From Wikipedia, the free encyclopedia
சூரத்துல் ஹுமசா (அரபு மொழி: الهمزة; மொ. 'புறங்கூறல்'), திருக்குர்ஆனின் 104 வது அத்தியாயம் ஆகும்.[1][2][3]
திருமறையின் சில அத்தியாயங்கள் நபிகளாரின் மக்கா வாழ்க்கையின் போதும், சில அத்தியாயங்கள் மதீனா வாழ்க்கையின் போதும் அருளப்பட்டன. மக்கா வாழ்க்கையின் போது அருளப்பட்டவை ‘மக்கிய்யா’ (மக்காவுடன் தொடர்புடயவை) எனவும், ’மதனிய்யா’ (மதீனாவுடன் தொடர்புடைவை) எனவும் குறிப்பிடப்படும்.
திருக்குர்ஆனின் 104 அத்தியாயமாகத் திகழும் சூரத்துல் ஹுமசா (புறங்கூறல்) மக்கா வாழ்வின் போது அருளப்பட்டதால் இது மக்கிய்யா வகையைச் சார்ந்ததாகும்.[சான்று தேவை]
இல | அரபு | தமிழாக்கம் |
---|---|---|
بِسْمِ اللّهِ الرَّحْمـَنِ الرَّحِيم | அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்) | |
۞104:1. | وَيْلٌ لِّكُلِّ هُمَزَةٍ لُّمَزَةٍ | குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். |
۞104:2. | الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ | (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். |
۞104:3. | يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ | நிச்சயமாகத், தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச் செய்யுமென்று அவன் எண்ணுகிறான். |
۞104:4. | كَلَّا ۖ لَيُنبَذَنَّ فِي الْحُطَمَةِ | அப்படியல்ல, நிச்சயமாக அவன் ஹுதமாவில் எறியப்படுவான். |
۞104:5. | وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ | ஹுதமா என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? |
۞104:6. | نَارُ اللَّهِ الْمُوقَدَةُ | அது எரிந்து கொண்டிருக்கும் அல்லாஹ்வின் நெருப்பாகும். |
۞104:7. | الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ | அது (உடலில் பட்டதும்) இருதயங்களில் பாயும். |
۞104:8. | إِنَّهَا عَلَيْهِم مُّؤْصَدَةٌ | நிச்சயமாக அது அவர்களைச் சூழ்ந்து மூட்டப்படும். |
۞104:9. | فِي عَمَدٍ مُّمَدَّدَةٍ | நீண்ட கம்பங்களில் (அவர்கள் கட்டப்பட்டவர்களாக). |
Seamless Wikipedia browsing. On steroids.