From Wikipedia, the free encyclopedia
கிங்ஹாய் மாகாணம் (சீனம்: 青海; என்பது மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். இது நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ளது. இது சீன மக்கள் குடியரசு மாகாணங்களில் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணங்களில் ஒன்று. இது பரப்பளவில் சீனாவில் நான்காவது இடத்தை வகிக்கிறது. ஆனால் மக்கள் தொகையில் குறைந்த மாகாணங்களில் மூன்றாவது இடத்தை வகிக்கிறது.
கிங்ஹாய் மாகாணம்
Qinghai Province 青海省 | |
---|---|
மாகாணம் | |
பெயர் transcription(s) | |
• சீனம் | 青海省 (Qīnghǎi Shěng) |
• சுருக்கம் | 青 (pinyin: Qīng) |
Other transcription(s) | |
• Tibetan | མཚོ་སྔོན་ཞིང་ཆེན། |
• Mongolian | ᠬᠥᠬᠡ ᠨᠠᠭᠤᠷ ᠮᠤᠶᠶ |
சீனாவில் அமைவிடம்: கிங்ஹாய் மாகாணம் Qinghai Province | |
பெயர்ச்சூட்டு | Derived from the name of Qinghai Lake ("blue/green lake"). |
தலைநகரம் (மற்றும் பெரிய நகரம்) | ஜினிங் |
பிரிவுகள் | 8 அரச தலைவர், 43 கவுண்டி மட்டம், 429 நகர மட்டம் |
அரசு | |
• செயலாளர் | லுவோ ஹுய்நிங் |
• ஆளுநர் | ஹவோ பிங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 7,20,000 km2 (2,80,000 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 4வது |
மக்கள்தொகை (2010)[2] | |
• மொத்தம் | 56,26,722 |
• தரவரிசை | 30வது |
• அடர்த்தி | 7.8/km2 (20/sq mi) |
அடர்த்தி தரவரிசை | 30வது |
மக்கள் வகைப்பாடு | |
• இனங்கள் | ஹான் - 54% திபெத்தியர் - 21% ஊய் - 16% து - 4% மங்கோலியர் - 1.8% சாலர் - 1.8% |
• மொழிகளும் கிளைமொழிகளும் | Zhongyuan Mandarin-Chinese, Amdo Tibetan, Monguor, Oirat Mongolian, Salar, and Western Yugur |
ஐஎசுஓ 3166 குறியீடு | CN-63 |
GDP (2011) | CNY 163.4 billion US$ 25.9 billion (30வது) |
• per capita | CNY 24,115 US$ 3,562 (22வது) |
HDI (2010) | 0.638[3] (medium) (27வது) |
இணையதளம் | http://www.qh.gov.cn/ (Simplified Chinese) |
கிங்ஹாய் மாகாணம் | |||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சீனப் பெயர் | |||||||||||||||||||||||||||||
சீனம் | 青海 | ||||||||||||||||||||||||||||
சொல் விளக்கம் | "Azure Sea" | ||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||
Tibetan name | |||||||||||||||||||||||||||||
Tibetan | མཚོ་སྔོན་ | ||||||||||||||||||||||||||||
|
மாகாணத்தின் பெரும்பாலான பகுதி கிங்காய்-திபெத் பீடபூமி பகுதியில் அமைந்துள்ளது. மாகாணம் பல இன குழுக்களின் உறைவிடமாக உள்ளது. இங்கு ஹான் சீனர், திபெத்தியர்கள், ஊய் மக்கள், தூ, மங்கோலியர்கள், சாலர் ஆகிய இனக்குழுவினர் வாழ்கின்றனர். சிங்காய் மாகாணத்தின் எல்லைகளாக வடகிழக்கில் கான்சு, வடமேற்கில் சிஞ்சியாங், தென்கிழக்கில் சிச்சுவான், தென்மேற்கே திபெத் தன்னாட்சிப் பகுதி ஆகியவை உள்ளன. இந்த மாகாணம் சீனக்குடியரசால் 1928 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இந்த மாகாணத்தைக் குறிக்கும் "கிங்காய்" என்ற சீனப்பெயர் சீனாவில் உள்ள மிகப்பெரிய ஏரியும் இந்த மாகாணத்தில் அமைந்துள்ள ஏரியுமான சிங்காய் ஏரியின் (சியான் கடல் ஏரி) பெயரில் இருந்து வந்தது.
