சூரஜ்பூர் மாவட்டம்
சத்தீசுகரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
சூரஜ்பூர் மாவட்டம் (Surajpur District) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தின் 33 மாவட்டங்களில் ஒன்றாகும். சர்குஜா கோட்டத்தில் உள்ள ஆறு மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். 1 சனவரி 2012-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் சூரஜ்பூர் ஆகும். சத்தீஸ்கர் மாநிலத் தலைநகர் ராய்ப்பூரிலிருந்து வடக்கே 256 தொலைவில் சூரஜ்பூர் நகரம் அமைந்துள்ளது.
சூரஜ்பூர் | |
---|---|
![]() | |
நாடு | இந்தியா |
பகுதி | மத்திய இந்தியா |
மாநிலம் | சத்தீசுகர் |
பகுதி | சர்குஜா |
தலைமையிடம் | சூரஜ்பூர் |
வட்டங்கள் | 6 |
அரசு | |
• மாவட்ட ஆட்சியர் | திருமதி எஃபத் ஆரா, இ.ஆ.ப |
• காவல் கண்காணிப்பாளர் | ஸ்ரீ ராமகிருஷ்ண சாஹு , இ.கா.ப |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,786.68 km2 (1,075.94 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 7,89,043 |
• அடர்த்தி | 283/km2 (730/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | |
தொலைபேசி | +91 |
வாகனப் பதிவு | CG-29 |
இணையதளம் | surajpur |
தமோர் பிங்களா காட்டுயிர் காப்பகம் இம்மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா இடமாகும். தேசிய நெடுஞ்சாலை எண் 43 இம்மாவட்டத்தின் வழியாக செல்கிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் அதிக எழுத்தறிவு கொண்ட மாவட்டங்களில் முதல் இடத்தில் சூரஜ்பூர் மாவட்டம் உள்ளது.
மாவட்ட எல்லைகள்
இம்மாவட்டத்தின் வடகிழக்கில் பலராம்பூர் மாவட்டமும், வடமேற்கில் மத்தியப் பிரதேசம் மாநில சிங்கரௌலி மாவட்டமும் , கிழக்கில் சர்குஜா மாவட்டமும், தெற்கில் கோர்பா மாவட்டமும் மற்றும் மேற்கில் கோரியா மாவட்டமும் ,மனேந்திரகர்-சிர்மிரி-பாரத்பூர் மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 6,60,280 ஆக உள்ளது. [5] அதில் ஆண்கள் 53 விழுக்காடாகவும் மற்றும் பெண்கள் 47 விழுக்காடாகவும் உள்ளனர். சூரஜ்பூர் மாவட்டத்தின் படிப்பறிவு, தேசிய சராசரி படிப்பறிவான 59.5%-ஐ விட கூடுதலாக, 89 விழுக்காடாக உள்ளது. ஆண்களின் படிப்பறிவு 90% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 88% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை, மொத்த மக்கள்தொகையில் 16 விழுக்காடாக உள்ளது.
மாவட்ட நிர்வாகம்
சூரஜ்பூர் மாவட்டம் பிரதாப்பூர், ஒடகி, பையாத்தான், இராமானுஜ்நகர், பிரேம் நகர் மற்றும் சூரஜ்பூர் என ஆறு வருவாய் வட்டங்களை கொண்டது.
பார்க்க வேண்டிய இடங்கள்
சூரஜ் மாவட்டத்தில் உள்ள தமோர் பிங்களா காட்டுயிர் காப்பகம் , தேவ்கர், ராம்கரில் உள்ள சீதாகுளம், சீதா பெங்குரா குகைகள், காளிதாஸ் மேகதூதம், குடர்கரில் உள்ள பாகேஸ்வரி தேவி கோயில், பையாத்தானில் உள்ள படால் பைரவர் கோயில், பிரேம்நகரில் உள்ள மகேஸ்வரி கோயில் ஆகும்.
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.