From Wikipedia, the free encyclopedia
ஜேம்ஸ் ஜோசப் ப்ரௌன் (James Joseph Brown, மே 3, 1933 - டிசம்பர் 25, 2006) பலராலும் சோல் இசையில் தந்தை (The Godfather of Soul) என்றழைக்கப்பட்டார். கேளிக்கைத் துறையிலேயே கடுமையாக உழைக்கும் மனிதன் (The Hardest Working Man in Show Business) என்ற பெயரும் இவருக்கு இருந்தது. அமெரிக்காவைச் சேர்ந்த இவர் இருபதாம் நூற்றாண்டின் இசையின் போக்கை மாற்றியமைத்தவர்களில் மிகவும் முக்கியமானவர். பலத்த குரலில் பாடும் பழக்கம், வெறிபிடித்த் ஆட்டம் மற்றும் தனித்தன்மையுள்ள தாளக்கட்டுக்குச் சொந்தக்காரர்.
ஜேம்ஸ் ப்ரௌன் | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | ஜேம்ஸ் ஜோசஃப் ப்ரௌன் ஜூனியர்[1] |
பிறப்பு | பார்ன்வெல், தென் கரொலைனா, ஐக்கிய அமெரிக்கா | மே 3, 1933
பிறப்பிடம் | அகஸ்தா, ஜோர்ஜியா |
இறப்பு | திசம்பர் 25, 2006 73) அட்லான்டா, ஜோர்ஜியா[2] | (அகவை
இசை வடிவங்கள் | ஆர்&பி, சோல், ஃபங்க், ராக் |
தொழில்(கள்) | பாடகர், பாடல் எழுத்தாளர், bandleader, இசை தயாரிப்பாளர் |
இசைக்கருவி(கள்) | பாடல், கிட்டார், harmonica, bass, keyboards, drums, percussion instruments |
இசைத்துறையில் | 1956 – 2006 |
வெளியீட்டு நிறுவனங்கள் | ஃபெடெரல், கிங், ட்ரை மி, ஸ்மாஷ், பீப்பிள், பாலிடோர், ஸ்காட்டி ப்ரொஸ். |
இணைந்த செயற்பாடுகள் | த ஃபேமஸ் ஃப்லேம்ஸ், த ஜே.பி.'ஸ், த சோல் ஜெனெரல்ஸ் |
பாடகர், பாடலாசிரியர், பாடற்குழுத் தலைவர், பாடல் தயாரிப்பாளர் என்று பல முகங்களைக் கொண்டவர். Gospel இசையெனப்படும் தேவாலயங்களில் பாடும் இசை மற்றும் rhythm and blues இசை வகைகளிலிருந்து Soul இசை மற்றும் funk இசை உருவாக மிகப்பெரும் சக்தியாகவிருந்தவர் ஜேம்ஸ் ப்ரௌன். இதுபோக, ராக் (rock), ஜாஸ் (Jazz), டிஸ்கோ (disco), டான்ஸ் (dance), இலத்திரனிசை (electronic music), ரெகே (reggae), ஆஃப்ரோ-பீட் (afrobeat), ஹிப் ஹொப் (hip hop) போன்ற இசை முறைகளிலும் இவரது சுவட்டைப் பார்க்கமுடியும்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.