சீனாவின் வெண்கலக் காலத்தில் இருந்து கிங்காய் பகுதியில் குவாங் மக்கள் பாரம்பரியமாக வேளாண்மை மற்றும் கால்நடை வளர்ப்புத் தொழில் செய்து வந்துள்ளனர். கிங்காய் பகுதியின் கிழக்கு பகுதியில் ஆன் அரசமரபின் கட்டுப்பாட்டின் கீழ் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வந்தது. தாங் அரசமரபு ஆட்சிக்காலத்தில் கிங்காய் பகுதி பல போர்களை சந்தித்தது. தொடர்ந்து சீனர்களுக்கும் திபெத்திய பழங்குடியினருக்கு இடையில் பல போர்கள் நடந்தது.[4] மூன்றாம் நூற்றாண்டின் மத்தியில், மங்கோலிய இனத்தைச் சார்ந்த நாடோடி மக்களான மங்கோலிய ஷியான்பை மக்கள் சிங்காய் ஏரியைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களில் குடியேறி துயுஹன் அரசை நிறுவினர். ஏழாம் நூற்றாண்டில் இருந்து துயுஹன் அரசு சீனாவின் டாங் அரசமரபு மற்றும் திபெத்திய பேரரசு ஆகியவற்றால் தொடர்ந்து தாக்கப்பட்டுவந்தது. வணிகப்பாதைகளைக் கட்டுப்பாடுத்த முற்பட்ட இந்த போர்களினால் துயுஹன் அரசு வலுவிழந்தது. பிறகு இது திபெத்தியப் பேரரசுடன் இணைக்கப்பட்டது. திபெத்தியப் பேரரசு சிதைந்தபின் பிராந்தியத்தின் சிறிய பகுதிகள் சீனாவின் அதிகாரத்தின் கீழ் வந்தன. 1070 களில் சொங் அரசமரபு திபெத்திய கோகோனார் அரசைத் தோற்கடித்தனர்.[5]
கிங்காய் மாகாணம் திபெத்திய பீடபூமியின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. மஞ்சள் ஆறு மாகாணத்தில் தெற்கு பகுதியில் உருவாகிறது. கிங்காய் பிராந்தியத்தின் சராசரி உயரம் கடல் மட்டத்திலிருந்து 3,000 மீட்டர் (9,800 அடி) ஆகும். மாகாணத்தில் டாங்குல்லா மலைத்தொடர் மற்றும் குன் லுன் மலைத்தொடர் ஆகியவை அமைந்துள்ளன. மிக உயர்ந்த இடம் புகாடாபன் ஃபெங் 6.860 மீட்டர் (22,510 அடி) ஆகும். [22] கிங்காய் உயர்ந்த பகுதியில் இருப்பதால் மிகவும் குளிராகவும் (மிகக் கடுமையான குளிர்), லேசான கோடை, மேலும் பெரிய அளவில் பகலிரவு வெப்பநிலையில் மாறுபாடு நிலவுகிறது. இதன் ஆண்டு சராசரி வெப்பநிலை −5 முதல் 8 °செ (23 to 46 °பா) வரையாகும், சனவரி மாத சராசரி வெப்பநிலை -18 ல் இருந்து -7 ° செ (0 19 ° பா) வரையும், சூலை மாத வெப்பநிலை 15 முதல் 21 ° செ ( 59- 70 ° பா ) வரையும் உள்ளது. பெப்ரவரி முதல் ஏப்ரல் வரை கடும் புழுதிப்புயல் வீசுகிறது. கோடைக் காலத்தில் குறிப்பிடத்தக்க அளவு மழை பொழிகிறது. குளிர் மற்றும் வசந்த காலங்களில் மழை மிகவும் குறைவாக இருக்கும். சீன மக்கள் குடியரசில் உள்ள தன்னாட்சிப் பகுதிகளைத் தவிர்த்து நோக்கின் கிங்காய் மாகாணம்தான் சீனாவின் பரப்பளவில் மிகப்பெரிய மாகாணம் ஆகும். மாகாணத்தில் உள்ள சிங்காய் ஏரி உலகின் இரண்டாவது மற்றும் சீனாவின் மிக பெரிய உப்பு நீர் ஏரி ஆகும்.
கிங்காய் பொருளாதாரம் என்பது சீனாவில் சிறிய இடத்தையே வகிக்கிறது. இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2011 ஆண்டில் 163,4 பில்லியன் ரென்மின்பி (அமெரிக்க $ 25.9 பில்லியன்) என்று இருந்தது. இது முழு நாட்டின் பொருளாதாரத்தில் 0.35% மட்டுமே ஆகும். தனிநபர் உள்நாட்டு உற்பத்தி 19.407 ரென்மின்பி (அமெரிக்க $ 2,841) என சீனாவின் இரண்டாவது மிகக் குறைவான இடத்தில் உள்ளது.[6] இதன் பெரும் தொழில் நிறுவனங்களான இரும்பு, எஃகு உற்பத்தி நிறுவனங்கள் இதன் தலைநகரான ஜினிங் நகரினருகே அமைந்துள்ளன. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு உற்பத்தி இதன் பொருளாதாரத்தில் ஒரு முக்கியமான இடத்தை வகிக்கிறது.[6] மாகாணத்தில் உள்ள பல உப்பு ஏரிகளை ஒட்டி பல உப்பளங்கள் செயல்படுகின்றன. மாகாண தலைநகரான கஜினிங்க்கு வெளியே, கிங்காய் மாகாணத்தின் வளர்ச்சி குறைந்து உள்ளது. கிங்காய் மாகாணத்தின் உள்ள நெடுஞ்சாலைகள் நீளத்தின் அடிப்படையில் சீனாவின் குறைவான தரவரிசையையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
5.2 மில்லியன் மக்கள் உள்ள கிங்காய் மாகாணத்தில் அங்கீகரிக்கப்பட்ட 37 இனக் குழுக்கள் உள்ளன. தேசிய அளவிலான சிறுபான்மையினர் மக்கள் தொகையில் 46.5% இந்த மாகாணத்தில் வாழ்கின்றனர். மக்கள் விகிதாச்சாரம் கான்சு மாகாணத்தை ஒத்ததாக, ஹான் சீனர் (54.5%), திபெத்திய மக்கள் (20.7%), ஊய் மக்கள் (16%), தூ மக்கள் (4%) ஆகும்.
கிங்காய் மாகாணத்தில் சீன நாட்டுப்புற மதங்கள் ( தாவோயிச மரபுகள் மற்றும் கன்ஃபூஷியசம் உட்பட ) சீன பௌத்தம் போன்றவை ஹான் சீனர் மத்தியிலும், திபெத்திய மக்கள் மத்தியில் திபெத்திய பௌத்தம் அல்லது திபெத்திய பழங்குடி இன சமயமும், ஊய் மக்கள் மத்தியில் இஸ்லாமும், உள்ளது. 2004 சீனப்பொதுச் சமூகக்கணக்கெடுப்புப்படி மாகாணத்தின் மக்கள் தொகையில் 0.76% மக்கள் கிருத்துவர்கள் ஆவர்.[7]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.