு சீனாவில் உள்ள திபெத்திய பீடபூமி மற்றும் வட இந்தியாவில் உள்ள இலடாக்கு பீடபூமி வரை காணப்படுகிறது. இமயமலைக்கு வடக்கே நேபாளம் மற்றும் இந்தியாவின் வடக்குப் எல்லைப் பகுதிகளிலும், திபெத்து முழுவதும் மற்றும் சீன மாகாணங்களான கிங்காய், கான்சு, ஜின்ஜியாங், யுன்னான் மற்றும் சிச்சுவான் பகுதிகளிலும் திபெத்திய நரி காணப்படுகிறது.[1] இது முதன்மையாக மனிதர்கள் வாழிடமிருந்து வெகு தொலைவிலோ அல்லது அதிகமான தாவரங்கள் காணப்படும் பகுதிகளிலிருந்து பகுதி வறண்ட புல்வெளிகளில் வாழ்கிறது. இது 3,500 முதல் 5,200 மீ (11,500 முதல் 17,100 ) உயரத்தில் உள்ள மேட்டுநில சமவெளிகள் மற்றும் மலைகளில் வாழ்கிறது. மேலும் அவ்வப்போது சுமார் 2,500 m (8,200 அடி) மீ (8,200 ) உயரங்களில் காணப்படுகிறது.[8]

நடத்தை மற்றும் சூழலியல்

திபெத்திய நரி முதன்மையாகப் பீடபூமி பிகாக்களை வேட்டையாடுகிறது. மேலும் கொறித்துண்ணிகள், மர்மோட்டு எனப்படும் அணில்கள், கம்பளி குழி முயல்கள், முயல்கள் மற்றும் சிறிய தரை பறவைகள் மற்றும் பல்லிகளை உணவாக உட்கொள்கின்றன.[9] இது திபெத்திய மான், கத்தூரி மான், நீல செம்மறி ஆடு மற்றும் கால்நடைகளின் உடல்களையும் திண்ணும். திபெத்திய நரிகள் பெரும்பாலும் தனிமையானவை, பகல்நேர வேட்டைக்காரர்கள்.[4] திபெத்திய நரிகள் பிகாக்களை வேட்டையாடும் போது பழுப்புக் கரடிகளுடன் பொது உறவுகளை உருவாக்கலாம். கரடிகள் பிகாக்களைத் தோண்டி எடுக்கின்றன, வேட்டையின் போது கரடிகளிடமிருந்து பிகாக்கள் தப்பிக்கும்போது நரிகள் துரத்திப் பிடிக்கிறது.[5]

இனச்சேர்க்கை சேர்ந்த இணைகள் ஒன்றாக இருக்கவும் ஒன்றாக வேட்டையாடவும் செய்கின்றன.[10] கர்ப்பக் காலம் சுமார் 50 முதல் 60 நாட்களாகும். ஒரு முறை இரண்டு முதல் நான்கு குட்டிகளை ஈனுகின்றன. குட்டிகள் எட்டு முதல் பத்து மாதங்கள் வரை பெற்றோருடன் குகைகளில் தங்குகின்றன.[8] இவற்றின் வளைகள் கற்பாறைகளின் அடிப்பகுதியில் நான்கு நுழைவாயில்களுடன் ஒவ்வொரு நுழைவாயிலும் 25–35 cm (9.8–13.8 அங்) விட்டத்துடன் காணப்படும்.[4]

நோய் தாக்கம்

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் செர்க்சு கவுண்டியில் காணப்படும் திபெத்திய நரிகள் எச்சினோகாக்கசு நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் மேற்கு சிச்சுவானில் உள்ள நரிகள் பல்லீறு நீர்க்குமிழ் நோய் காரணியின் புரவலன்கள் ஆகும்.[4]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.